டயரும் , பெரியவரும்...

| September 18, 2009 | |
தேய்ந்து போன டயரும் முதியவரும் ஏதேச்சையாக சந்தித்து கொண்டபோது நடந்த உரையாடல்

டயர்: என்னங்க பெரியவரே ரொம்ப நடக்க முடியாம நடந்து வர்றீங்க..

பெரியவர்: வயசாயியிடுச்சேப்பா!!

டயர் :வாஸ்தவம்தான் வயசாயிய்டுச்சுன்னா வீட்லயே இருக்கலாமே!!

பெரியவர் : இருக்கலாம்தான் ஆனா பெத்த புள்ளைங்களும் துரத்திவிட்டுட்டாங்களே!!

டயர் : அப்பிடியா சங்கதி! அடப்பாவமே இப்படியெல்லாம் கூட நடக்குதா?

பெரியவர் : அட நீயென்னப்பா உலகம் புரியாதவனா இருக்க கடந்த 25 வருடங்களா வளர்த்து ஆளாக்குன பெத்தவங்களையெல்லாம் நட்ட நடுவுல வெட்டி விட்டுடுறாங்க..

டயர் : அடப்பாவமே !

பெரியவர் :இன்னும் கேள் சிலர் என்னைய மாதிரி ரோட்டுக்கு விடப்படுகிறார்கள்,சிலர் முதியோர் இல்லத்துக்கு விடப்படுகிறார்கள்.

டயர் : ஏன்?

பெரியவர் : நீ எப்படி ஓடி ஓடி தேய்ஞ்சவுடனே கழட்டிவிடப்படுகிறாய் அதுமாதிரிதான்..

டயர் : ஆனாலும் நான் திரும்ப வல்கனைசிங் பயன் படுத்தப்பட்டு உபயோகமாயிருக்கேனே!!

பெரியவர் : ம்ம் எங்களுக்கும் வல்கனைசிங்மாதிரி திரும்ப புத்துணர்வு கொடுத்து உழைக்கும் தெம்பு கடவுள் கொடுத்துருந்தா ஒருவேளை எங்களை வீட்டோட வச்சுருந்துருப்பாங்களோ!!தெரியலை...

டயர் : ஆமாப்பா அதுமாதிரி இருந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்துருக்கும் நீயும் சாகுற வரைக்கும் உன்னோட உழைப்பிலே சாப்பிட்டு கடைசி காலத்துல நிம்மதியா போய்ச்சேர்ந்திருப்ப..

பெரியவர் : ஆமாப்பா ஆமா..ஆனா என்ன பண்றது எங்களுக்கு அதுமாதிரி வாய்ப்பு கிடைக்கலை.பெத்த பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலமைக்கு வரசெய்ததுக்கு கடைசியில பிச்சையெடுக்க வச்சுடுறாங்களே..

டயர் : சரிசரி அதுமாதிரி நடக்குதுன்னு கடவுளுக்கு தெரியாமயா இருக்கும் ? உங்களை மாதிரி நடுத்தெருவில் விடப்பட்பவர்களை உடனே தன்னோட அழைச்சுக்கிடலாமே!! ஏய் கடவுளே உனக்கு கேக்கலியா இந்த பெரியவரின் குரல்?

பெரியவர் : அட விடுப்பா கடந்த நாலு மாசமா பெத்த பிள்ளைங்க நாலு பேரோட வீட்டுக்கும் இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்ன்னு மாறி மாறி நடந்து நடந்து என் கால் ரேகையே அழிஞ்சுபோச்சு...

டயர் : ஏன்?

பெரியவர் : நீ எப்படி தெய்ஞ்சவுடனே வண்டியோட நாலு சக்கரத்துக்கு எந்த பக்கம் வேணும்னாலும் மாட்டுற மாதிரி அலைக்கழிக்கப்படுறியோ அது மாதிரிதான் என்னையும் அலைக்கழிச்சாங்க இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்ன்னு கடைசியில குப்பைத்தொட்டியில போடுற குப்பை மாதிரி என்னையும் தூக்கி போட்டுட்டாங்க!!

டயர் : ப்ச்...சரி இவங்கள மாதிரி ஆளுகளை சமூகம் தண்டிக்காதா?

பெரியவர் : எல்லாருமே அப்படித்தான இருக்காங்க யாரும் நல்லவங்க இல்லியே எங்கோ ஒரு சில நல்லவர்கள் இருக்காங்கன்றதும் மறுக்குறதுக்கு இல்லை , அவங்க எல்லம் வரம் வாங்கிட்டு வந்தவங்களா இருக்கும்,நாங்க எல்லாம் சாபம் வாங்கிட்டு வந்தவங்களா இருப்போம்...

டயர் : அப்போ இவங்களுக்கு தண்டணையே கிடையாதா?

பெரியவர் : ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.

டயர் : இதை ஏன் அவங்க நினைச்சு பாக்குறது இல்லை.

பெரியவர் : சுயநலம்

டயர் : சரியா சொன்னீங்க வினை விதைச்சவன் வினையறுப்பான், உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சே ஆகணும்.. இதை உணர்ந்தால் மட்டுமே தங்களை போன்ற முதியோர்கள் கடைசி காலத்தை நிம்மதியா கழிக்க முடியும்.

பெரியவர் : பார்க்கலாம் நடக்குதான்னு.......

*****************************சந்திப்பு நிறைவு பெற்றது************************

Post Comment

66 comments:

Trackback by gayathri September 18, 2009 at 4:44 PM said...

பெரியவர் : ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.

sariya sonnega

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 18, 2009 at 4:47 PM said...

நீண்ட நாளைக்கு அப்புறமான பதிவு..

Trackback by vasu balaji September 18, 2009 at 4:59 PM said...

வல்கனைசிங் பண்றதுக்கும் பெருசுதான் சேத்து வச்சிருக்கணும். நாலு வீலும் அடிச்சிக்கும் நீ பண்ணு நீ பண்ணுன்னு. வலிக்க வலிக்க சிந்தனை. சபாசு.

Trackback by ஈரோடு கதிர் September 18, 2009 at 5:28 PM said...

//வல்கனைசிங்மாதிரி//

ரீட்ரேடிங்னு சொல்வாய்ங்க

அருமையான ஒப்பிடல் வசந்த்

ஆனால் மனதெல்லாம் ஒரு வலி

Trackback by தீப்பெட்டி September 18, 2009 at 5:31 PM said...

நல்ல சந்திப்பு..

நம்ம மக்கள் இன்னும் திருந்துறதா தெரியலயே..

Trackback by க.பாலாசி September 18, 2009 at 5:33 PM said...

//ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.//

கண்டிப்பாக இதுபோன்ற பாவச்செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளுக்கும் அதே நிலைமைதான்...

நல்ல பகிர்வு அன்பரே...

உங்களோட hot spot ம் நல்லாருக்கு...கேபிள் சங்கருக்கு எதிராவா...ம் நடத்துங்க...

Trackback by Unknown September 18, 2009 at 5:41 PM said...

நல்ல விதமான இடுக்கை.

வினைத்த விதைத்த அவனுக்காவது இது நடவாமல் இருக்கட்டும்.

Trackback by ராமலக்ஷ்மி September 18, 2009 at 5:49 PM said...

:(!

நெகிழ்ச்சி! இந்த நிலை மாறுமா?

Trackback by ஹேமா September 18, 2009 at 5:56 PM said...

எப்பவும்போல வலியோடு நகைச்சுவை.பெற்றவர்களின் நிலைமை !

இப்போ 3 நாளா இதுதான் யோசிச்சிருக்கீங்க போல.

Trackback by தேவன் மாயம் September 18, 2009 at 6:29 PM said...

பெரியவர் : ம்ம் எங்களுக்கும் வல்கனைசிங்மாதிரி திரும்ப புத்துணர்வு கொடுத்து உழைக்கும் தெம்பு கடவுள் கொடுத்துருந்தா ஒருவேளை எங்களை வீட்டோட வச்சுருந்துருப்பாங்களோ!!தெரியலை...
///

தீயாய் சுடும் உண்மை!

Trackback by தேவன் மாயம் September 18, 2009 at 6:29 PM said...

டயரும் பெரியவரும்!!!- ஆச்சரியமான சந்திப்பு!!

Trackback by தேவன் மாயம் September 18, 2009 at 6:30 PM said...

போடவேண்டியவை போட்டாச்சு!!

Trackback by தேவன் மாயம் September 18, 2009 at 6:31 PM said...

வசந்தின் மூளைக்கு ஒரு ஷொட்டு!!

Trackback by வினோத் கெளதம் September 18, 2009 at 6:57 PM said...

வழக்கம் போல் வித்தியாசமான சிந்திக்க வேண்டிய பதிவு..

Trackback by தமிழ் அமுதன் September 18, 2009 at 7:17 PM said...

நல்ல பதிவு வசந்த் ...!

Trackback by கண்மணி/kanmani September 18, 2009 at 7:18 PM said...

ரொம்பத்தான் சிந்திக்கிறீங்க...நடத்துங்க

Trackback by ஜெட்லி... September 18, 2009 at 7:39 PM said...

எப்படி இப்படி....

Trackback by சுசி September 18, 2009 at 8:19 PM said...

//எங்கோ ஒரு சில நல்லவர்கள் இருக்காங்கன்றதும் மறுக்குறதுக்கு இல்லை , அவங்க எல்லம் வரம் வாங்கிட்டு வந்தவங்களா இருக்கும்,நாங்க எல்லாம் சாபம் வாங்கிட்டு வந்தவங்களா இருப்போம்...//

மறுக்க முடியாத உண்மை.. அந்த நல்லவர்கள்ள நீங்களும் ஒருவரா இருப்பீங்க..

//அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.//

சாட்டையடி..

Trackback by Porkodi (பொற்கொடி) September 18, 2009 at 9:01 PM said...

அழகா எழுதி இருக்கீங்க வஸந்த்.. ஆனா என்னோட எண்ணம் என்னனா, வயசு இருக்கும் போது நல்லா ஓடி உழைச்சு பிள்ளைகளோட எதிர்காலத்துக்கு உதவலாம். கூடவே நமக்குனு காசும் சேத்துக்கணும். பிள்ளைகள் வளர்ந்து பெற்றவரை வைத்துக் கொள்ள முடிந்தால் சந்தோஷம். இல்லையென்றால் பெற்றோர் ஒரு நல்ல இல்லத்தில் சேர்ந்து அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள வயதானவர்களிடம் பிடித்ததே அதான். எவ்வளவு தள்ளாடும் வயதிலும், அழகா ட்ரெஸ் செய்து கொண்டு நன்றாக ஊரை சுற்றி அனுபவிக்கிறார்கள்.

மகளோ/மகனோ பெற்றோரை தன்னுடன் வைத்து கொள்ள முடியாமல் போக எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன, அதற்காக, அவர்களுக்கு பாசமில்லை என்றோ, அவர்கள் பிள்ளைகள் வளரும் போது தெரியுமென்றோ சொல்ல தேவையில்லையே.. இதென்ன பிஸினஸா, நான் உன்னோட சின்ன வயசுல பாத்துக்கிட்டேன், இப்போ நீ என்னை பாத்துக்கோனு சொல்ல.. எல்லோருக்கும் வாழ்கை ஒன்று தான், அதை முடிந்த வரை இயலாமை, துக்கம் எல்லாம் அண்டாம வாழ்ந்து பாக்கணுமே ஒழிய, எதோ வாழ்வதே பெரிய பாவம் மாதிரி இருக்க கூடாது.

அதுக்காக எல்லோருமே முதியோர் இல்லத்துல இருக்கணும்னு சொல்லல.. (முதல்ல அந்த பேரே தப்பு, நல்ல அழகா "இளமை ஊஞ்சலாடும் ரிஸார்ட்"னு வெக்கணும்.) பிள்ளைகளோட சந்தோஷமா இருக்கு முடியும்னு அமையறவங்க அங்க இருக்கட்ட்டும், இல்லாதவங்க, தனியே இருக்கட்டும். ஒரே வீட்டில் பொருமிக் கொண்டு இருப்பதை விட இது மேலே.

1. வயதானாலும் தனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குனு பெரியவங்க நம்பணும்.
2. எப்போதும் கையில் தன்னுடைய வாழ்வை நல்ல படியாக கழிக்க காசை வைத்துக் கொண்டு தான் மற்ற காரியம் எல்லாம்.
3. மருமகள்/மருமகனுக்கு பிடிக்கவில்லை எனில், அதை சொல்லி பச்சாதாபம் பட்டு கொண்டிராமல், அடுத்த வேலையை பார்க்க போய் கொண்டே இருக்க வேண்டும். என்ன சொல்றீங்க?

Trackback by கலகலப்ரியா September 18, 2009 at 9:11 PM said...

//
பெரியவர் : அட நீயென்னப்பா உலகம் புரியாதவனா இருக்க //
அதேதான் பெருசு..

Trackback by Unknown September 18, 2009 at 9:49 PM said...

வசந்த்.. அப்பா அம்மாவ.. நல்லா கவனிச்சிக்கற புளளைகளும் இருக்காங்க(eventhough parents do their voilence towards their chldren)

anyway நல்ல பதிவு.. :)

Trackback by Beski September 18, 2009 at 10:45 PM said...

நல்ல சிந்தனை, அருமையான ஆக்கம்.
இன்றைய இளைஞர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

Trackback by கவிக்கிழவன் September 18, 2009 at 10:51 PM said...

சரியா சொன்னீங்க
வினை விதைச்சவன் வினையறுப்பான்
Short and Sweet

Trackback by ச.செந்தில்வேலன் / S.Senthilvelan September 19, 2009 at 12:49 AM said...

வசந்த் அருமையான பதிவுங்க. ஒரு கசப்பான உண்மையை டயர் மற்றும் பெரியவர் மூலமாகக் கூறியது பாராட்டத்தக்கது.

Trackback by யாசவி September 19, 2009 at 6:28 AM said...

nice and set thinking

also some areas accept with porkodi

Trackback by கலையரசன் September 19, 2009 at 9:07 AM said...

பயங்கர ஃபீலிங்ஸ் பதிவுகளா போடுற.. என்னாச்சி டம்ரீரீரீ?

Trackback by Unknown September 19, 2009 at 9:18 AM said...

சிந்திக்க வைக்கும் பதிவு வசந்த்...
எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களுக்கு மட்டும் யோசிக்கத் தோன்றுதோ தெரியல்ல...

Trackback by S.A. நவாஸுதீன் September 19, 2009 at 1:06 PM said...

வழக்கம்போல் சிந்திக்கத் தூண்டும் நல்ல இடுகை வசந்த்.

Trackback by சிங்கக்குட்டி September 19, 2009 at 7:18 PM said...

//ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது?//

உண்மை வசந்த் உண்மை..அருமையான பதிவு :-))

Trackback by பழமைபேசி September 19, 2009 at 7:37 PM said...
This comment has been removed by the author.
Trackback by பழமைபேசி September 19, 2009 at 7:38 PM said...

உண்மை சுடுதுங்க... டிச ஆறுக்குக் காத்திருக்கேன்... ஊர்ல இருக்குற என்னோட பெற்றோரைப் பார்க்கத்தான்!

Trackback by அன்புடன் அருணா September 19, 2009 at 8:23 PM said...

எப்பவும் போல வித்தியாசமான சிந்தனை.

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy September 20, 2009 at 1:47 AM said...

//சரியா சொன்னீங்க வினை விதைச்சவன் வினையறுப்பான், உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சே ஆகணும்//

Well said.

Trackback by Unknown September 20, 2009 at 4:03 AM said...

நல்ல பதிவு வசந்த்! வாழ்த்துக்கள்!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:48 AM said...

//gayathri said...
பெரியவர் : ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.

sariya sonnega//

thanks gayu

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:48 AM said...

//யோ வாய்ஸ் (யோகா) said...
நீண்ட நாளைக்கு அப்புறமான பதிவு..//

நன்றி யோகா

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:49 AM said...

// வானம்பாடிகள் said...
வல்கனைசிங் பண்றதுக்கும் பெருசுதான் சேத்து வச்சிருக்கணும். நாலு வீலும் அடிச்சிக்கும் நீ பண்ணு நீ பண்ணுன்னு. வலிக்க வலிக்க சிந்தனை. சபாசு.//

நன்றி பாலா சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:50 AM said...

//கதிர் - ஈரோடு said...
//வல்கனைசிங்மாதிரி//

ரீட்ரேடிங்னு சொல்வாய்ங்க

அருமையான ஒப்பிடல் வசந்த்

ஆனால் மனதெல்லாம் ஒரு வலி//

நன்றி கதிர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:50 AM said...

//தீப்பெட்டி said...
நல்ல சந்திப்பு..

நம்ம மக்கள் இன்னும் திருந்துறதா தெரியலயே..//

திருந்துவாங்க என்ற நம்பிக்கையிருக்கிறது

நன்றி கணேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:54 AM said...

//க.பாலாஜி said...
//ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.//

கண்டிப்பாக இதுபோன்ற பாவச்செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளுக்கும் அதே நிலைமைதான்...

நல்ல பகிர்வு அன்பரே...

உங்களோட hot spot ம் நல்லாருக்கு...கேபிள் சங்கருக்கு எதிராவா...ம் நடத்துங்க...//

அட நீங்க வேற அப்படியெல்லாம் இல்லீங்கோ..நன்றி பாலாஜி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:55 AM said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல விதமான இடுக்கை.

வினைத்த விதைத்த அவனுக்காவது இது நடவாமல் இருக்கட்டும்.//

நன்றி ஜமால் அண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:55 AM said...

//ராமலக்ஷ்மி said...
:(!

நெகிழ்ச்சி! இந்த நிலை மாறுமா?//

நன்றிங்க சகோதரி

மாறும் மாறணும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:56 AM said...

//ஹேமா said...
எப்பவும்போல வலியோடு நகைச்சுவை.பெற்றவர்களின் நிலைமை !

இப்போ 3 நாளா இதுதான் யோசிச்சிருக்கீங்க போல.//

இல்லை ஹேமா கொஞ்சம் வேலை நெருக்கடிகள் அதான்..

நன்றி ஹேமா

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 11:57 AM said...

// தேவன் மாயம் said...
வசந்தின் மூளைக்கு ஒரு ஷொட்டு!!//

நன்றி தேவா சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:00 PM said...

//வினோத்கெளதம் said...
வழக்கம் போல் வித்தியாசமான சிந்திக்க வேண்டிய பதிவு..//

நன்றி வினோத்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:01 PM said...

//ஜீவன் said...
நல்ல பதிவு வசந்த் ...!//

நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:01 PM said...

//கண்மணி said...
ரொம்பத்தான் சிந்திக்கிறீங்க...நடத்துங்க//

நன்றிங்க மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:02 PM said...

// ஜெட்லி said...
எப்படி இப்படி....//

நன்றி ஜெட்லி சரண்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:02 PM said...

//சுசி said...
//எங்கோ ஒரு சில நல்லவர்கள் இருக்காங்கன்றதும் மறுக்குறதுக்கு இல்லை , அவங்க எல்லம் வரம் வாங்கிட்டு வந்தவங்களா இருக்கும்,நாங்க எல்லாம் சாபம் வாங்கிட்டு வந்தவங்களா இருப்போம்...//

மறுக்க முடியாத உண்மை.. அந்த நல்லவர்கள்ள நீங்களும் ஒருவரா இருப்பீங்க..

//அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.//

சாட்டையடி..//

நன்றி சுசி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:14 PM said...

//Porkodi (பொற்கொடி) said...
அழகா எழுதி இருக்கீங்க வஸந்த்.. ஆனா என்னோட எண்ணம் என்னனா, வயசு இருக்கும் போது நல்லா ஓடி உழைச்சு பிள்ளைகளோட எதிர்காலத்துக்கு உதவலாம். கூடவே நமக்குனு காசும் சேத்துக்கணும். பிள்ளைகள் வளர்ந்து பெற்றவரை வைத்துக் கொள்ள முடிந்தால் சந்தோஷம். இல்லையென்றால் பெற்றோர் ஒரு நல்ல இல்லத்தில் சேர்ந்து அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள வயதானவர்களிடம் பிடித்ததே அதான். எவ்வளவு தள்ளாடும் வயதிலும், அழகா ட்ரெஸ் செய்து கொண்டு நன்றாக ஊரை சுற்றி அனுபவிக்கிறார்கள்.

மகளோ/மகனோ பெற்றோரை தன்னுடன் வைத்து கொள்ள முடியாமல் போக எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன, அதற்காக, அவர்களுக்கு பாசமில்லை என்றோ, அவர்கள் பிள்ளைகள் வளரும் போது தெரியுமென்றோ சொல்ல தேவையில்லையே.. இதென்ன பிஸினஸா, நான் உன்னோட சின்ன வயசுல பாத்துக்கிட்டேன், இப்போ நீ என்னை பாத்துக்கோனு சொல்ல.. எல்லோருக்கும் வாழ்கை ஒன்று தான், அதை முடிந்த வரை இயலாமை, துக்கம் எல்லாம் அண்டாம வாழ்ந்து பாக்கணுமே ஒழிய, எதோ வாழ்வதே பெரிய பாவம் மாதிரி இருக்க கூடாது.

அதுக்காக எல்லோருமே முதியோர் இல்லத்துல இருக்கணும்னு சொல்லல.. (முதல்ல அந்த பேரே தப்பு, நல்ல அழகா "இளமை ஊஞ்சலாடும் ரிஸார்ட்"னு வெக்கணும்.) பிள்ளைகளோட சந்தோஷமா இருக்கு முடியும்னு அமையறவங்க அங்க இருக்கட்ட்டும், இல்லாதவங்க, தனியே இருக்கட்டும். ஒரே வீட்டில் பொருமிக் கொண்டு இருப்பதை விட இது மேலே.

1. வயதானாலும் தனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குனு பெரியவங்க நம்பணும்.
2. எப்போதும் கையில் தன்னுடைய வாழ்வை நல்ல படியாக கழிக்க காசை வைத்துக் கொண்டு தான் மற்ற காரியம் எல்லாம்.
3. மருமகள்/மருமகனுக்கு பிடிக்கவில்லை எனில், அதை சொல்லி பச்சாதாபம் பட்டு கொண்டிராமல், அடுத்த வேலையை பார்க்க போய் கொண்டே இருக்க வேண்டும். என்ன சொல்றீங்க?//

பெத்த தாய் தகப்பன பாத்துகிடுறதை போய் பிஸினஸ்ன்னு சொல்லிப்போட்டீகளே பொற்கொடி

பெத்த பிள்ளைகள வளர்க்குறதுன்றது பெற்றோறின் கடமை அதுபோல பெற்றவர்களை கடைசி காலத்துல கவன்ச்சுக்கிடுறதும் பிள்ளைகளின் கடமை

எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் கடமையோ அதுபோல்

தங்கள் கருத்தில் முதல் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் வாயதான பிறகு தங்களுக்கும் வாழ்க்கை இருக்குன்றது அவங்க உணரனும்..

நீண்ட கருத்துக்கு மிக்க நன்றி பொற்கொடி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:16 PM said...

// கலகலப்ரியா said...
//
பெரியவர் : அட நீயென்னப்பா உலகம் புரியாதவனா இருக்க //
அதேதான் பெருசு..//

யக்கோவ் பாட்டியாகும் போது உங்களையும் கிழவின்னு கூப்பிடும்போது அந்த வழி தெரியும்ங்கோ....

நன்றி ப்ரியா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:16 PM said...

//D.R.Ashok said...
வசந்த்.. அப்பா அம்மாவ.. நல்லா கவனிச்சிக்கற புளளைகளும் இருக்காங்க(eventhough parents do their voilence towards their chldren)

anyway நல்ல பதிவு.. :)//

நன்றி அசோக்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:17 PM said...

//எவனோ ஒருவன் said...
நல்ல சிந்தனை, அருமையான ஆக்கம்.
இன்றைய இளைஞர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.//

கண்டிப்பாக

நன்றி பெஸ்கி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:17 PM said...

//கவிக்கிழவன் said...
சரியா சொன்னீங்க
வினை விதைச்சவன் வினையறுப்பான்
Short and Sweet//

நன்றி யாதவன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:19 PM said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
வசந்த் அருமையான பதிவுங்க. ஒரு கசப்பான உண்மையை டயர் மற்றும் பெரியவர் மூலமாகக் கூறியது பாராட்டத்தக்கது.//

நன்றி செந்தில் அண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:20 PM said...

//யாசவி said...
nice and set thinking

also some areas accept with porkodi//

நன்றி யாசவி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:21 PM said...

//கலையரசன் said...
பயங்கர ஃபீலிங்ஸ் பதிவுகளா போடுற.. என்னாச்சி டம்ரீரீரீ?//

தம்பியா என்ன உறவு முறையெல்லாம் மாத்துற மாதிரி தெரியுது

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:21 PM said...

// சந்ரு said...
சிந்திக்க வைக்கும் பதிவு வசந்த்...
எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களுக்கு மட்டும் யோசிக்கத் தோன்றுதோ தெரியல்ல...//

நன்றி சந்ரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:21 PM said...

// S.A. நவாஸுதீன் said...
வழக்கம்போல் சிந்திக்கத் தூண்டும் நல்ல இடுகை வசந்த்.//

நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:22 PM said...

//சிங்கக்குட்டி said...
//ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது?//

உண்மை வசந்த் உண்மை..அருமையான பதிவு :-))..

நன்றி சிங்க குட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:23 PM said...

// பழமைபேசி said...
உண்மை சுடுதுங்க... டிச ஆறுக்குக் காத்திருக்கேன்... ஊர்ல இருக்குற என்னோட பெற்றோரைப் பார்க்கத்தான்!//

நன்றி பழமை பேசிசார் சீக்கிரம் ஊருக்கு போய் அப்பா அம்மாவ பாருங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:23 PM said...

//அன்புடன் அருணா said...
எப்பவும் போல வித்தியாசமான சிந்தனை.//

நன்றி பிரின்ஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:24 PM said...

//ஜெஸ்வந்தி said...
//சரியா சொன்னீங்க வினை விதைச்சவன் வினையறுப்பான், உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சே ஆகணும்//

Well said.//

நன்றி ஜெஸ்வந்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2009 at 12:24 PM said...

// Thamarai selvi said...
நல்ல பதிவு வசந்த்! வாழ்த்துக்கள்!!//

நன்றி தாமரை மேடம்

Trackback by யாரோ ஒருவர் September 20, 2009 at 6:40 PM said...

வரவேற்க வேணடியது,முதியோர்களை அரவணைக்க வேண்டியது நம் கடமை.

Anonymous — September 21, 2009 at 7:22 AM said...

அர்த்தமுள்ள வலி ஆழ்மனதில்.....