வசந்த் (எதிர்) வசந்த்

| August 31, 2009 | |
வசந்த் Vs வசந்த்

மீண்டும் வித்யாசமா(ஆமா நீ எழுதுறதே வேஸ்ட் இதுல வித்யாசம் வேறையான்னு நீங்க சொல்றது கேக்குது)ஒரு சந்திப்பு.

சந்திக்கப்போவது இருவர், ஒருத்தர் கருத்து சொல்றேன்னு கருத்து கந்தசாமியா மாறிட்டு இருக்குற பிரபலமாகாத பதிவர்
பிரியமுடன் வசந்தும் அவரோட நிழல் வசந்தும் காலாற வெளிய நடந்து போயிட்டு இருக்கும்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்...

ப்ரியமுடன் வசந்த்: என்னங்க நிழல் வசந்த் இத்தனை நாளா இல்லாமல் திடீர்ன்னு வெளியுலகைப்பார்க்கணும்ன்னு வந்துருக்கீங்க?

நிழல் வசந்த்: ஆமாப்பா உன்னோட இம்சைதாங்க முடியாமத்தான் கொஞ்சம் வெளியுலகம் பக்கம்...

ப்ரியமுடன் வசந்த்: நான் என்னய்யா இம்சை செஞ்சேன்?

நிழல் வசந்த்: வர வர நீ கருத்து கந்த சாமியா மாறிட்டு வர்ற...அது தாங்க முடியாமத்தான் உங்கிட்ட சில கேள்விகள் கேக்கலாம்ன்னு...

ப்ரியமுடன் வசந்த்:ஆமா சமூகத்துல நடக்குற சில விஷயங்களை எனக்குதெரிஞ்சத சில சொல்லலாமுன்னு...

நிழல் வசந்த்: போதும் நிப்பாட்டிக்கோ.....

ப்ரியமுடன் வசந்த் : ஏன்?

நிழல் வசந்த் : நீ சொல்றத யாரும் கேக்கப்போறாங்களா?

ப்ரியமுடன் வசந்த் : ஏன் கேக்க மாட்டாங்களா?

நிழல் வசந்த் : அம்மா அப்பா மனைவி சொல்றதையே கேக்காதவங்க வெட்டியா ப்லாக் எழுதுற நீ சொல்றதையா கேக்கப்போறாங்க . இதோ பாரு வசந்த் நான் இப்போ கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.

ப்ரியமுடன் வசந்த் : கேளுப்பா..

நிழல் வசந்த் : உன்னோட பதிவுக்குவந்து இதுவரைக்கும் பிரபல பதிவர்கள் தினம் வந்து பின்னூட்டம் போடறாங்களா?

ப்ரியமுடன் வசந்த்:வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா..

நிழல் வசந்த் : இந்த சமாளிப்பு எல்லாம் வேணாம்டி...சரிவுடு நான் கேக்குற சில சமுதாய கேள்விக்காச்சும் பதில் சொல்லு.

ப்ரியமுடன் வசந்த் : சரி ட்ரைப் பண்றேன்

நிழல் வசந்த் : கோவிலுக்கு போற பழக்கம் உண்டா?

ப்ரியமுடன் வசந்த்:ம்ம் உண்டு சாமி கும்பிட இல்லைன்னாலும் சைட்டடிக்கவாவது போறது உண்டு.

நிழல் வசந்த்: விளங்கும்...திருப்பதி,பழநிக்கெல்லாம் போயிருக்கியா?

ப்ரியமுடன் வசந்த்:ம்ம் போயிருக்கேன்.அத்தை பொண்ணு மஹேஷ் கூட ஒருதடவை (தப்பா நினைக்காதப்பா அவங்க அம்மா அப்பாவும் கூட வந்தாங்க)பழநிக்கு போயிருக்கேன்.அப்பறம் நித்யா கூட (இப்பயும் தப்பா நினைக்காதப்பா இது சின்ன அத்தை பொண்ணு ஒண்ணாவது படிக்கிற புள்ளை) அதுக்கு மொட்டையெடுக்க போயிருக்கேன்.

நிழல் வசந்த் : இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு...சரி பழநிக்கு போனியே அங்க அடிவாரத்துல இருந்து படியேறி நடந்து போனியா இல்ல மின்சார மலையேறி மூலமா போனியா?

ப்ரியமுடன் வசந்த்:விஞ்ச்லதாம்பா போனேன்

நிழல் வசந்த் : அந்த பக்கத்தூர் ரேணுகாவப்பாக்க மட்டும் தினமும் ஒருகிலோ மீட்டர் நடந்து போயி பல்ல இளிச்சுட்டு பாத்துட்டு வர்றியே இங்க மட்டும் என்ன இந்த கொஞ்ச தூரம் உன்னால படியேறி போக முடியாதாக்கும்.அதான் அந்த முருகன் அந்த ரேணுகாவ வேறொருத்தனுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டான்.

ப்ரியமுடன் வசந்த் : இப்போ எதுக்கு அவளப்பத்தி பேசுற? கேக்க வந்த கேள்விய மட்டும் கேளு.

நிழல் வசந்த் : மேல முருக கடவுளப்பாக்க முறைப்படி போனியா?

ப்ரியமுடன் வசந்த்: ஆமா தேங்காய்,பழம்,பத்தி,சூடன் எல்லாம் வாங்கி முறைப்படித்தான் போனேன்.

நிழல் வசந்த்: ந்தா பாரு செவுலு திரும்பிடும் நக்கலா?

ப்ரியமுடன் வசந்த் : இல்லப்பா..

நிழல் வசந்த் : கொன்னுடுவேன் உன்னைய ..அங்க கோவிலுக்கு சவுக்கு மரத்துல லைன் கட்டியிருக்குமே அதுல கால் வலிக்க வரிசையில நின்னுட்டு போனியா(அதாம்பா தர்ம தரிசனம்) இல்லை சிறப்புக்கட்டணம் செலுத்தி சீக்கிரம் சாமிய பாத்துட்டு வந்துட்டியா?

ப்ரியமுடன் வசந்த் : ஹேய் யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டுட்ட?

நிழல் வசந்த் : உன்னையத்தாண்டா வென்று....

ப்ரியமுடன் வசந்த் : சரி சரி பொது இடத்துல இது மாதிரி அசிங்கப்படுத்தாத,

நிழல் வசந்த் : அது அந்த பயமிருக்கட்டும்.

ப்ரியமுடன் வசந்த் : காசு குடுத்துதான் போனேன் இப்போ அதுக்கு என்ன?

நிழல் வசந்த்: சரி வெளியூருக்கு நீ போறேன்னு வச்சுக்க அங்க திடீர்ன்னு உனக்கு இயற்க்கை உபாதை வருது என்ன பண்ணுவ?

ப்ரியமுடன் வசந்த் : 1வந்துச்சுன்னா அந்த சுவத்துப்பக்கமா அடிச்சுட்டு வந்துடுவேன்.

நிழல் வசந்த் : நாய் மாதிரின்னு சொல்லு...

ப்ரியமுடன் வசந்த் : இதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா.எல்லாரும் பண்றதத்தேன் நானும் பண்ணேன்.

நிழல் வசந்த் : 2 வந்துச்சுன்னா என்னா பண்ணுவ?

ப்ரியமுடன் வசந்த் : நகராட்சி கட்டண கழிப்பறைக்கு போவேன்.

நிழல் வசந்த்: காசு கொடுத்து கடைமைய கழிச்சுட்டு வந்துடுவ அப்படித்தான.

ப்ரியமுடன் வசந்த் : ஆமா.

நிழல் வசந்த் : அதுக்கும் முருகன காசு குடுத்து கடமையேன்னு கண்டுட்டு வர்றதுக்கும் என்ன வித்யாசம்ன்னு நீயே சொல்லுப்பா கருத்து கந்தசாமி.

ப்ரியமுடன் வசந்த் : அது வந்து அது வந்து ...

நிழல் வசந்த் : நேரமில்லைன்னு சொல்லக்கூடாது 200 கிலோ மீட்டர் தள்ளி வந்து முருகனப்பாக்குற உனக்கு ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி சாமிய பாக்க முடியலைல.நீதான் ரொம்ப யோசிப்பியாமே இதையும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணு . அப்பறம் கருத்து சொல்லு.மீண்டும் சந்திப்போம்...உங்கிட்ட இன்னும் நிறைய கேள்வி கேக்க வேண்டியிருக்கு.இப்போ வர்ட்டா......

Post Comment

40 comments:

Trackback by அ.மு.செய்யது September 1, 2009 at 2:09 AM said...

//அத்தை பொண்ணு மஹேஷ் //

ஓ மஹேஷ்வரி யா ??

வித்தியாசமான முயற்சி தான்..நல்லா இருக்கு வசந்த்.

Trackback by sakthi September 1, 2009 at 3:23 AM said...

ப்ரியமுடன் வசந்த்:ம்ம் உண்டு சாமி கும்பிட இல்லைன்னாலும் சைட்டடிக்கவாவது போறது உண்டு.

உங்க நேர்மையை நான் பாராட்டறேன்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 1, 2009 at 3:34 AM said...

கலக்குற மச்சி. ரூம் போட்டு யோசிப்பியா

Trackback by Unknown September 1, 2009 at 3:51 AM said...

அசத்தலோ அசத்தல் வசந்த்..... எப்படி வசந்த் உங்களால மட்டும் இப்படி....

Anonymous — September 1, 2009 at 3:56 AM said...

//
ப்ரியமுடன் வசந்த்:வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா.//

ஹிஹி

Trackback by kishore September 1, 2009 at 5:06 AM said...

ப்ரியமுடன் வசந்த் .. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
நிழல் வசந்த்... உங்க நக்கல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

Trackback by தேவன் மாயம் September 1, 2009 at 5:11 AM said...

வசந்தும் கணினியும் ஒன்னாக் கலந்து விட்டது. இனி ஒன்னும் பண்ண முடியாது.............. சுப்பர்!!

Trackback by தேவன் மாயம் September 1, 2009 at 5:13 AM said...

ஓட்டும் போட்டாச்சு..

Trackback by ஜெட்லி... September 1, 2009 at 5:19 AM said...

நல்ல கற்பனை ஜி...

Trackback by Unknown September 1, 2009 at 5:50 AM said...

நிழலும் - நிஜமும்


நல்ல முயற்சி வசந்த்

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) September 1, 2009 at 6:28 AM said...

நிழல் நிஜமாகிறது?

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! September 1, 2009 at 7:16 AM said...

//பிரபல பதிவர்கள் தினம் வந்து பின்னூட்டம் போடறாங்களா?//

Is there anyone like that really????????????

Trackback by அத்திரி September 1, 2009 at 7:39 AM said...

//ப்ரியமுடன் வசந்த்:வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா..//

நல்லாவே வைக்கிறீங்க தலையில்--------------------ஐஸ்

Trackback by ஈரோடு கதிர் September 1, 2009 at 8:18 AM said...

ம்ம்ம்.. நிழல் வசந்த் ஆவது உணமை பேசுதே அது போதும்


நண்பா.. அந்தக் கோயில் க்யூ மேட்டர் நறுக்

அருமையா டிகை போடறீங்க... ம்ம்ம்ம் நானெல்லாம் எப்பதான் இது மாதிரி கத்துக்கப்போறனோ

Trackback by கலையரசன் September 1, 2009 at 8:31 AM said...

நல்லாயிருக்கு.. ஆனா.. நல்லாயில்ல!!

ஓட்டாச்சு!!

Trackback by Cable சங்கர் September 1, 2009 at 9:02 AM said...

/வர வர நீ கருத்து கந்த சாமியா மாறிட்டு வர்ற//

:)

Trackback by வழிப்போக்கன் September 1, 2009 at 9:25 AM said...

பாத்து வசந்த் ...
நிழல் வசந்த் உங்க ”எல்லா” தொடர்பையும் புட்டு புட்டு வைக்கப்போறான்..ச்சீ..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
:)))

Anonymous — September 1, 2009 at 11:02 AM said...

நல்லா இருக்கு நிழல் வசந்த்.

Trackback by vasu balaji September 1, 2009 at 11:05 AM said...

ஏற்கனவே கோவிச்சிகிட்டுதான் நான் இங்க வந்து நிக்கிறேன். இங்கயும் என்ன வெச்சி நக்கலடிக்கிறானுவ. கந்தசாமின்னா எல்லா பதிவருக்கும் எளக்காரமா போச்சான்னு சேவல அனுப்பி இருக்கிறாராமா. உசாரு வசந்த். செம பஞ்ச். ஆனா நிழல் பாலாக்கு சந்தேகம். வசந்த் என்னா சொல்றாரு. காசு குடுத்து சாமி பாக்காதங்குறாரா இல்ல டாய்லட் போவாதங்குறாரான்னு. ஹி ஹி

Trackback by லோகு September 1, 2009 at 11:15 AM said...

ரேணுகா, மகேஷ்.. ம்ம்ம் நெறைய உண்மை வெளி வரும் போல..

Trackback by வால்பையன் September 1, 2009 at 11:27 AM said...

//அம்மா அப்பா மனைவி சொல்றதையே கேக்காதவங்க வெட்டியா ப்லாக் எழுதுற நீ சொல்றதையா கேக்கப்போறாங்க . //

இது உங்களுக்கு நீங்களே சொல்லிகிறிங்களா? இல்லை மற்ற கருத்து கந்தசாமிகளுக்கு சொல்றிங்களா!?

Trackback by S.A. நவாஸுதீன் September 1, 2009 at 11:27 AM said...

உனக்குள் ஒருவன் - வசந்த் சும்மா சொல்லக்கூடாது நண்பா. எக்கச்சக்கமா கலக்குறேப்பா

Trackback by S.A. நவாஸுதீன் September 1, 2009 at 11:28 AM said...

உனக்குள் ஒருவன் - வசந்த் சும்மா சொல்லக்கூடாது நண்பா. எக்கச்சக்கமா கன்னாபின்னான்னு கலக்குறேப்பா

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 1, 2009 at 11:48 AM said...

வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா.//

அப்பாடா நம்மளையும் ஒருத்தர் பிரபலம் என்று சொல்லிட்டார்.

எப்படியோ வழமைபோல பதிவு கலக்கல் தலைவா!

Anonymous — September 1, 2009 at 12:22 PM said...

ம்ம்ம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் பழனி முருகனை சுத்தியாச்சா? எல்லா முயற்சியும் நீயே பண்ணிட்டா நான் எல்லாம் இனிமேல் வெறும் கமெண்ட் மட்டும் தான் போடனும் எங்களுக்கும் கொஞ்சம் ஆப்ஷன் விட்டு வை பையா..வசந்த் அந்த ஃபோட்டோல யாரு?

Trackback by சுசி September 1, 2009 at 1:14 PM said...

நிழல் வசந்த் வேண்டாம். ப்ரியமுடன் வசந்த் தான் ரொம்ப நல்லவர்.

Trackback by SUFFIX September 1, 2009 at 1:47 PM said...

ஆமாம்ப்பா வஸ்ந்துக்கு வஸ்ந்த் தான்!! வேறு யாரு இருக்கா.

Trackback by கார்ல்ஸ்பெர்க் September 1, 2009 at 1:53 PM said...

//வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா//


-என்னையும் பிரபலங்கள் லிஸ்ட்'ல் சேர்த்த வசந்த் வாழ்க!!!

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் September 1, 2009 at 3:40 PM said...

நிழல் வசந்த் - கொஞ்சம் ,,,, டேன்ஜரான ஆளுதான்... வானம்பாடிகள் அவர்களுக்கு உள்ள சந்தேகம் தான் எனக்கும் ... !!!

Trackback by Menaga Sathia September 1, 2009 at 3:48 PM said...

யார் அந்த ரேணுகா வசந்த்?
வசந்துக்கு நிகர் வசந்த் தான்.எப்படியோ நம்மையும் ஒரு பிரபல பதிவர் ந்னு சொன்னிங்களே சந்தோஷம்..

Trackback by சிங்கக்குட்டி September 1, 2009 at 3:54 PM said...

பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.

Trackback by க.பாலாசி September 1, 2009 at 4:54 PM said...

//நிழல் வசந்த்: ஆமாப்பா உன்னோட இம்சைதாங்க முடியாமத்தான் கொஞ்சம் வெளியுலகம் பக்கம்...//

அப்டியே உட்ருங்க தலைவா அவராவது தப்பிச்சு போகட்டும்...(ஹி...ஹி)

கொஞ்சம் அனுபவமும் கலந்து வருது....

அந்த கோயில் மேட்டர் என்னவோ சுருக் என்றுதான் இருக்கிறது...

Trackback by ஹேமா September 1, 2009 at 5:40 PM said...

என்ன வசந்த்,நித்திரையே இல்லாம குந்தியிருந்து யோசிப்பீங்களோ.
அசத்தல்.வர வர கருத்து வசந்த் ஆயிட்டே வாறீங்க.

Trackback by யாழினி September 1, 2009 at 7:18 PM said...

உண்மையிலேயே நல்லாயிருக்கு வசந்த். ஆணி அடிச்ச மாதிரி இருக்கு நிழல் வசந்தின் கேள்விகள்!

Trackback by jothi September 1, 2009 at 10:03 PM said...

//மீண்டும் வித்யாசமா//

உண்மையிலேயே வித்தியாசமாதான் இருக்கு வசந்த்

Trackback by கலகலப்ரியா September 1, 2009 at 10:17 PM said...

innum niraiiiiya kelviyaa... raavanaa...

Trackback by துபாய் ராஜா September 1, 2009 at 11:36 PM said...

//நிழல் வசந்த் : அதுக்கும் முருகன காசு குடுத்து கடமையேன்னு கண்டுட்டு வர்றதுக்கும் என்ன வித்யாசம்ன்னு நீயே சொல்லுப்பா கருத்து கந்தசாமி.//

நல்லாத்தான் கேள்வி கேக்குறாரு நிழலு

Trackback by சத்ரியன் September 2, 2009 at 12:54 PM said...

//ப்ரியமுடன் வசந்த் : 1வந்துச்சுன்னா அந்த சுவத்துப்பக்கமா அடிச்சுட்டு வந்துடுவேன்.

நிழல் வசந்த் : நாய் மாதிரின்னு சொல்லு...//

வசந்த்து,

இது கூட நல்லாத்தான் இருக்கு. எதுக்கு எவனையாவது பத்தி மொக்கை போட்டு மூக்க ஒடச்சிக்கனும். நம்மலயே நம்ம திட்டிக்கலாம்...என்ன வேணா ....!

நடத்துங்க..நடத்துங்க..!

நம்மலக்கு தான் இப்பிடி எதும் நித்தியாசமா தோனி தொலையமாட்டேங்குது.

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 3, 2009 at 12:43 AM said...

நன்றி @ அ.மு.செய்யது(தொடர் வருகைக்கு)

நன்றி @ சகோதரி சக்தி

நன்றி @ ரமேஷ்

நன்றி @ சந்ரு

நன்றி @ சின்ன அம்மிணி

நன்றி @ கிஷோர்

நன்றி @ தேவா சார்

நன்றி @ ஜெட்லிஜி

நன்றி @ ஜமால் அண்ணா

நன்றி @ தல சுரேஷ்

நன்றி @ ராஜ்

நன்றி @ அத்திரி(ஐஸ் போதுமா)

நன்றி @ கதிர்

நன்றி @ கலை(எது பிடிக்கலை)

நன்றி @ கேபிள் சங்கர்

நன்றி @ வழிப்போக்கன்

நன்றி @ அண்ணாச்சி

நன்றி @ வானம்பாடிகள்,சரவணன்(கடைசி பத்தி நல்லா படிங்க)

நன்றி @ லோகு

நன்றி @ வால்(எனக்கு தான்)

நன்றி @ நவாஸ்

நன்றி @ யோகா

நன்றி @ தமிழரசி(போட்டொல நாந்தான்)

நன்றி @ சுசி(சரிங்க)

நன்றி @ சஃபி

நன்றி @ கார்ல்ஸ்பெர்க்

நன்றி @ மேனகா(உஷ் ரகசியம்)

நன்றி @ சிங்ககுட்டி

நன்றி @ பாலாஜி

நன்றி @ ஹேமா(உண்மைதான்)

நன்றி @ யாழினி

நன்றி @ கலகல பிரியா

நன்றி @ ராஜா

நன்றி @ சத்ரியன்

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) September 3, 2009 at 9:07 PM said...

நல்ல்லா இருக்கு வசந்த்