தேவதையின் வரங்கள்.....

| September 9, 2009 | |
எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?
எங்கிட்ட இந்த தேவதை வந்த பொழுது நான் கேட்ட வரங்கள்..

*****************************


லண்டன் போகணும்ன்னு கேட்பேன்....

**************************************************************************************


ஒரு வருசம் என்னோட கல்லூரி வாழ்க்கை திரும்ப வாழணும்ன்னு கேட்பேன்
*************************************************************************************


எல்லா மக்களுக்கும் குடிக்க உலகம் உள்ளவரை இலவசமா குடிநீர் கிடைக்கணும்ன்னு கேட்பேன்...

***********************************************************************************

இறந்து போன தங்கை மீண்டு வர கேட்பேன்

**************************************************************************************


ஜாதியில்லாத தமிழ்நாடு கேட்பேன்

************************************************************************************


உலக மக்கள் எல்லார்கிட்டயும் சம வசதி வாய்ப்பு கிடைக்கணும்ன்னு கேட்பேன்...

*************************************************************************************

எஸ்.பி.பால சுப்ரமணியம் குரல் வேணுன்னு கேட்பேன்

*************************************************************************************


அப்துல் கலாம் மாதிரி ஒரு நாளாவது வாழும் வாய்ப்பு கேட்பேன்...

***********************************************************************************

என்னோட அம்மா அப்பா எப்பவும் என்கூடவே இருக்கணும்ம்னு கேட்பேன்

***********************************************************************************

பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....

***********************************************************************************

இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....

தொடருங்கள் நண்பர்களே

Post Comment

44 comments:

Trackback by பழமைபேசி September 9, 2009 at 1:39 PM said...

4ம் பத்தும்... மனசை உருக்குது!

//கேட்ப்பேன்...//

கேட்பேன்.

Trackback by S.A. நவாஸுதீன் September 9, 2009 at 1:54 PM said...

உணர்ச்சிகரமான வரங்கள் வசந்த். பதினொன்னாவதா வசந்த் மூளை வேனும்னு தேவதை கேட்டு வாங்கிட்டுப் போகும்.

எங்கிட்ட அனுப்பி இருக்கீங்களா? வரட்டும் வரட்டும்.

ரொம்ப நன்றி வசந்த்

Trackback by S.A. நவாஸுதீன் September 9, 2009 at 2:05 PM said...

ஜாதியில்லாத தமிழ்நாடு கேட்ப்பேன்

**********************

இதுல தேவதையே குழம்பிப் போய் எந்த ஜாதின்னு கேட்டாலும் கேக்கும். அவ்ளோ இருக்கே!!

Trackback by ஈரோடு கதிர் September 9, 2009 at 2:20 PM said...

//எல்லா மக்களுக்கும் குடிக்க உலகம் உள்ளவரை இலவசமா குடிநீர் கிடைக்கணும்ன்னு கேட்ப்பேன்...//

வசந்த் வாழ்க

Trackback by SUFFIX September 9, 2009 at 2:23 PM said...

//பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....//

அனைத்தும் அருமை, உங்களது இனியவள் உங்களைப் போல் இனிமையானவராக அமைந்திட வாழ்த்துக்களும் பிராத்தணைளும் வஸ்ந்த்!!

Trackback by ஹேமா September 9, 2009 at 2:36 PM said...

அச்சோ....மாட்டி விடன்னே இருக்கிங்களே வசந்த்.பத்து வரமா !சரி கேட்டுப் பாக்கலாம் உங்க புண்ணியத்தில.

உங்க சில ஆசைகள் பேராசையாவும்,தேவையான ஆசையாவும்,கை விட்டுப் போன ஆசையாவும் இருக்கு.என்றாலும் எல்லா ஆசைகளும் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள்.நன்றியும் கூட தொடருக்காக.

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) September 9, 2009 at 2:43 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Trackback by க.பாலாசி September 9, 2009 at 2:55 PM said...

//பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....//

தேவையான ஆசைதான்....

எல்லா ஆசைகளுமே நியாயமான ஆசைதான்....அந்த தேவதை வரம் கொடுக்கட்டும்....

Trackback by கார்ல்ஸ்பெர்க் September 9, 2009 at 3:10 PM said...

//ஜாதியில்லாத தமிழ்நாடு கேட்ப்பேன்//

- ஜாதியில்லா சங்கத் தலைவர் வசந்த் வாழ்க!!!

Trackback by இராகவன் நைஜிரியா September 9, 2009 at 3:22 PM said...

ஆசைகள் பலவிதம். உங்கள் ஆசைகள் அனைத்தும் நல்விதம்.

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy September 9, 2009 at 3:36 PM said...

இந்தத் தேவதையின் வலிமையைப் பொறுத்திருந்து பார்ப்போம். தேவதையைப் பயப படுத்திற மாதிரி உங்கள் ஆசைகள் இருக்கே!

Trackback by தமிழ் அமுதன் September 9, 2009 at 3:50 PM said...

//எல்லா மக்களுக்கும் குடிக்க உலகம் உள்ளவரை இலவசமா குடிநீர் கிடைக்கணும்ன்னு கேட்ப்பேன்...//;;))

Trackback by இளைய கவி September 9, 2009 at 3:55 PM said...

எங்க வீட்டுக்கு தேவதை வரட்டும் நான் பாத்துகிறேன்

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 9, 2009 at 5:00 PM said...

ஒரு வருசம் என்னோட கல்லூரி வாழ்க்கை திரும்ப வாழணும்ன்னு கேட்பேன்.//

நான் இதை தான் முதலில் கேட்பேன்

Trackback by ஜெட்லி... September 9, 2009 at 5:07 PM said...

//ஒரு வருசம் என்னோட கல்லூரி வாழ்க்கை திரும்ப வாழணும்ன்னு கேட்பேன்.//

நான் இதை தான் முதலில் கேட்பேன்

//

repeat

Trackback by vasu balaji September 9, 2009 at 5:07 PM said...

என்னதான் தேவதைன்னாலும் இப்படி டெர்ரரா கேட்டா எப்புடி வசந்த். அப்துல் கலாம் மாதிரியும் இருக்கணும், அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற மனைவியும் வேணும்னா என்னா பண்ணும் அது? நாலும் ஒன்பதும் கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.

Trackback by தேவன் மாயம் September 9, 2009 at 5:09 PM said...

4 & 10 வரங்கள் நெகிழ்வானவை- என் ஓட்டும் அவற்றிற்கே!

Trackback by *இயற்கை ராஜி* September 9, 2009 at 5:15 PM said...

ம்ம்.. நல்லாதான் யோசிக்கறீங்க‌

Trackback by முனைவர் இரா.குணசீலன் September 9, 2009 at 5:39 PM said...

/எல்லா மக்களுக்கும் குடிக்க உலகம் உள்ளவரை இலவசமா குடிநீர் கிடைக்கணும்ன்னு கேட்ப்பேன்../

இது உண்மையிலேயே பேராசை வசந்த்!!!!!!

Trackback by ச.செந்தில்வேலன் / S.Senthilvelan September 9, 2009 at 5:54 PM said...

நல்ல ஆசைகள் வசந்த்.. ம்ம்ம்ம்ம்ம்.. என்ன செய்ய?

Trackback by அன்புடன் அருணா September 9, 2009 at 6:01 PM said...

ஆசைப் படுவதற்கு வானமே எல்லை...தேவதையெல்லாம் எதற்கு?....ததாஸ்து...அத்தனையும் பலிக்கட்டும்.!!!

Trackback by pudugaithendral September 9, 2009 at 6:41 PM said...

ஆசைப் படுவதற்கு வானமே எல்லை...தேவதையெல்லாம் எதற்கு?....ததாஸ்து...அத்தனையும் பலிக்கட்டும்.!!!/

கன்னாபின்னா ரிப்பீட்டு

Trackback by வழிப்போக்கன் September 9, 2009 at 6:49 PM said...

எனக்கு 2 வரம் வாழ்க்கைப்பூரா வேணும்....

Trackback by Menaga Sathia September 9, 2009 at 8:08 PM said...

உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும் வசந்த்.என்னையும் அழைத்தற்க்கு நன்றி,விரைவில் தொடர்கிறேன்..

Trackback by சுசி September 9, 2009 at 8:27 PM said...

களுடன் வசந்தா... சில ஆசைகள் நிராசைகள்.

//என்னோட அம்மா அப்பா எப்பவும் என்கூடவே இருக்கணும்ம்னு கேட்ப்பேன்//
//பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....//

இது ரெண்டும் கட்டாயம் நிறைவேறும்.

//இறந்து போன தங்கை மீண்டு வர கேட்ப்பேன்//

தங்கை பிறப்பாள் மகள் வடிவில்.

Trackback by சுசி September 9, 2009 at 8:29 PM said...

அய்யய்யோ சாரி வசந்த். அது ஆசைகளுடன்னு வந்திருக்கணும்...

Trackback by SUMAZLA/சுமஜ்லா September 9, 2009 at 9:23 PM said...

நெகிழ்ச்சி, உணர்ச்சியோடு சமூக அக்கரை கலந்த பதிவு!

பத்தாவது ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்! அது அமைந்து விட்டால், வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தது மாதிரி!

Trackback by Unknown September 9, 2009 at 11:03 PM said...

அத்தனை வரமும் நல்ல வரமேதான் இருந்தாலும்

பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) September 10, 2009 at 12:14 AM said...

எல்லா வரமும் கிடைக்க என் வாழ்த்துக்கள்

Trackback by Unknown September 10, 2009 at 4:53 AM said...

10வது வரம் நடக்கும்போது அழைப்பு அனுப்புங்க வசந்த்!! ஊருக்கு பக்கம் தானே வந்து உங்க தேவதைய பார்த்துட்டு போறேன்..உங்களோட எல்லா ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள்...

Anonymous — September 10, 2009 at 7:59 AM said...

ஒன்பதாவது வரம் உன்னை ஒரு நல்ல மகன் என்று நீருபித்து விட்டது...

இந்த ஒரு வரம் போது நீ மற்ற எல்லா சிறப்பு குணம் வாய்ந்தவன் என்பதை சொல்ல....

வீட்டிற்கு சிறந்த மகனாக இருக்கும் ஒருவர் கண்டிப்பா நாட்டிற்கும் சிறந்த குடிமகனாகத் தான் இருப்பார்...வாழ்த்துக்கள் தேவதை நீ கேட்ட வரம் கொடுக்க....

Anonymous — September 10, 2009 at 8:03 AM said...

அந்த மூன்று பேரிடம் தேவதையை அனுப்பினாய் சரி நவாஸிடம் ஏன் அனுப்பினாய் அந்த ராட்ச்ஸன் அதையும் பேசியே கொன்னுடுமே......

Anonymous — September 10, 2009 at 8:05 AM said...

மற்ற வரங்கள் ஹ்ஹஹஹா பேராசை வசந்த்......எனக்கும் உண்டு இந்த மாதிரி பெரிய ஆசைகள்.....

உன் பேச்சி கா.....

நீ என்னிடம் தேவதையை அனுப்பலை....

Trackback by கலையரசன் September 10, 2009 at 8:32 AM said...

கேப்ப.. கேப்ப..

தேவதை கேனையா இருந்த கேப்ப!

:-))))))

Trackback by ers September 10, 2009 at 10:16 AM said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

உங்கள் படைப்பை பார்க்க

தமிழ்செய்திகளை இணைக்க

உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Trackback by குடந்தை அன்புமணி September 10, 2009 at 11:04 AM said...

சில வரங்கள் நிச்சயம் எல்லாருக்கும் தேவையானதா இருக்கிறது. 4 ஓகே.
10... ம்...தேவதையே... உனக்கு கேட்டிச்சா...

Trackback by குடந்தை அன்புமணி September 10, 2009 at 11:05 AM said...

அட... அடுத்த தொடர் பதிவா... நடத்துங்க...

Trackback by சுந்தர் September 10, 2009 at 11:18 AM said...

நிறைவேற வாழ்த்துக்கள்

Trackback by சத்ரியன் September 10, 2009 at 3:02 PM said...

//அப்துல் கலாம் மாதிரி ஒரு நாளாவது வாழும் வாய்ப்பு கேட்பேன்...//

வசந்த்,

நான் நெனைச்சிருந்தேன். இப்ப நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறதே "அப்துல் கலாம்" வாழ்வு தானென்று. இல்லியா?

இன்னும் கூட ....
கேட்டுக்கிடேயிருங்க சாமி.

Trackback by வால்பையன் September 10, 2009 at 3:19 PM said...

//ஜாதியில்லாத தமிழ்நாடு கேட்பேன்//

கேக்கூறது கேக்குறிங்க!

உலகம் முழுக்க சாதி, மதமில்லாத மக்கள் கேட்கலாமே!

Trackback by சிங்கக்குட்டி September 10, 2009 at 5:01 PM said...

நல்ல முயற்சி வசந்த்.

Trackback by Unknown September 10, 2009 at 6:46 PM said...

புதுமை என்பதற்கு புதிய வார்த்தை

‘வசந்த்’

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 11, 2009 at 1:27 AM said...

உன்னுடைய நாலாவது வரம் முதலில் நடக்கும்படி நான் வரம் கேட்கிறேன்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 11, 2009 at 11:21 AM said...

நன்றி @ பழமைபேசி சார்(மாற்றிவிட்டேன்)

நன்றி @ நவாஸ் (பாத்து நவாஸ் தேவதைய பத்திரமா பாத்துக்கங்க)

நன்றி @ கதிர்

நன்றி @ சஃபி

நன்றி @ ஹேமா

நன்றி @ பாலாஜி

நன்றி @ கார்ல்ஸ்பெர்க்

நன்றி @ ராகவன் சார்

நன்றி @ ஜெஸ்வந்தி

நன்றி @ ஜீவன்

நன்றி @ இளைய கவி

நன்றி @ யோகா

நன்றி @ ஜெட்லி

நன்றி @ பாலாசார்

நன்றி @ தேவாசார்

நன்றி @ இயற்கை

நன்றி @ குணா

நன்றி @ செந்தில் அண்ணா

நன்றி @ பிரின்ஸ் அருணா

நன்றி @ புதுகை தென்றல்

நன்றி @ வழிப்போக்கன்

நன்றி @ மேனகா

நன்றி @ சுசி

நன்றி @ சுமஜ்லா

நன்றி @ சந்ரு

நன்றி @ ஸ்டார்ஜன்

நன்றி @ தாமரைசெல்வி(கண்டிப்பா மெயில் ஐடி ப்ளீஸ்)`

நன்றி @ தமிழரசி

நன்றி @ கலையரசன்(போடா...)

நன்றி @ குடந்தை அன்புமனி

நன்றி @ சுந்தர்

நன்றி @ சத்ரியன்

நன்றி @ வால்(நாம்தான் நிறைய சண்டை போடுறோம்)

நன்றி @ சிங்ககுட்டி

நன்றி @ ஜமால் அண்ணா

நன்றி @ ரமேஷ்(உங்க ப்லாக்ல பின்னூட்ட முடியலை என்னான்னு பாருங்க நண்பா)