மூளை மாற்றம்

| August 29, 2009 | |
ஒரு வித்தியாசமான பதிவை உங்களின் பார்வைக்கு....

என்னோட மூளைய சில பிரபலங்களுக்கு கொண்டு போய் வைத்தால் என்ன செய்து கொண்டிருக்கும் என ஒரு சின்ன கற்ப்பனை....’


முதலாவதாக வருபவர் கலைஞர் கருணாநிதி

மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1. அரசியலில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிடுவதன் முதல் செயலாய் நான் என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்.

2.தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக திரு.ஸ்டாலின் பொறுப்பேற்ப்பார் எனவும் அறிவித்துக்கொள்கிறேன்.

3.தமிழ் கலாச்சாரத்திற்க்கெதிராக நான் புரிந்த இரண்டு மூன்று திருமணங்களுக்காக என்னுடைய மனைவிகளிடமும் தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

4.இதுவரை முறையற்று நான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகள்.ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உயில் எழுதிவைக்கிறேன்.

5.இனியும் , என் இறப்பிற்க்கு பிறகும் என்னுடைய சிலைகள் தமிழ்நாட்டில் வைக்கக்கூடாது என தொண்டர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக திரு,இராமதாஸ்


மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1.தமிழக மக்களே இதுவரை நான் நடத்திவந்த ஜாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை கலைக்கிறேன்...

2.பொதுமக்களுக்கு சேவை செய்வதற்க்கென்று படித்து பெற்ற டாக்டர் பட்டத்தை பயன்படுத்தாமல் இருப்பதால் அதை திரும்ப அளித்துவிடுகிறேன்.

3.என்னுடைய பேரக்குழந்தைகளை தமிழ் பள்ளியில் சேர்த்துவிடுகிறேன்.

4.முக்கியமா என்னுடைய ஜாதிச்சான்றிதழை தீயிட்டு கொளுத்திவிடுகிறேன்.

5.கூட்டணி மாறி மாறி அறிவின்றி தேர்தலில் போட்டியிட்டதற்க்கு மக்கள்கிட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக செல்வி.ஜெயலலிதா


மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்பாடுகள் இனி ஒருத்தியின் கருத்தையொத்து நடக்காது எனவும்

2.கட்சியின் ஒவ்வொரு தொண்டரின் கருத்துக்களையும் அறிந்தபின் அவற்றிற்க்கேற்ப்ப கட்சியின் நடவடிக்ககள் இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

3.கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி அந்த பதவியை இனி அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் ஆறுமாதத்திற்க்கு ஒருமுறை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

4.என்னைவிட வயதில் மூத்தவரான கலைஞரை அவமதித்தற்க்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

5.என்னுடைய உடன் பிறவா சகோதரி இனி அ.இ.அ.தி.மு.க.வின் செயல்பாடுகளில் தலையிடமாட்டார் எனவும் இதுவரை நாங்கள் சம்பாதித்த முறைகேடற்ற சொத்துக்கள் வறுமை காரணமாக படிக்காமலிருப்பவர்கள் படிக்கவும்.ஏழை பெண்கள் திருமணத்திற்க்கும் உதவப்போகின்றன என பொதுமக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக வருபவர்

நம்ம தலைவர் இளையதளபதி விஜய்


மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1.அரசியலில் நான் ஈடுபடப்போவதாக பத்திரிக்கைகள் தெரிவிப்பது உண்மையில்லை.

2.எனக்கு அரசியல் பிடிக்காது.அரசியலிலும் ஈடுபடமாட்டேன்.அப்படி ஈடுபட்டாலும் கேடுகெட்ட காங்கிரசில் சேரமாட்டேன்.

3.என்னுடைய படங்களில் இனி வித்யாச முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும்,குத்துப்பாட்டுக்கள் இனி என் படங்களில் இடம்பெறாது எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்..

அடுத்து ?

தொடரும்.......

டிஸ்கி:இப்போ என்னோட மூளை ஆதவன் பாட்டுல லை லை சை சை வாராயோன்னு கலக்குற சின்மயியை தேடிட்டு இருக்கு.......

Post Comment

41 comments:

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 29, 2009 at 9:13 PM said...

என்ன இது இப்படி கலக்கிட்டீங்க

நல்லா இருக்கு

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 29, 2009 at 9:13 PM said...

i am first& second

Trackback by vasu balaji August 29, 2009 at 10:25 PM said...

கேப்டனை ஒரு தலைவராகவே மதிக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலுக்கே வராத விஜய் எப்படி சீனியரை முந்தலாம்?

Trackback by கலகலப்ரியா August 29, 2009 at 11:19 PM said...

//
மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்//

இதய அறுவை அல்லது மாற்று சிகிட்சை செய்தால் சாத்யப்படலாம்..! அவர்கள் இதயத்துடன் .. உங்கள் மூளை இணைந்து.. இன்னும் விபரீத முடிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.. ! பார்த்து..!

Trackback by கலகலப்ரியா August 29, 2009 at 11:20 PM said...

chihitchai.. typo..!

Trackback by கலகலப்ரியா August 29, 2009 at 11:23 PM said...

//
என்னோட மூளைய சில பிரபலங்களுக்கு கொண்டு போய் வைத்தால்//

விதிவசத்தால் நானும் ஒரு பிரபலம்.. (உணர்ச்சி வசப்படாதீங்க ப்ளீஸ்).. தயவு செய்து எனக்கு உங்கள் மூளையைப் பொருத்தாதீர்கள்.. எனக்கு உருப்படியாக சில காரியங்கள் பண்ண வேண்டி இருக்கு... :(

Trackback by அப்துல்மாலிக் August 29, 2009 at 11:34 PM said...

இப்படியெல்லாம் நடந்துவிட்டால் தமிழ்நாடுதான் எல்லாத்திலேயும் முதன் மாநிலமாக திழகளும்

இதெல்லாம் கற்பனையே என்று நினைத்தாலும் உண்மையாக இருக்க கூடாதா என்று ஒரு சாதாரணம் குடிமகனின் என் மனம் ஏங்குகிறது...

நல்லாயிருக்கு வஸந்த்

Trackback by Thamira August 30, 2009 at 12:02 AM said...

கேட்கிறதுக்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிஜமாவே கலக்கல் பதிவு. இதெல்லாம் நடக்குறதா.. ஹும்.!

அப்புறம் விஜய்க்கு மட்டும் முதல் பாயிண்டா இதச்சேத்துக்குங்க..

"இனி சினிமாவில் நடிக்கமாட்டேன். தமிழ்சினிமா பிழைத்துப்போகட்டும்"

Trackback by கார்ல்ஸ்பெர்க் August 30, 2009 at 12:30 AM said...

கலைஞர், ஜெ வரிசையில நம்ம தளபதியா?? நீங்க முடிவே பண்ணிட்டீங்க போலத் தெரியுதே :))

Trackback by கார்ல்ஸ்பெர்க் August 30, 2009 at 12:30 AM said...

வாழ்க வசந்த்!!!

Trackback by SUMAZLA/சுமஜ்லா August 30, 2009 at 1:48 AM said...

ஆஹா...வசந்த், நீங்களே சூப்பர் அரசியல்வாதி ஆயிட்டீங்க!

Trackback by ஹேமா August 30, 2009 at 2:41 AM said...

வசந்த்,சான்சே இல்லை உங்களைப்போல யோசிக்க.
அப்பாடி....!

ஆனா மூளையை மாத்திட்டா அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லாம இருப்பாங்களா
இவங்க எல்லாம்?

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) August 30, 2009 at 3:08 AM said...

கேப்டனை ஒரு தலைவராகவே மதிக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலுக்கே வராத விஜய் எப்படி சீனியரை முந்தலாம்?

Ithai naan aamothikkiren

Trackback by sakthi August 30, 2009 at 4:16 AM said...

என்னுடைய படங்களில் இனி வித்யாச முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும்,குத்துப்பாட்டுக்கள் இனி என் படங்களில் இடம்பெறாது எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்..


avvvvvvvv

விஜய் படம் இப்படி வந்தா உலகம் தாங்காது

Trackback by தேவன் மாயம் August 30, 2009 at 5:33 AM said...

வசந்தோட மூளைக்கு மாற்றே இல்லை!!!

Trackback by தேவன் மாயம் August 30, 2009 at 5:33 AM said...

அருமையான மூளைக்கு ஓட்டும் போட்டாச்சு!!

Trackback by அன்புடன் அருணா August 30, 2009 at 8:30 AM said...

உங்க மூளையே சூப்பர்....இப்படி மாற்று வேலை எதுவும்செஞசு கெடுத்துக்கிடாதீங்க!

Anonymous — August 30, 2009 at 8:39 AM said...

இதெல்லாம் நடப்பதாய் உன் கற்பனையிலாவது நாங்கள் கனவுக் கண்டுக் கொள்கிறோம்...ஆனாலும் பேராசை வசந்த் உனக்கு..இவங்க எல்லாம் திருந்திட்டா நாமா யாரை பார்த்து பாடம் படிக்கிறதாம்.....

Trackback by Unknown August 30, 2009 at 8:41 AM said...

ஹா ஹா ஹா

வசந்த் - என்னமோ போங்க

இன்னும் நிறைய பகுதிகள் வரவிருக்கின்றன போல ...

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! August 30, 2009 at 8:43 AM said...

அருமை..ஆனா விஜய இதில் சேர்த்த நுண்ணரசியலை கண்டிக்கிறேன்..

Trackback by Unknown August 30, 2009 at 8:59 AM said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பேஏஏஏஏஏஏ..ராசை....

இதுல தொடரும்....... வேற போட்டுருக்கிங்க..

Trackback by லோகு August 30, 2009 at 9:49 AM said...

பதவி விலகுற கலைஞரா??

ஜாதி இல்லாத மருத்துவர் ஐயாவா ??

சகோதரி இல்லாத அம்மாவா..

குத்து பாட்டு இல்லாத விஜய் படமா..

அது எல்லாம் இல்லேன்னா அவங்க அடையாளமே மாறிடுமே அண்ணா..

வித்தியாசமான கற்பனை.. கலக்கல்..

Trackback by கலையரசன் August 30, 2009 at 10:24 AM said...

வசந்த்து அப்படியே விஜயகாந்துக்கும் எழுதியருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்!!

Trackback by S.A. நவாஸுதீன் August 30, 2009 at 11:13 AM said...

நண்பா!! பேசாம நீ அரசியலுக்கு வந்துடுய்யா. நாடு நல்லா இருக்கும்

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 30, 2009 at 11:38 AM said...

இளைய தளபதி மாற்றம் கட்டாயம் தேவை... அப்படியே உங்க மூளைய அவருக்கே கொடுத்து விடுங்களே அண்ணே.....

நல்லா இருந்தது.... வாழ்த்துக்கள்.....

Trackback by யாழினி August 30, 2009 at 1:03 PM said...

ஆஹா இப்படி எல்லோருக்கும் உங்க மூளையே வந்திற்றா எவ்வளவு நல்லாயிருக்கும்!

Trackback by SUFFIX August 30, 2009 at 1:36 PM said...

பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன், சிந்தித்தேன்!??!!!. நல்லா இருக்கு வஸ்ந்த்

Trackback by kishore August 30, 2009 at 3:11 PM said...

நல்லவேளை என் தலை மூளை இல்லாம காலியா இருக்குனு என்னோடதுல வைக்காம விட்டிங்க.. வச்சிருந்தா.. பல ப(லா)ண பிரச்சனைகளுக்கு விடை சொல்ல வேண்டி இருந்துருக்கும். அருமையான கற்பனை வசந்த்...

Trackback by பா.ராஜாராம் August 30, 2009 at 4:58 PM said...

என்ன வசந்த்...ரிவர்ஸ் சுவீப் சிக்ஸ்சர்!சூப்பர்!
சீக்கிரம் தொடரட்டும்.

Trackback by அ.மு.செய்யது August 30, 2009 at 8:48 PM said...

ஹா..ஹா..கலக்கீட்டீங்க வசந்த்.

முற்றிலும் வித்தியாசமான கற்பனை.அதுவும் விஜய் சொன்னது பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்துது.

Trackback by jothi August 30, 2009 at 9:45 PM said...

இயற்கையிலயே மூளை இல்லாதவங்களுக்கு???

Trackback by கலகலப்ரியா August 31, 2009 at 12:45 AM said...

// M
jothi said...

இயற்கையிலயே மூளை இல்லாதவங்களுக்கு???
//

ரொம்ப மெனக்கெடாம இவங்க மூளைய வச்சிடலாமுங்க..

Trackback by சத்ரியன் August 31, 2009 at 5:09 AM said...

//என்னோட மூளைய சில பிரபலங்களுக்கு கொண்டு போய் வைத்தால் என்ன செய்து கொண்டிருக்கும் என ஒரு சின்ன கற்ப்பனை....’///

வசந்த்,

நடத்துங்கப்பா.எவ்வளவு முடியுமோ... ந‌டத்துங்க. சுட்டெரிக்கிற வெயில் பிரதேசமோ நீங்கள் வேலைப் பார்க்குமிடம்?

சிரிக்க வாய்ப்பளித்த உங்கள் நல்ல பதிவிற்கு நன்றி.
‍..........................
தமிழில், "ற்"‍ ஐத் தொடர்ந்து மெய்யெழுத்துக்கள் ("க்" முதல் "ன்" வரை) எதுவும் வரக்கூடாது.

Trackback by ஈரோடு கதிர் August 31, 2009 at 7:38 AM said...

பின்னீட்டீங்க.. வசந்த்

அசாத்தியமான கற்பனை

ஆனால் நடந்தல்ல் மகிழ்ச்சியே

Trackback by க.பாலாசி August 31, 2009 at 9:16 AM said...

அருமை வசந்த்....உங்கள் மூளை மிகவும் நன்றாக செயல்படுகிறது... ஆனாலும்

//தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக திரு.ஸ்டாலின் பொறுப்பேற்ப்பார் எனவும் அறிவித்துக்கொள்கிறேன்.//

இந்த விடயத்தில் உங்கள் மூளையும், கலைஞரின் மூளைவும் ஒத்துப்போகிறதே...

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 31, 2009 at 10:15 AM said...

சூப்பர் தலை. கலக்கிட்டீங்க. ஆமா நீங்களும் இளைய தளபதிய கலாய்கிறீங்களா? கார்க்கி மாதிரி?

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா August 31, 2009 at 10:30 AM said...

உங்க மூளைய மாத்திக்கிட்டா கூட கலைஞர் ஈழத்துக்காக எதுவும் பேச மாட்டார் போல :) :(

Trackback by சிங்கக்குட்டி August 31, 2009 at 4:54 PM said...

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

Trackback by சுசி August 31, 2009 at 6:38 PM said...

கற்பனை சூப்பர் வசந்த்.
ஏன் இன்னொரு கார்க்கி ஆயிட்டீங்க? அப்புறம் நான் நீங்க யார் ரசிகர்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதாயிடும்:))))

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 31, 2009 at 9:23 PM said...

நன்றி @ ஸ்டார்ஜன்

நன்றி @ பாலா(கேப்டன் அடுத்த எபிசோட்ல)

நன்றி @ பிரியா (எதையும் தாங்கும் இதயம் நான்,பட் உங்களுக்கு ஐஸ் மூளை எடுத்துதான் மாற்றிவைக்கணும்)

நன்றி @ அபு(ஆமாம் அபு)

நன்றி @ ஆதிசார்(நீங்களும் விஜய டேமேஜ் பண்ணீட்டீங்களே)

நன்றி @ கார்ல்ஸ்பெர்க்(அட கண்டுபிடிச்சுட்டீங்களே)

நன்றி @ சுமஜ்லா(நானும் ரவுடிதான்)

நன்றி @ ஹேமா(கண்டிப்பா சொல்வாங்க)

நன்றி @ ரமேஷ்

நன்றி @ சக்தி

நன்றி @ தேவாசார்

நன்றி @ பிரின்ஸ்(சரிங்க)

நன்றி @ தமிழரசி(இவங்ககிட்ட போயி யார் பாடம் கத்துக்குவாங்க)

நன்றி @ ஜமால் அண்ணா(நிறைய பகுதிகள் உண்டு)

நன்றி @ ராஜ்(ஹி ஹி)

நன்றி @ பட்டிக்காட்டான்(பேராசை பெரு நஷ்டம் எனக்கில்ல அவங்களுக்கு)

நன்றி @ லோகு(நிஜம்தான் லோகு)

நன்றி @ கலை(வி.க.க்கு அடுத்த பார்ட்ல)

நன்றி @ நவாஸ்(நாடுதாங்காது நவாஸ்)

நன்றி @ சஃப்ராஸ்

நன்றி @ யாழினி

நன்றி @ சஃபிக்ஸ்

நன்றி @ ராஜாராம்

நன்றி @ அ.மு.செய்யது

நன்றி @ ஜோதி(இவங்களுக்கு இல்லையா இல்ல எனக்கா?)

நன்றி @ சத்ரியன்(திருத்திவிடுகிறேன்,அப்பறம் நான் இப்போதானுங்க பதிவுலகம் வந்துருக்கும் குழந்தை என்னைய போயி தாத்தான்னுட்டு)

நன்றி @ கதிர்

நன்றி @ பாலாஜி(நல்லதுதானே)

நன்றி @ யோகா(மனவருத்தம்தான்)

நன்றி @ அமித்து அம்மா(வெயிட் அண்ட் சீ)

நன்றி @ சிங்க குட்டி(நன்றிப்பா)

நன்றி @ சுசி(தலைவர நாம எவ்ளோ கலாய்ச்சாலும் தலைவர் தலைவர்தான்)

Trackback by வால்பையன் August 31, 2009 at 9:31 PM said...

உங்க மூளைய வச்சா இவ்வளவு நல்லது நடக்குமா!?

அது தான் பெரிய சந்தேகமா இருக்கு!