வசந்த் (எதிர்) வசந்த்

| August 31, 2009 | 40 comments |
வசந்த் Vs வசந்த்

மீண்டும் வித்யாசமா(ஆமா நீ எழுதுறதே வேஸ்ட் இதுல வித்யாசம் வேறையான்னு நீங்க சொல்றது கேக்குது)ஒரு சந்திப்பு.

சந்திக்கப்போவது இருவர், ஒருத்தர் கருத்து சொல்றேன்னு கருத்து கந்தசாமியா மாறிட்டு இருக்குற பிரபலமாகாத பதிவர்
பிரியமுடன் வசந்தும் அவரோட நிழல் வசந்தும் காலாற வெளிய நடந்து போயிட்டு இருக்கும்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்...

ப்ரியமுடன் வசந்த்: என்னங்க நிழல் வசந்த் இத்தனை நாளா இல்லாமல் திடீர்ன்னு வெளியுலகைப்பார்க்கணும்ன்னு வந்துருக்கீங்க?

நிழல் வசந்த்: ஆமாப்பா உன்னோட இம்சைதாங்க முடியாமத்தான் கொஞ்சம் வெளியுலகம் பக்கம்...

ப்ரியமுடன் வசந்த்: நான் என்னய்யா இம்சை செஞ்சேன்?

நிழல் வசந்த்: வர வர நீ கருத்து கந்த சாமியா மாறிட்டு வர்ற...அது தாங்க முடியாமத்தான் உங்கிட்ட சில கேள்விகள் கேக்கலாம்ன்னு...

ப்ரியமுடன் வசந்த்:ஆமா சமூகத்துல நடக்குற சில விஷயங்களை எனக்குதெரிஞ்சத சில சொல்லலாமுன்னு...

நிழல் வசந்த்: போதும் நிப்பாட்டிக்கோ.....

ப்ரியமுடன் வசந்த் : ஏன்?

நிழல் வசந்த் : நீ சொல்றத யாரும் கேக்கப்போறாங்களா?

ப்ரியமுடன் வசந்த் : ஏன் கேக்க மாட்டாங்களா?

நிழல் வசந்த் : அம்மா அப்பா மனைவி சொல்றதையே கேக்காதவங்க வெட்டியா ப்லாக் எழுதுற நீ சொல்றதையா கேக்கப்போறாங்க . இதோ பாரு வசந்த் நான் இப்போ கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.

ப்ரியமுடன் வசந்த் : கேளுப்பா..

நிழல் வசந்த் : உன்னோட பதிவுக்குவந்து இதுவரைக்கும் பிரபல பதிவர்கள் தினம் வந்து பின்னூட்டம் போடறாங்களா?

ப்ரியமுடன் வசந்த்:வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா..

நிழல் வசந்த் : இந்த சமாளிப்பு எல்லாம் வேணாம்டி...சரிவுடு நான் கேக்குற சில சமுதாய கேள்விக்காச்சும் பதில் சொல்லு.

ப்ரியமுடன் வசந்த் : சரி ட்ரைப் பண்றேன்

நிழல் வசந்த் : கோவிலுக்கு போற பழக்கம் உண்டா?

ப்ரியமுடன் வசந்த்:ம்ம் உண்டு சாமி கும்பிட இல்லைன்னாலும் சைட்டடிக்கவாவது போறது உண்டு.

நிழல் வசந்த்: விளங்கும்...திருப்பதி,பழநிக்கெல்லாம் போயிருக்கியா?

ப்ரியமுடன் வசந்த்:ம்ம் போயிருக்கேன்.அத்தை பொண்ணு மஹேஷ் கூட ஒருதடவை (தப்பா நினைக்காதப்பா அவங்க அம்மா அப்பாவும் கூட வந்தாங்க)பழநிக்கு போயிருக்கேன்.அப்பறம் நித்யா கூட (இப்பயும் தப்பா நினைக்காதப்பா இது சின்ன அத்தை பொண்ணு ஒண்ணாவது படிக்கிற புள்ளை) அதுக்கு மொட்டையெடுக்க போயிருக்கேன்.

நிழல் வசந்த் : இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு...சரி பழநிக்கு போனியே அங்க அடிவாரத்துல இருந்து படியேறி நடந்து போனியா இல்ல மின்சார மலையேறி மூலமா போனியா?

ப்ரியமுடன் வசந்த்:விஞ்ச்லதாம்பா போனேன்

நிழல் வசந்த் : அந்த பக்கத்தூர் ரேணுகாவப்பாக்க மட்டும் தினமும் ஒருகிலோ மீட்டர் நடந்து போயி பல்ல இளிச்சுட்டு பாத்துட்டு வர்றியே இங்க மட்டும் என்ன இந்த கொஞ்ச தூரம் உன்னால படியேறி போக முடியாதாக்கும்.அதான் அந்த முருகன் அந்த ரேணுகாவ வேறொருத்தனுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டான்.

ப்ரியமுடன் வசந்த் : இப்போ எதுக்கு அவளப்பத்தி பேசுற? கேக்க வந்த கேள்விய மட்டும் கேளு.

நிழல் வசந்த் : மேல முருக கடவுளப்பாக்க முறைப்படி போனியா?

ப்ரியமுடன் வசந்த்: ஆமா தேங்காய்,பழம்,பத்தி,சூடன் எல்லாம் வாங்கி முறைப்படித்தான் போனேன்.

நிழல் வசந்த்: ந்தா பாரு செவுலு திரும்பிடும் நக்கலா?

ப்ரியமுடன் வசந்த் : இல்லப்பா..

நிழல் வசந்த் : கொன்னுடுவேன் உன்னைய ..அங்க கோவிலுக்கு சவுக்கு மரத்துல லைன் கட்டியிருக்குமே அதுல கால் வலிக்க வரிசையில நின்னுட்டு போனியா(அதாம்பா தர்ம தரிசனம்) இல்லை சிறப்புக்கட்டணம் செலுத்தி சீக்கிரம் சாமிய பாத்துட்டு வந்துட்டியா?

ப்ரியமுடன் வசந்த் : ஹேய் யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டுட்ட?

நிழல் வசந்த் : உன்னையத்தாண்டா வென்று....

ப்ரியமுடன் வசந்த் : சரி சரி பொது இடத்துல இது மாதிரி அசிங்கப்படுத்தாத,

நிழல் வசந்த் : அது அந்த பயமிருக்கட்டும்.

ப்ரியமுடன் வசந்த் : காசு குடுத்துதான் போனேன் இப்போ அதுக்கு என்ன?

நிழல் வசந்த்: சரி வெளியூருக்கு நீ போறேன்னு வச்சுக்க அங்க திடீர்ன்னு உனக்கு இயற்க்கை உபாதை வருது என்ன பண்ணுவ?

ப்ரியமுடன் வசந்த் : 1வந்துச்சுன்னா அந்த சுவத்துப்பக்கமா அடிச்சுட்டு வந்துடுவேன்.

நிழல் வசந்த் : நாய் மாதிரின்னு சொல்லு...

ப்ரியமுடன் வசந்த் : இதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா.எல்லாரும் பண்றதத்தேன் நானும் பண்ணேன்.

நிழல் வசந்த் : 2 வந்துச்சுன்னா என்னா பண்ணுவ?

ப்ரியமுடன் வசந்த் : நகராட்சி கட்டண கழிப்பறைக்கு போவேன்.

நிழல் வசந்த்: காசு கொடுத்து கடைமைய கழிச்சுட்டு வந்துடுவ அப்படித்தான.

ப்ரியமுடன் வசந்த் : ஆமா.

நிழல் வசந்த் : அதுக்கும் முருகன காசு குடுத்து கடமையேன்னு கண்டுட்டு வர்றதுக்கும் என்ன வித்யாசம்ன்னு நீயே சொல்லுப்பா கருத்து கந்தசாமி.

ப்ரியமுடன் வசந்த் : அது வந்து அது வந்து ...

நிழல் வசந்த் : நேரமில்லைன்னு சொல்லக்கூடாது 200 கிலோ மீட்டர் தள்ளி வந்து முருகனப்பாக்குற உனக்கு ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி சாமிய பாக்க முடியலைல.நீதான் ரொம்ப யோசிப்பியாமே இதையும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணு . அப்பறம் கருத்து சொல்லு.மீண்டும் சந்திப்போம்...உங்கிட்ட இன்னும் நிறைய கேள்வி கேக்க வேண்டியிருக்கு.இப்போ வர்ட்டா......

Post Comment

மூளை மாற்றம்

| August 29, 2009 | 41 comments |
ஒரு வித்தியாசமான பதிவை உங்களின் பார்வைக்கு....

என்னோட மூளைய சில பிரபலங்களுக்கு கொண்டு போய் வைத்தால் என்ன செய்து கொண்டிருக்கும் என ஒரு சின்ன கற்ப்பனை....’


முதலாவதாக வருபவர் கலைஞர் கருணாநிதி

மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1. அரசியலில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிடுவதன் முதல் செயலாய் நான் என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்.

2.தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக திரு.ஸ்டாலின் பொறுப்பேற்ப்பார் எனவும் அறிவித்துக்கொள்கிறேன்.

3.தமிழ் கலாச்சாரத்திற்க்கெதிராக நான் புரிந்த இரண்டு மூன்று திருமணங்களுக்காக என்னுடைய மனைவிகளிடமும் தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

4.இதுவரை முறையற்று நான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகள்.ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உயில் எழுதிவைக்கிறேன்.

5.இனியும் , என் இறப்பிற்க்கு பிறகும் என்னுடைய சிலைகள் தமிழ்நாட்டில் வைக்கக்கூடாது என தொண்டர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக திரு,இராமதாஸ்


மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1.தமிழக மக்களே இதுவரை நான் நடத்திவந்த ஜாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை கலைக்கிறேன்...

2.பொதுமக்களுக்கு சேவை செய்வதற்க்கென்று படித்து பெற்ற டாக்டர் பட்டத்தை பயன்படுத்தாமல் இருப்பதால் அதை திரும்ப அளித்துவிடுகிறேன்.

3.என்னுடைய பேரக்குழந்தைகளை தமிழ் பள்ளியில் சேர்த்துவிடுகிறேன்.

4.முக்கியமா என்னுடைய ஜாதிச்சான்றிதழை தீயிட்டு கொளுத்திவிடுகிறேன்.

5.கூட்டணி மாறி மாறி அறிவின்றி தேர்தலில் போட்டியிட்டதற்க்கு மக்கள்கிட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக செல்வி.ஜெயலலிதா


மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்பாடுகள் இனி ஒருத்தியின் கருத்தையொத்து நடக்காது எனவும்

2.கட்சியின் ஒவ்வொரு தொண்டரின் கருத்துக்களையும் அறிந்தபின் அவற்றிற்க்கேற்ப்ப கட்சியின் நடவடிக்ககள் இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

3.கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி அந்த பதவியை இனி அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் ஆறுமாதத்திற்க்கு ஒருமுறை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

4.என்னைவிட வயதில் மூத்தவரான கலைஞரை அவமதித்தற்க்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

5.என்னுடைய உடன் பிறவா சகோதரி இனி அ.இ.அ.தி.மு.க.வின் செயல்பாடுகளில் தலையிடமாட்டார் எனவும் இதுவரை நாங்கள் சம்பாதித்த முறைகேடற்ற சொத்துக்கள் வறுமை காரணமாக படிக்காமலிருப்பவர்கள் படிக்கவும்.ஏழை பெண்கள் திருமணத்திற்க்கும் உதவப்போகின்றன என பொதுமக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக வருபவர்

நம்ம தலைவர் இளையதளபதி விஜய்


மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும் செய்திகள்

1.அரசியலில் நான் ஈடுபடப்போவதாக பத்திரிக்கைகள் தெரிவிப்பது உண்மையில்லை.

2.எனக்கு அரசியல் பிடிக்காது.அரசியலிலும் ஈடுபடமாட்டேன்.அப்படி ஈடுபட்டாலும் கேடுகெட்ட காங்கிரசில் சேரமாட்டேன்.

3.என்னுடைய படங்களில் இனி வித்யாச முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும்,குத்துப்பாட்டுக்கள் இனி என் படங்களில் இடம்பெறாது எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்..

அடுத்து ?

தொடரும்.......

டிஸ்கி:இப்போ என்னோட மூளை ஆதவன் பாட்டுல லை லை சை சை வாராயோன்னு கலக்குற சின்மயியை தேடிட்டு இருக்கு.......

Post Comment

மொக்கை

| August 27, 2009 | 34 comments |
எதிர்கால சந்ததிகள் இவங்களுக்கு எல்லாம் இந்தமாதிரிதான் பட்டப்பேர்

வைப்பாங்களோ.......

பாட்டி=DRUMS,(டொக்.டொக்னு வெத்தலை இடிக்குறதால)

தாத்தா=WATCHMAN & DUSTBIN(மிச்சம் மீதியெல்லாம் இவருக்கு போடுறதால)

அம்மா= TEMPLE

அப்பா = TEACHER,POLICE

மனைவி = WASHING MACHINE,BANK,

கணவன் = ATM,(பணத்துக்காக மட்டுமே)

அண்ணன்,தம்பி = PARTNERS (பாசத்துக்கு அல்ல சொத்துக்கு மட்டும்)

அக்கா,தங்கை = VILLIS,POSTWOMENS( காதலுக்கு தூது செல்வதால்)

தாய்மாமா= CHAIR (காதுகுத்துக்கு மடியில உக்கார வைப்பதால்)

அத்தை= CURRENT(அப்போ அப்போ கட்டாகி கட்டாகி வருவதால்)

பேரன் பேத்தி=DOLLS (விளையாட மட்டும்)

பக்கத்துவீட்டு ஆண்டி = NEWSPAPER(ஊர் வம்பு பேசுவதால்)

ஆசிரியர்= SNAKE(கொட்டுவதால்)

காதலி = POISEN,CREDIT CARD (உதவ அல்ல பணத்தை உருவ மட்டும்)

காதலன் = JOKER

டிஸ்கி: இது எல்லாம் சும்மா மொக்கை...........(கொஞ்சம் வருத்தத்துடன்)


Post Comment

AND,NOW..."

| August 25, 2009 | 47 comments |
முன்னாடியும் இப்போவும்.....AND,NOW..."

காட்டிலுள்ள மரம்...

மழைக்காலத்தையும் , வசந்தகாலத்தையும் கொண்டாட சொந்த பந்தங்கள் பலஉடன்இருந்தது,சொந்த பந்தங்களுடன் மழையையும் வானத்தின் மேககூட்டங்களையும் ரசித்து கொண்டிருந்தேன்...

வெகு அழகாக இருந்தது பூமி!

எப்படியோ?(மனிதனால்) சொந்த பந்தங்கள் வெட்டப்பட்டன...

தொலைந்து போனது மழையும் , மனிதனின் எதிர்காலமும்....

படிக்க ஷஃபியின் பசுமை இடுகை

சந்தனமுல்லையின் "And,Now"

ஆயில்யனின் "And,Now"

நட்புடன் ஜமாலின் "And,Now"

நிஜமா நல்லவனின் "And,Now"

தமிழ் பிரியனின் "And,Now"

முத்துலட்சுமியின் "And,Now"

ஸ்ரீமதியின் "And,Now"

நான் ஆதவனின் "And,Now"

தமிழன் கறுப்பியின் "And,Now"

சின்ன அம்மிணியின் "And,Now"

பிராவகமின் "And,Now"

கானா பிரபாவின் "And,Now"

ஹரிணி அம்மாவின் "And,Now"

அபி அப்பாவின் "And,Now"

தொடரும்................

Post Comment

காடாளுமன்றம்

| August 23, 2009 | 69 comments |
பாயும் புலி புண்ணாக்கின் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் மான் கூட்டத்திற்க்கு முதற்க்கண் என் வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு அடுத்து இங்கு வருகை தந்திருக்கும் பரவலாக தன்னுடைய பெயரால் நம் பொது எதிரிகளான மனிதர்களை அலற வைத்துக்கொண்டிருக்கும் பன்றிக்கூட்டத்தையும்,தொடர்ந்து நம்முடைய பொது எதிரி மனிதர்களின் தூக்கத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் இரத்தத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் கொசுக்கூட்டத்தையும்,மனிதர்களை தன்னுடைய சேட்டைகளால் சிதைத்துக்கொண்டிருக்கும் குரங்கு கூட்டத்தையும்,அவ்வப்போது மனிதர்களை அசால்ட்டாய் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கும் காக்கா கூட்டத்தையும்,பார்வையாலே பயமுறுத்தும் பாயும் சிங்கக்கூட்டத்தையும் , மேலும் பரவலாக திரண்டிருக்கும் காட்டு விலங்குகள் ,பறவைகள் அனைவரையும் வருக வருக என்று இருகால் கூப்பி வணங்குகிறேன்.வரப்போகும் காடாளுமன்ற தேர்தலில் நம் இனத்திலிருந்து பிரிந்து சென்று மதம் எனும் பித்து பிடித்து திரியும் யானை கூட்டத்தையும்,தொடர்ந்து மனிதர்களுக்கு விசுவாசியாய் இருக்கும் நாய் கூட்டத்தையும் , எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மனிதர்களுக்கு இரையாகிப்போகும் மாடு,ஆடு,கோழி கூட்டத்திரற்க்கும்,மனிதனை தூக்கத்திலிருந்து எழுப்பும் அலாரமாகிப்போன சேவல் கூட்டத்தையும்,சினிமா நடிகைகளின் மடியில் தஞ்சமாகிப்போன பூனை கூட்டத்தையும் எதிர்த்து நம் ஐக்கிய வனநாயக முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது.

என்னுடைய தேர்தல் வாக்குறுதிகள்

1.தொடர்ந்து நமக்கு இயலாத கைகளால் வாக்கு இடும் முறை நீக்கப்பட்டு கால்களால் வாக்குகளிடப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

2.பல நூறாண்டுகள் நம் முன்னோர்கள்,சகாக்கள் மனிதர்களின் காட்ச்சிப்பொருளாக கூண்டுகளில் அடைப்பட்டிருப்பதை எதிர்த்து அவர்கள் நிரந்தரமாக விடுதலையாக முயற்சிகள் எடுக்கப்படும்.

3.காடுகள் மனிதர்களால் அழிக்கப்படுவதைக்கண்டித்து கறுப்பினத்தலைவரும் அமெரிக்க காடாளுமன்ற அதிபருமான சிம்பன்சியிடம் கோரிக்கை விடப்படும்.

4.முன்பே நமக்கு நாம் எங்கு சென்றாலும் நம் தாகம் தீர ஆறுகளும் , ஓடைகளும் நீர் நிறைந்திருந்தது. இப்பொழுது அதுவும் இந்த மனிதனின் கேடு விளைவிக்கும் செயல்களால் நீர் வற்றி காணப்படுவதால் நாம் நீருக்கு நீண்ட தூரம் சென்று நம் தாகம் தீர்க்க இயலாததால்,காட்டுக்குள் அங்கு அங்கு சிறு நீர்தொட்டிகள் அமைக்கப்படும்.

5.பல நூறாண்டுகளாக நாமே நம்மளை அடித்து கொன்று தின்கிறோம் மனிதர்களைப்போல அத்தகைய செயல்கள் இனிமேல் நடைபெறாது நமக்காக ஜாதிகளால் பிரிந்து தன்னைத்தானே அடித்து கொல்லும் மனிதர்களை வேட்டையாடி தின்பதற்க்கு வழிவகை செய்யப்படும்.

6.காடாளுமன்றத்தில் நமக்குள்ளே அடித்துக்கொள்பவர்கள் நம்முடைய வனவிலங்கு நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டு காடு கடத்தப்படுவார்கள்.

7.நம்முடைய தந்திரி கூட்டத்தில் ஓநாய் தந்திரியாக செயல் படும்.

8.காடாளுமன்றம் நடைபெற தனிக்காடு ஒன்று நம்மால் ஏற்ப்படுத்தப்படும்.

9.நம் வருங்கால சந்ததியினர் படிப்பறிவு பெற நிறைய விலங்கு கூடங்கள் அமைக்கப்படும்.

10.நம் காடாளுமன்ற முந்நாள் தலைவர் டைனோசருக்கு நம் காடாளுமன்றத்தில் சிலை வைக்கப்படும்.

11.புதர்களில் மனிதர்கள் காதல் புரிவதை தடுத்து அவர்களை படம் பிடிக்க பாம்புப்படை செயல்படும்.

12.மனிதன் அரை குறை ஆடைகளோடுதிரிகிறான் விரைவில் அவனும் அம்மனமாக திரியும் நாள் வரும் என்பதால் ஐந்தறிவு பெற்ற நாம் அவனைப்போலல்லாமல் உலக காடுவாழ்இனங்களில் முதல் முறையாக நமக்கான ஆடைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்படும்.

13.நம்மோட காடுகளை பட்டா போட மனுஷன் யாரு? அவற்றை அவர்களிடமிருந்து பிடுங்கி நம்மினங்கள் அவரவர் வாழ தனித்தனி இடங்கள் பட்டா போட்டுத்தரப்படும்.

14.தேர்தலில் ஜெயித்து காடாளுமன்ற உறுப்பினராகிய பின் தன் காட்டுதொகுதிக்கு வராமலிருக்கும் உறுப்பினரின் இருகால்களும் வெட்டி அத்தொகுதி வாழ் விலங்குகளுக்கு சூப்பாக கொடுக்கப்படும்.

15. நம்மின பெருமைகளை விளக்கும் டிஸ்கவரி சேனல் அரசு சேனலாக மாற்றப்பட்டு கட்டணமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும்.

இவ்வாக்குறுதிகள் கண்டிப்பாக முதல் காடாளுமன்ற கூட்டத்திலே நிறைவேற்றப்படும் என அனைத்து வன சகோதரர்களுக்கும்,தாய்மார்களுக்கும்,தந்தைமார்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தேர்தலில் தங்கள் பொன்னான வாக்குகளை நம்முடைய மான்கொம்பு சின்னத்தில் வாக்களிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

காடு எங்கும் நம் ஐக்கிய வன நாயக முற்போக்கு கூட்டணிக்கு பேனர்கள் அமைத்து இக்கூட்டம் சிறப்பாக நடைபெற உதவிய ஐக்கிய வன நாயக முற்ப்போக்கு கூட்டணியின் இளைஞர் பிரிவுகளுக்கு நன்றிகள்


Post Comment

அரசாங்கமே கொஞ்சம் காதை குடுத்து கேளுங்க...

| August 21, 2009 | 92 comments |


அரசாங்கமே கொஞ்சம் காதை குடுத்து கேளுங்க...
தேவை மீட்டர்....

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கார்ப்பரேசன் தண்ணீருக்கு பயன் படுத்திய தண்ணீரின் அளவை அறிந்து கொள்ள வாட்டர் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும் இப்போவும் சில இடங்களில் பயன்பாட்டில் இருக்கு.

அதுமாதிரி

நிலத்திலிருந்து எடுக்கும் புதையல் , மற்ற பொருள்கள் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்ன்னு அரசு சொல்லுது,அப்போ நிலத்திலிருந்து எடுக்கும் நீரும் அந்தந்த அரசாங்கங்களுக்கும் சொந்தம்ன்னு நினைச்சுக்கிட்டு ஒவ்வொரு நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களின் பம்பிலும் இந்த மாதிரி வாட்டர் மீட்டர் பொருத்தணும்ன்றது என்னுடைய கருத்து . இதன் மூலம் நிலத்தடி நீர் உபயோகத்தின் அளவை பொருத்து விவசாயம் நீங்கலாக ஏனைய பயன்பாட்டிற்க்கு நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் விதிப்பதின் மூலம் நிலத்தடி நீர் பயன்பாட்டின் அளவை குறைக்கலாம்.விவசாயிகளும் ரொம்ப இல்லைன்னாலும் கொஞ்சமாவது பயன்படும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க? செயல்படுத்துமா அரசாங்கம் இல்லை இதிலும் ஊழல் முறைகேடுகள் பண்ணி காசு பாத்துடுவாங்களா அரசியல்வாதிகள் , ஏன்னா சுடுகாட்டு கூரையிலே ஊழல் செஞ்சவங்க இந்த மாதிரி விஷயத்தில் காசு பாக்காம விடுவாங்களா என்ன?

அடுத்தது

சாயக்கழிவு,ரசாயன கழிவு ,அதிக சாக்கடை நீர் வெளியிடும் குழாய்களிலும் இதுமாதிரியான வாட்டர் மீட்டர்கள் பொருத்தி வெளியிடப்படும் சாக்கடை நீரின் அபாயங்களை பொருத்து அவற்றுக்கும் கட்டணம் விதித்து அதிகப்படியான ரசாயன கழிவுகள் பூமியில் கலப்பதை தவிர்க்கலாம்.இதனால் கட்டணத்துக்கு பயந்து தொழில் நிறுவனங்கள் தொழிற்ச்சாலைகளுக்குள்ளே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன் வந்து அதன் மூலம் கழிவு நீரின் வெளிப்பாடும் குறையும் நீர் சுத்திகரித்து பயன்படுத்துவதனால் நீர் வீணாவது குறையும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க? வீட்டிலிருந்து வெளியேறும் சாக்கடை நீரையும் சுத்திகரித்து பயன்படுத்தும் எளிய கருவி ஒன்று கண்டுபிடித்து மக்களுக்கு தரலாமே தொலைக்காட்சி வழங்குவதற்க்கு பதிலா இப்படி உபயோகமான உதவி அரசு செய்யலாமே?

அடுத்து

தொழிற்ச்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு (புகை) வெளியேற்றும் குழாய்களிலும் இதுமாதிரி மீட்டர் பொருத்தி வெளியேறும் புகைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் இதன் மூலம் காற்று மாசுபடுத்டுறது கொஞ்சம் குறையும் ஏன்னா எதிர்வரும் காலத்தை முன்னிட்டு குடும்பக்கட்டுப்பாடு பண்ணுற அரசு இதுமாதிரி கட்டுப்பாடுகளையும் விதிக்கவேண்டும்.தேவை மீட்டர்
அடுத்து

பெட்ரோல்,டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் ஒருநாளைக்கு இத்தனை லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல்தான் பயன்படுத்தவேண்டும் என்று (அதன் உபயோகத்தை பொருத்து) கட்டுப்பாடுகள்விதிக்க வேண்டும்.இதன் மூலம் டீசல் பெட்ரோலுக்கு செலவாகும் பணம் குறையுமே நீங்க என்ன சொல்றீங்க?


மீட்டர் வட்டிக்கு பணம் வாங்குற மக்கள் இந்த மீட்டர்களை ஏத்துகிடுவாங்களா?


இளமைவிகடனில் குட் ப்லாக்ஸ் பகுதியில் இவ்விடுகை

Post Comment

எதிர் சின்னங்கள்

| August 20, 2009 | 46 comments |

எதிர் சின்னங்கள்

எதிர் கட்சியாரம்பிச்சா போதாது எதிர் சின்னமும் வேணும்ல

பாரதியஜனதா வின் எதிர் சின்னம்


தே.மு.தி.க. வின் எதிர் சின்னம்

பா.ம.க. வின் எதிர் சின்னம்

காங்கிரஸ்ன் எதிர் சின்னம்

தி.மு.க.வின் எதிர் சின்னம்

அ.தி.மு.க.வின் எதிர்சின்னம்
இது என்னுடைய 150வது இடுகை தொடர்ந்து ஆதரளித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி,நன்றி,நன்றி
50,000 ஹிட்ஸ்க்கு மிக்க நன்றி

Post Comment

பயோ-டேட்டா (சிகரெட்)

| August 17, 2009 | 85 comments |கருத்து படம்?

Post Comment

யாருக்கு சுதந்திரம்?

| August 14, 2009 | 62 comments |

யாருக்கு சுதந்திரம்?

நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்

ஆனா

உண்மையான சுதந்திரம் யாருக்கு கிடைத்தது?


வட்டிக்கு பணம் கொடுக்கும்

பண முதலைகளுக்கு......


அசையா சொத்துக்கள் சேர்க்கும்

அரசியல்வாதிகளுக்கு....


லஞ்சம் வாங்குற அரசு,

காவல்துறை அதிகாரிகளுக்கு....


பெண்களை திருட்டுத்தனமாக

ஆபாச படம் எடுப்பவர்களுக்கு....


விவாகரத்து பண்ணாமல்

மறுமணம் புரிபவர்களுக்கு.....


வரிகட்டாமல்

நாட்டை ஏமாற்றுபவர்களுக்கு.....


கல்விக்கு அளவுக்கு மீறி

கட்டணம் வசூலிப்பவர்களுக்கு....


கட்டணமில்லாமல் அரசு

வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு....


வாய்தா வாங்கி

ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....


கலப்படத்தில்

கல்லாவை நிரப்பும் கயவர்களுக்கு....


தேர்தலில் கள்ள ஓட்டு ப்போடும்

விசுவாசிகளுக்கு...


சாதிகளில்லையடி பாப்பான்னு படிச்சு டாக்டராகி

சாதிக்கட்சி நடத்துபவர்களுக்கு.....


காவல் துறையின் காவலோடு?

ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு....


ஆபாசத்தை தூண்டும் எழுத்துக்களை

வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு....


சிறார்களை பணியிலமர்த்தும்

நிறுவனங்களுக்கு....


மதவெறியில் ரயில்,பேருந்துகளை

எரிப்பவர்களுக்கு....


சாமியின் பேரில் உலாவரும்

போலிச்சாமியார்களுக்கு....


இவர்கள் மட்டுமே இச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்

தேவையா இந்த சுதந்திரம்?

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

தமிழ் மணம், தமிழிஷ்ல் வாக்களிக்க மறவாதீர்Post Comment

மனுஷ காய்ச்சல்

| August 11, 2009 | 31 comments |
பன்றிக்காய்ச்சல் , பறவைக்காய்ச்சல் மனிதனுக்கு வந்ததால் நிகழும் அபாயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்

இதே மனுஷ காய்ச்சல் விலங்குகளுக்கு வந்தால் இப்படி அபாயம் நிகழுமோ?

நாய்க்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்
மாட்டுக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


புலிக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


பன்றிக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


யானைக்கு...மனுஷக்காய்ச்சல் வந்தால்


குட்டிப்பன்றிக்கு...மனுஷக்காய்ச்சல் வந்தால்புலிக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


ஆட்டுக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


பூனைக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்

Post Comment

சொர்கத்துக்கு ஒருகடிதம்

| August 9, 2009 | 41 comments |
அனுப்புநர்

வசந்தகுமார்

நரகம் , பூமியிலிருந்து,

பெறுநர்

என் தங்கை

சொர்க்கம்,வானில்.

அன்பு தங்கைக்கு பாசமுள்ள? சகோதரன் வசந்த் எழுதுவது...

என்னவென்றால் இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும் உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)

பிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.

அளவற்ற தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும் பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,தாயையும்,தந்தையயும் தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த கடவுளுக்கு மனசு வந்தது?

நான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.

ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா? நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா? இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயா?பெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயா?கணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார் கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா?

நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன் அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.

சகோதரி நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய் என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும் என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய் சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவண் உன் பாசத்திற்க்கும் நேசத்திற்க்குமுரிய சகோதரன்

பிரியமுடன்...வசந்த்.
Post Comment

தேவை தேடியந்திரம்

| August 8, 2009 | 51 comments |
வழக்கமா இணையத்தில் நாம் தேடுறதுக்கு கூகுள்,யாஹு,போன்ற தேடியந்திரங்கள் பயன் படுத்துகிறோம்.
இதுபோல் பரீட்ச்சையின் போது மாணவ மாணவர்களுக்கு கீழே உள்ளதுபோல் தேடியந்திரம் இருந்தால் மிகவும் பயனாக இருக்கும்.. எந்த பாடத்துல இருந்து எந்த பக்கம் படிச்சோம்ன்னு மூளைக்கு ஞாபகப்படுத்தி விடை கொண்டுவருவதற்க்கு......இன்னும் மருத்துவர்களுக்கு நம் உடலின் எந்த பகுதியில் கேன்சர் இருக்கு? எந்த பகுதியில் உள்காயம் பட்டுருக்குன்னு தெரிஞ்சுக்கிடவும் இந்த மாதிரி தேடியந்திரம் இருந்துச்சுன்னா மிகவும் உதவியாயிருக்கும் ....ஹோட்டல்ல சாப்பிடப்போனா மெனுக்கு பதிலா இதுமாதிரி தேடியந்திரம் வச்சுட்டா மிகவும் சூப்பரா இருக்கும்.....துணிக்கடைக்கு சேலை எடுக்கப்போகும் மகளிர்க்கு இது மாதிரி தேடியந்திரம் இருந்தா நேர விரயம் குறையும்.......

திருமண புரோக்கர்களிடம் பெண் தேடும் மணமகன்களுக்காக இப்படி ஒரு தேடியந்திரம் இருந்தால் வசைதியா இருக்கும்.......கவனிக்குமா? கூகுள்

Post Comment

கலைஞர் விருதுகள்

| August 7, 2009 | 28 comments |


நம்ம பதிவுலகத்துல நாம கொடுக்குற பட்டாம்பூச்சி விருது ,இண்ட்ரெஸ்டிங் ப்லாக்கர் விருது மாதிரி அரசியல் உலகத்துல நம்ம கலைஞர் சில விருதுகள் கொடுக்குறார் பாருங்க முதல்ல

பச்சோந்தி விருது: அடிக்கடி கூட்டணி மாறுகிறவர்களுக்கு....


இந்த விருதை முதலில் வாங்க வருபவர் மருத்துவர் இராமதாஸ் (இவர் மாதிரி பதவிக்கும் பணத்துக்காகவும் அடிக்கடி கூட்டணி மாறுவதற்க்கு ஆளே இல்லைங்க)

இரண்டாவதாக வருபவர் வைகோ (பாவம் திங்கவும் முடியாம மெல்லவும் முடியாம திரியுறாருங்க)

மூன்றாவதாக வருபவர் டி.ஆர் (அப்போ அப்போ ல.தி.மு.க அப்பிடின்னு ஒருகட்சி வச்சுக்கிடுறார் திடீர்ன்னு தி.மு.க வுக்கு வந்துடுறார்)

அடுத்து இண்ட்ரெஸ்டிங் பொலிடிசியன் விருது: சிறந்த அரசியல் நடத்துபவர்களுக்கு?!
இந்த விருதுக்கு முதலில் தேர்வானவர்: திரு.விஜயகாந்த் (கூட்டணியே இல்லாம எல்லா தேர்தல்லயும் போட்டியிடுறதுக்கு)

அடுத்ததாக செல்வி. ஜெயலலிதா(இவங்க இல்லாட்டினா நான் எப்படி அரசியல் நடத்துறது?

அடுத்து அழகிரி (முதல் தடவையே பிரம்மாண்டமா ஜெயிச்சதுக்கு)

அடுத்தது ஸ்டாலின் (இவ்ளோ நாளா அமைதியா இருக்குறதுக்கு)

அடுத்து க.அன்பழகன் (பொறுமையா இருப்பதற்க்கு)

அடுத்து ஆற்காடு வீராசாமி(மின் பற்றாக்குறைக்கான கேள்விகளுக்கு திறமையா சமாளிச்சதுக்கு)


Post Comment

கலைஞர் திருவாரூர் விஜயம்

| August 5, 2009 | 31 comments |
அரசியலில் ஈடுபடப்போகும் இளைஞர்களுக்கு திருக்குவளையில் பிறந்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரும்,52 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரும்,40 வருடங்களாக தி.மு.க.தலைவராக இருப்பவருமான தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவுரைகள் வழங்குகிறார்.

முதல் முறையாக திருவாரூருக்கு விஜயம் செய்கிறார் வாருங்கள் .வந்து பயன் பெறுங்கள்.


நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்......

ஏதோ ஒரு விளம்பரத்தோட அப்பட்டமான எதிர் விளம்பரம் அந்த விளம்பரம் இங்கு வேண்டாமே............
.

Post Comment

அனானி பராசக்தியாய்...

| August 3, 2009 | 40 comments |
சும்மா கற்பனையா நம்ம நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் பேசிய பராசக்தி வசனத்தை ஒரு அனானி பேசுவதாக கற்பனையில் ...................
இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்து இருக்கிறது,
புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது,
ஆகவே இப்பதிவு விசித்திரமல்ல,
பதிவிடும் நான் புதுமையான மனிதனுமல்ல,
வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

பதிவுகளிலே அனானியாய் பின்னூட்டமிட்டேன்,பிரபல பதிவர்களை திட்டினேன்
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று,
இல்லை நிச்சயமாக இல்லை. பதிவுகளிலே அனானியாய் பின்னூட்டமிட்டேன்.
பதிவு நன்றாக இல்லை என்பதற்காக அல்ல. பதிவுலகம் பிரபல பதிவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பிரபல பதிவர்களை திட்டினேன் அவர் பிரபலம் என்பதற்காக அல்ல. பதிவு பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, பதிவுலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைஅனானி, அனானி என்கிறார்களே, இந்த அனானியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள பதிவுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் விட்ஜெட்கள் இல்லை என் பதிவில், படங்களுக்கு பாம்புகள் நெளிந்திருக்கின்றன. நல்லவர்களை தீண்டியதில்லை நான். ஆனால் தீயவர்களை தீண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! பதிவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? கத்தார்! அது லேப்டாப் வாங்க உதவியது. என்னை பதிவன் ஆக்கியது. அறிவை வளர்க்க நல்ல பதிவுகளை காண வந்தேன். மோசடி பதிவுகளில் ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாரே இந்த பிரபலபதிவர், இவர் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். நேரத்தை பறிகொடுத்தேன். பின்னூட்டங்களை எதிர்பார்த்து மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

அன்று காண வந்த பதிவை கண்டேன். நல்ல எண்ணமற்ற பதிவாக. ஆம் , பதிவின் பெயரோ முட்டை தோசை. நல்ல சாப்பாட்டின் பெயர். ஆனால் பதிவிலே விசயமில்லை. நன்றாக இருந்த பதிவுலகம் சீரழிந்துவிட்டது. கையில் கீபோர்ட். கண்களிலே காமம். பலரும் அந்த சூடான முட்டை தோசையை தேடினார்கள்,நானோ சுவையான முட்டை தோசையை தேடினேன்.

தோசைக்கு ஓட்டு போட்டனர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அந்த பதிவரின் பதிவில் உள்ள படத்தை கேட்டனர். பின்னூட்ட வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டாக இந்த பதிவிற்க்கு பின்னூட்டமிட முயன்றான். நானும் ஆபாச பின்னூட்டம் போட்டிருந்தால் முட்டைதோசை அப்போதே குப்பைக்கு போயிருக்கும்.

புதிய பதிவர்கள் தோசைக்கு பின்னூட்டட்டமிட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவர்கள் பதிவுக்கும் பின்னூட்டம் கேட்டனர். அதில் தலையானவன் இந்த சோப்பு.முட்டை தோசையில் உள்ளது உண்மையான ஜோக்கான்னு கேட்டிருக்கிறான் – பிரபலபதிவரின் பெயரால்,நல்ல மனசுக்காரரின் பெயரால். அவர் பதிவுலகத்தில் ஏதாவது எழுதியபடியாவது இருந்திருப்பார். அவரை பதிவுலகை விட்டு போகத்தூண்டியது இந்த சோப்புதான். தன் வலைப்பூவை இரக்கமற்ற பதிவுலகத்தில் விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. தன் வலைப்பூ ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவர் விரும்பவில்லை. அவரே ஹேக்செய்துவிட்டார். விருப்பமானவர்களைக் விரட்டுவது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறார் அவர். இது எப்படி குற்றமாகும்?

என் அபிமானம் விட்டுக் கொடுத்திருந்தால், ஜூனியர் விகடனில் ஒரு வாரம்,ஆனந்த விகடனில் ஒரு வாரம் – இடுகைகளை விலை கூறியிருந்தால், குங்குமத்தில் ஒரு வாரம் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த பதிவுலகம் விரும்புகிறது?

பிரபலம் எனும் பகட்டு என் அபிமானத்தை மிரட்டியது. பதிவுகளை அடுத்தடுத்து இட்டார். ஓட்டு என் அபிமானத்தை துரத்தியது. மீண்டும் பதிவுகள் இட்டார் ஓட்டுபெட்டியில்லாமல். பின்னூட்டம் என் அபிமானத்தை பயமுறுத்தியது. எழுதினார் எழுதினார் எழுதிக்கொண்டே இருந்தார். அந்த பின்னூட்ட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். காட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? எழுதவிட்டார்களா என் அபிமானத்தை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் பதிவுகளுக்கு பிரபலங்களாக மாறுகிறார்.

அனானி: யார் பதிவுமில்லை. அதுவும் என் பதிவுதான். என் அபிமானத்தின் பதிவு. பதிவுலகின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட நான் அனானியாய் பின்னூட்டமிட்டது என்ன தவறு? நான் அனானியாக பின்னூட்டமிட்டது ஒரு குற்றம். வலைப்பூவை ஹேக் செய்தது ஒரு குற்றம். நான் பிரபலத்தை தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்?முட்டை தோசைக்கு அலையவிட்டது யார் குற்றம்? பதிவின் குற்றமா? அல்லது பிரபலமென்ற பெயரைச் சொல்லி ஃபாலோவர்ஸை வளர்க்கும் வீணர்களின் குற்றமா? ஆபாச பதிவெழுதும் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பதிவர்களின்ன் குற்றமா? அல்லது பெண்பதிவருக்கு ஆபாச பின்னூட்டமிடும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப்பதிவர்ளை பதிவுலகிலே பதிவிட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது பிரபலங்களின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை அனானிகளும் முட்டை தோசைகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை பதிவுலகில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

சாராயம்:இதில் எழுதியிருப்பது அனைத்தும் கற்பனையே யாரையும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

தமிழிஷ்,தமிழ்மணத்தில் வாக்களிக்க மறவாதீர்கள்

Post Comment

நாங்களும்தான்...

| | 33 comments |
நாங்களும் டாய்லெட் போறோம்ல..........


நாங்களும் குளிக்கிறோம்ல..........


நாங்களும் குடிக்கிறோம்ல..........
நாங்களும் தொப்பை வச்சுருக்கோம்ல..........


நாங்களும் ஃப்ரண்ட்ஸ்தான்..........


நாங்களும் தம் அடிக்கிறோம்ல..........


நாங்களும் போட்டோ புடிக்கிறோம்ல..........
நாங்களும் சமைக்கிறோம்ல..........
நாங்களும் சைக்கிள் ஒட்டுவோம்ல..........Post Comment