பப்பு....இவன் பெரிய பருப்புங்க....

| July 14, 2009 | |
பப்பு என்னோட 8 வயது குட்டி ஃப்ரண்ட்ங்க அவன்கூட ஒரு நாள் ஆசையா சந்தோஷமா இருக்கலாம்ன்னு அவன பாக்க அவன் வீட்டுக்கு போனேனுங்க போனதுதாங்க தப்பு அவன் கேள்வி கேட்டே என்ன மண்டய காயவிட்டுட்டானுங்க அவனோட கேள்விக்கு நீங்க தான் பதில் சொல்லணும்

அவன் வீட்டுக்கு போனவுடனே பப்பு ஆசையா கூல்டிரிங்ஸ் கேட்டானேன்னு வாங்கித்தந்தா அவன் அத ஸ்ட்ரா போட்டு குடுச்சுக்கிட்டே கேட்டான் ஏன் மாம்ஸ் இந்த ஸ்ட்ரா போட்டு உறியுற மாதிரி தானே நாமளும் வீட்டுக்கு போர்வெல் போட்டு தண்ணிய உறியுறோம்? ஆமா பப்புனு சொன்ன எனக்கு அவன் அடுத்து கேட்ட கேள்வி தூக்கி வாரி போட்டது அப்படி என்ன கேட்டான்னு கேக்குறீங்களா? மாம்ஸ் இந்த கூல்டிரிங்ஸ் தீந்துடுச்சுன்னா வேற வாங்கிடலாம் அந்த தண்ணிர் தீந்து போச்சுன்னா வேற தண்ணீர் வாங்க முடியுமான்னு?

உங்களுக்கு எதுனா பதில் தெரியுதா?
சரி இத்தோட விட்டானான்னு பாத்தா மாம்ஸ் கடைக்கு போயி எனக்கு ஒரு கேர்ள் பொம்மை வாங்கித்தான்னு கேட்டான்.சரி சின்ன பையன் கேக்குறானேன்னு கடைக்கு போயி கேர்ள் பொம்மை வாங்கித்தந்தேன்.அவன் அதை பல முறை பாத்துட்டு?!ஏன் மாமா இதுகூட கார் ஸ்கூட்டர் இதெல்லாம் தர மாட்டாங்களா? அப்பிடின்னு கேட்டான்? ஏண்டா கேர்ள் பொம்மை வாங்குனா யார்டா ஸ்கூட்டர் ,கார் இதெல்லாம் தருவாங்க அது வேணும்ன்னா தனியா காசு போட்டு தாண்டா வாங்கணும்ன்னு சொன்னேன் அதுக்கு அவன் சொன்னான் அப்ப உன் ஃப்ரண்டு சரவணன் மாமாவுக்கு கல்யாணம் ஆனப்போ அந்த ஆண்டி கூடவே ஸ்கூட்டர்,கார் இதெல்லாம் குடுத்தாங்க தான! அப்போ இந்த பொம்மையும் கேர்ள் தான இது கூடயும் கார்,ஸ்கூட்டர் இதெல்லாம் குடுக்கணும்தான?அப்பிடின்னுட்டான்..

ஏனுங்க அவன் கேட்டது சரிதானா?

கடைக்கு போயிட்டு அப்பிடியே வரும் வழியில் மெயின் ரோட்டுல இருந்த ஒரு பெரிய ஆழ மரத்தை நாலு பேர் சேர்ந்து வெட்டிக்கொண்டிருந்தனர்.இதைப்பார்த்த பப்பு கேட்டான் ஏன் மாம்ஸ் இந்த மரத்த வெட்டுற நாலு பேரையும் கைது பண்ண போலீஸ் இன்னும் வரலைன்னு கேட்டான்?டேய் பப்பு உன்னோட தொல்லை தாங்க முடியலடா ! மரத்த வெட்டுனா போலீஸ் வராதுடான்னேன்.அதுக்கு பப்பு சொல்றான்..அப்ப நேத்து நியூஸ் பேப்பர்ல ஒரு மனுஷன தூங்கும் பொது வெட்டுன நாலுபேர் கைதுன்னு போட்ருந்துச்சே..டேய் அது மனுஷன வெட்டுனாதாண்டா போலீஸ் வரும் மரத்த வெட்டுனா போலீஸ் வராதுடான்னேன்.அதுக்கு அந்த பாவி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி! மாம்ஸ் மனுஷனுக்கும் உயிர் இருக்கு மரத்துக்கும் உயிர் இருக்கு அப்பறம் ஏன் மரத்த வெட்டுனவங்கள மட்டும் போலீஸ் கைது பண்ணக்கூடாதுன்னானுங்க?!.

இதுக்கு நான் என்னாங்க சொல்றது?
பப்புவோட வீட்டுக்கு நடந்து போகும்போது அப்படியே ஒரு சிகரெட்ட பத்தவச்சு புகைவிட்ட படியே வந்த என்னய பார்த்து பப்பு கேட்டான் ஏன் மாம்ஸ் நீ ஓட மாட்டேன்றன்னான்.டேய் பக்கத்துல தான வீடு இதுக்கு ஏன் ஓடணும்ன்னு? சொன்னேன்.அதுக்கு அவன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி ரயில்வண்டி புகை விட்டுக்கிட்டே ஓடுதில்லயா அதுமாதிரிதான நீயும் புகை விடுற அப்ப நீயும் ஓடணும்தான அப்பறம் ஏன் நடந்து வர்றன்னுட்டான்!?

ஏங்க இவனுக்கும் மட்டும் இப்படி தோணுது?போதும்டா பப்பு இன்னைக்கு இந்த கேள்விகளோட நிப்பாட்டிக்கோன்னு சொல்லிட்டு விடைபெற்றேன்.....


வசந்த் தெரியும் பப்பு யாருன்னு கேக்குறீங்களா? பப்பு நம்ம கற்பனை கதாபாத்திரம் தானுங்க...

இவருதாங்க அந்த பப்பு

Post Comment

47 comments:

Anonymous — July 15, 2009 at 1:29 AM said...

பப்பு கற்பனையா இருந்தாலும், கேட்ட கேள்விகள் அத்தனையும் சுளீர்.

Trackback by Unknown July 15, 2009 at 3:44 AM said...

பையன் விபரமான ஆளுதான். ரொம்பவே குழப்படிக்காறன இருக்கிறானே..... உங்களைப்போல......

நீங்கதான் சின்ன வயசுல எந்த கேள்வி எல்லாம் கேட்டதா பெசிக்கொல்ராங்க உண்மையா....

Trackback by Unknown July 15, 2009 at 3:56 AM said...

ஸ்கூட்டர் மேட்டர்!

படு ஜோர்

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 15, 2009 at 3:59 AM said...

பப்பு கற்பனை அல்ல..,

ஜூனியர் வசந்த்...,

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 15, 2009 at 4:01 AM said...

//அப்போ இந்த பொம்மையும் கேர்ள் தான இது கூடயும் கார்,ஸ்கூட்டர் இதெல்லாம் குடுக்கணும்தான?//

வீட்டில சொல்லிடறோம்.., கவலையே வேண்டாம் தல..,

Trackback by VISA July 15, 2009 at 5:32 AM said...

அருமை. கருத்துக்கேற்ற புகை படங்கள் மிகவும் ரசிதேன்

Trackback by அப்பாவி முரு July 15, 2009 at 5:58 AM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பப்பு கற்பனை அல்ல..,

ஜூனியர் வசந்த்...,//

ஐய்யயோ.,

இது தெரியாம வசந்து கல்யாணத்துக்கு வீட்டுல பொண்ணுப்பார்த்துக்கிட்டு இருக்காங்களே?

Trackback by sakthi July 15, 2009 at 6:09 AM said...

போதும்டா பப்பு இன்னைக்கு இந்த கேள்விகளோட நிப்பாட்டிக்கோன்னு சொல்லிட்டு விடைபெற்றேன்.....


ஆமா வசந்த் ரொம்ப உங்களை யோசிக்க வைத்துவிட்டார் போலும் பப்பு படம் அழகு

Anonymous — July 15, 2009 at 7:46 AM said...

கற்பனையின் உச்சம் பப்பு படிக்கும் போது தோனியது கற்பனை பாத்திரமோன்னு..வசந்த் சொல்ல வந்த கருத்தை கவிதையா கட்டுரையா வெறுப்பேத்தமா..எப்பவும் போல என்பதை விட அசத்தல சொல்லிட்ட.. நாளுக்கு நாள் உன் எழுத்தின் நடை அழகு மெருகேறுகிறது...எல்லாம் யோசிக்க வேண்டிய கேள்விகள் என்று வேள்வியாகுமோ......மென்மேலும் மெருகேறும் வசந்தின் தலத்திற்கு வாழ்த்துக்கள்( சந்தியா தாங்க்ஸ் சொல்லச் சொன்னாங்க பயங்கர குஷி விஜய் போட்டோ பார்த்ததில் இப்பத் தான் உங்க ப்லாக் முன்னப் போல அழகா இருக்காம்.. நேத்து உங்க பதிவு வெளிவரவில்லை என்னை கேள்வி கேட்டு கொன்னுட்டா...)

Trackback by சென்ஷி July 15, 2009 at 8:17 AM said...

:)

கற்பனை கதாபாத்திர கேள்விகள். நல்ல யுக்திதான்!

Trackback by வினோத் கெளதம் July 15, 2009 at 8:19 AM said...

யோவ் அவன் அவனும் மண்டைய பிச்சிக்கிட்டு என்ன எழுதுறதுன்னு தெரியமா உக்கார்ந்து இருக்கான் எங்க இருந்து தான் தினமும் நீ விதம் விதமா யோசிப்பனு தெரியுலையே..:)

நான் கூட உனக்கும் பதிவர் பப்புக்கும் எதோ சண்டயோனு நினச்சேன்..

Trackback by கலையரசன் July 15, 2009 at 8:50 AM said...

ஹி.. ஹி.. ஹி..
நல்லா கேள்விகேட்டான் போங்கோ!!

(தமிழனில்ல? இப்படிதான் சூடு, சொரணை இல்லாம படிச்சுட்டு சிரிப்பேன்!!)

Trackback by S.A. நவாஸுதீன் July 15, 2009 at 10:05 AM said...

இந்த பப்பு பருப்பு வேகுமா?. (வெந்தா நல்லா இருக்கும்). நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க வசந்த். வாழ்த்துக்கள்

Trackback by ஈரோடு கதிர் July 15, 2009 at 10:25 AM said...

போர்வெல் மேட்டர் சுருக்குனு தைக்கிறது..

மிகா நல்ல முயற்சி

Trackback by சிநேகிதன் அக்பர் July 15, 2009 at 10:57 AM said...

பப்பு உங்களை மட்டுமில்லை எங்களையும் யோசிக்க வைத்துவிட்டார். நியாயமான கேள்வி.

ஆன பப்பு ரொம்ப அழகு.

அப்புறம் நம்ம பக்கம் ஆளையே காணோம்.

Trackback by SUFFIX July 15, 2009 at 12:57 PM said...

பப்புவின் சந்தேகங்க‌ளும், பதிலகளும் அருமை வஸ்ந்த். சிந்திக்க வேண்டிய கற்பனை பதிவு. சூப்பர்.

Trackback by Rajeswari July 15, 2009 at 1:10 PM said...

ரொம்ப அருமை வசந்த்..சூப்பரா இருக்கு

Trackback by Rajeswari July 15, 2009 at 1:10 PM said...

ரொம்ப அருமை வசந்த்..சூப்பரா இருக்கு

Trackback by Rajeswari July 15, 2009 at 1:10 PM said...

ரொம்ப அருமை வசந்த்..சூப்பரா இருக்கு

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 15, 2009 at 1:11 PM said...

இந்த மாதிரி புள்ளைங்க தான் வேணும்


இந்தியாவை வல்லரசாக மாத்த ...

Trackback by சுசி July 15, 2009 at 1:12 PM said...

வழக்கம்போல சிந்தனைக்குரிய பதிவு வசந்த்.
பப்பு சோ ஸ்வீட். எட்டு மாச சைசில இருதுட்டு எட்டு வயசுக்கு பேசறானா இவன்.
இதுக்கப்புறமாவது புகை விடுறத விட்டுட்டீங்களா என்ன?
அப்டியே புதுசு புதுசா விஜய் படத்தையும் மாத்தி விட்டீங்கன்னா நாங்க ரசிச்சுகிட்டே படிப்போமே...

Trackback by ஆப்பு July 15, 2009 at 2:26 PM said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

Trackback by தீப்பெட்டி July 15, 2009 at 3:05 PM said...

கலக்கல் வசந்த்.. பின்னிட்டீங்க..

மீண்டும் ஒரு கலக்கல்..
(இது மீண்டு வந்த தளபதி கார்னருக்கு)

Trackback by தினேஷ் July 15, 2009 at 8:02 PM said...

கேர்ள் பொம்மை மேட்டர் சூப்பருங்கோ ..
பயபுள்ள பப்பு கிளரி எடுத்துருச்சே..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:28 PM said...

// சின்ன அம்மிணி said...
பப்பு கற்பனையா இருந்தாலும், கேட்ட கேள்விகள் அத்தனையும் சுளீர்.//

வாங்க சின்ன அம்மிணி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:41 PM said...

// சந்ரு said...
பையன் விபரமான ஆளுதான். ரொம்பவே குழப்படிக்காறன இருக்கிறானே..... உங்களைப்போல......

நீங்கதான் சின்ன வயசுல எந்த கேள்வி எல்லாம் கேட்டதா பெசிக்கொல்ராங்க உண்மையா....//

நன்றி சந்ரு

இன்னைக்கு சரியா ந் க்கு டபிள்யு அடிச்சு கண்டுபிடிச்சுட்டேனே....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:42 PM said...

// நட்புடன் ஜமால் said...
ஸ்கூட்டர் மேட்டர்!

படு ஜோர்//

நன்றி ஜமால் அண்ணா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:44 PM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பப்பு கற்பனை அல்ல..,

ஜூனியர் வசந்த்...,//

நஹி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:46 PM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அப்போ இந்த பொம்மையும் கேர்ள் தான இது கூடயும் கார்,ஸ்கூட்டர் இதெல்லாம் குடுக்கணும்தான?//

வீட்டில சொல்லிடறோம்.., கவலையே வேண்டாம் தல..,//

வேண்டாம்ன்னு கருத்து சொல்ற என்னயே வாங்க வைக்கிற முயற்சிய்யா ஆண்டவா....

கருத்துக்களுக்கு நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:46 PM said...

// VISA said...
அருமை. கருத்துக்கேற்ற புகை படங்கள் மிகவும் ரசிதேன்//

நன்றி விசா.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:48 PM said...

//அப்பாவி முரு said...
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பப்பு கற்பனை அல்ல..,

ஜூனியர் வசந்த்...,//

ஐய்யயோ.,

இது தெரியாம வசந்து கல்யாணத்துக்கு வீட்டுல பொண்ணுப்பார்த்துக்கிட்டு இருக்காங்களே?//

ஆமாங்க.....பப்புதான் ஜூனியர் வசந்த் சீனியர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:50 PM said...

// sakthi said...
போதும்டா பப்பு இன்னைக்கு இந்த கேள்விகளோட நிப்பாட்டிக்கோன்னு சொல்லிட்டு விடைபெற்றேன்.....


ஆமா வசந்த் ரொம்ப உங்களை யோசிக்க வைத்துவிட்டார் போலும் பப்பு படம் அழகு//

வருகைக்கு நன்றி சக்திக்கா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:53 PM said...

// தமிழரசி said...
கற்பனையின் உச்சம் பப்பு படிக்கும் போது தோனியது கற்பனை பாத்திரமோன்னு..வசந்த் சொல்ல வந்த கருத்தை கவிதையா கட்டுரையா வெறுப்பேத்தமா..எப்பவும் போல என்பதை விட அசத்தல சொல்லிட்ட.. நாளுக்கு நாள் உன் எழுத்தின் நடை அழகு மெருகேறுகிறது...எல்லாம் யோசிக்க வேண்டிய கேள்விகள் என்று வேள்வியாகுமோ......மென்மேலும் மெருகேறும் வசந்தின் தலத்திற்கு வாழ்த்துக்கள்( சந்தியா தாங்க்ஸ் சொல்லச் சொன்னாங்க பயங்கர குஷி விஜய் போட்டோ பார்த்ததில் இப்பத் தான் உங்க ப்லாக் முன்னப் போல அழகா இருக்காம்.. நேத்து உங்க பதிவு வெளிவரவில்லை என்னை கேள்வி கேட்டு கொன்னுட்டா...)//

தமிழுக்கு.....

தொடர் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தமிழ்

சந்தியாவுக்கு...

இனி அடிக்கடி விஜய் படங்கள் அழகா இடம்பெறும்...தங்கள் தவறாத வருகைக்கு மிக்க நன்றிகள் சந்தியா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:54 PM said...

//சென்ஷி said...
:)

கற்பனை கதாபாத்திர கேள்விகள். நல்ல யுக்திதான்!//

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சென்ஷி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:55 PM said...

//வினோத்கெளதம் said...
யோவ் அவன் அவனும் மண்டைய பிச்சிக்கிட்டு என்ன எழுதுறதுன்னு தெரியமா உக்கார்ந்து இருக்கான் எங்க இருந்து தான் தினமும் நீ விதம் விதமா யோசிப்பனு தெரியுலையே..:)

நான் கூட உனக்கும் பதிவர் பப்புக்கும் எதோ சண்டயோனு நினச்சேன்//

மிக்க நன்றி வினோத் நான் ரொம்ப யோசிக்கிறேனோ?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:56 PM said...

//கலையரசன் said...
ஹி.. ஹி.. ஹி..
நல்லா கேள்விகேட்டான் போங்கோ!!

(தமிழனில்ல? இப்படிதான் சூடு, சொரணை இல்லாம படிச்சுட்டு சிரிப்பேன்!!)//

நீங்க நல்லவருங்க......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:59 PM said...

// S.A. நவாஸுதீன் said...
இந்த பப்பு பருப்பு வேகுமா?. (வெந்தா நல்லா இருக்கும்). நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க வசந்த். வாழ்த்துக்கள்//

நன்றி நவாஸ் கருத்துக்கும் விருதுக்கும்.......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 9:59 PM said...

கருத்துக்கு மிக்க நன்றி கதிர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:00 PM said...

வருகைக்கு நன்றிகள் அக்பர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:08 PM said...

// ஷ‌ஃபிக்ஸ் said...
பப்புவின் சந்தேகங்க‌ளும், பதிலகளும் அருமை வஸ்ந்த். சிந்திக்க வேண்டிய கற்பனை பதிவு. சூப்பர்.//

சஃபி வருகைக்கு மிக்க நன்றிகள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:09 PM said...

// Rajeswari said...
ரொம்ப அருமை வசந்த்..சூப்பரா இருக்கு//

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:10 PM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இந்த மாதிரி புள்ளைங்க தான் வேணும்


இந்தியாவை வல்லரசாக மாத்த ...//

ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க ஸ்டார்ஜன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:12 PM said...

// சுசி said...
வழக்கம்போல சிந்தனைக்குரிய பதிவு வசந்த்.
பப்பு சோ ஸ்வீட். எட்டு மாச சைசில இருதுட்டு எட்டு வயசுக்கு பேசறானா இவன்.
இதுக்கப்புறமாவது புகை விடுறத விட்டுட்டீங்களா என்ன?
அப்டியே புதுசு புதுசா விஜய் படத்தையும் மாத்தி விட்டீங்கன்னா நாங்க ரசிச்சுகிட்டே படிப்போமே...//

சாப்புடறத நிப்பாட்டிடலாம் போல இந்த சிகரெட்ட விட முடியல சுசி

விஜய் ரசிகையா சுசி?

மிக்க நன்றி சுசி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:13 PM said...

//ஆப்பு said...
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!//

நல்லா அடிங்கப்பு பதிவுகளை படித்தேன்

ஏன் தங்களுக்கு பொல்லாப்பு?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:14 PM said...

//தீப்பெட்டி said...
கலக்கல் வசந்த்.. பின்னிட்டீங்க..

மீண்டும் ஒரு கலக்கல்..
(இது மீண்டு வந்த தளபதி கார்னருக்கு)//

கொஞ்ச நாளா கவனிக்காம விட்டுட்டேன் கனேஷ் நன்றிகள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 15, 2009 at 10:15 PM said...

//சூரியன் said...
கேர்ள் பொம்மை மேட்டர் சூப்பருங்கோ ..
பயபுள்ள பப்பு கிளரி எடுத்துருச்சே..//

கருத்துக்கள் புரிந்தமைக்கு மிக்க நன்றி சூரியன்

Trackback by SUMAZLA/சுமஜ்லா July 20, 2009 at 11:09 AM said...

சோ க்யூட் பப்பு!