நான் தமிழக முதல்வரானால்.....

| July 1, 2009 | |
சின்னப்பையனின் சின்ன கனவுகள்

நான் தமிழக முதல்வரானால்.......

1.ஆண்கள் வேட்டி சட்டையும்,பெண்கள் சேலை அணிவதும் கட்டாயமாக்கப்படும்...

2.கல்வி விண்ணப்பத்திலிருந்து ஜாதி பிரிவு நீக்கப்படும்...

3.ஆரம்ப பள்ளி சேரும் வயது குறைந்தது ஐந்தாக நிர்ணயிக்கப்படும்...

4.விவசாய தொழிலில் ஈடுபடும் மக்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி,வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்...

5.திருமணங்கள் நடத்தி வைக்க இலவச திருமண மையங்கள் திறக்கப்படும்...

6.தொலைக்காட்சி நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்...

7.திரையரங்குகளுக்கு வரி விதிப்பு நீக்கப்படும்...

8.எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்...

9.பெற்றோரை ஆதரவின்றி நடு ரோட்டில் தவிக்கவிடுபவர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்...

10.எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டு போடாதோர்களுக்கு அரசு சலுகைகள் அனைத்தும் தடை செய்யப்படும்...

11.ஆரம்ப கல்வியிலிருந்தே ஹிந்தி கட்டாய பாடமாக்கப்படும்...

12.அத்தியாவசிய பொருள்களில் கலப்படம்,போலி பொருள் விற்க்கும் விற்பனையாளர்கள் வீடு,கடை, நிலம்,சொத்துக்கள் யாவும் ஜப்தி செய்யப்படும்...

13.அனாதைகள் அரசால் தத்தெடுக்கப்பட்டு படிக்கவைக்கப்பட்டு அரசு வேலை தரப்படும்...

14.படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு எந்த ஒரு ஜாமீனுமின்றி லோன் வழங்கி சுய தொழில் செய்ய அரசு உதவும்...

15.அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் லஞ்சம் வாங்கினால் அன்றே வேலை நீக்கம் செய்யப்பட்டு அதுவரை அவர்கள் வாங்கிய சம்பளத்தொகை அனைத்தும் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்...

16.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்...

17.வரதட்ச்சணை வாங்கும் மணமகன் திருமணம் புரிய தடை விதிக்கப்படும்...


18.அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி,கல்லூரிகள் தடை செய்யப்பட்டு அரசே ஏற்று நடத்தும்...

19.வழக்குகள் அனைத்துக்கும் ஒரே தீர்ப்பு மட்டும் வழங்கப்படும்...

20.அளவுக்கு அதிக சொத்து சேர்ப்பவர்களின் அதிக சொத்து வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும்....

இப்போதைக்கு இது மட்டும்தான்.......

தொடரும்......
.

Post Comment

55 comments:

Trackback by ஊர்சுற்றி July 1, 2009 at 10:32 PM said...

கனவு நல்லாத்தான் காண்றீங்க அப்பு.... :)

Trackback by சிநேகிதன் அக்பர் July 1, 2009 at 10:57 PM said...

ஏன் வசந்த் சமுகத்தின் மேல் இவ்வளவு கோபம்.

Trackback by Suresh July 1, 2009 at 11:14 PM said...

நல்லா இருக்குயா உன் டீலு ;) நல்ல வேளை ஆகவில்லை

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

Trackback by தினேஷ் July 2, 2009 at 12:40 AM said...

அடிச்சு விடுடா சாமி ..
இதெல்லாம் நடக்குமா .. முதல்வரானாலும் உங்க கூட்டணி பேப்பயலுவ இதை நிறைவேற்ற விட்ருவாங்களா ?

Trackback by தினேஷ் July 2, 2009 at 12:42 AM said...

எதிர்கட்சி வகையறாக்கள் கவலை இல்லை எப்படியும் வெளியே போய்டுவாங்க .. ஆனால் கூட இருக்கிற பயலுக ?

Trackback by தினேஷ் July 2, 2009 at 12:49 AM said...

எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்...

இந்த லிஸ்ட்ல TRa சேர்க்கவும்.

Trackback by தினேஷ் July 2, 2009 at 12:51 AM said...

விவசாய தொழிலில் ஈடுபடும் மக்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி,வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்

இது மட்டுமாவது எதாவது ஒரு புண்ணியவான் நிறைவேத்துனால் ரொம்ப சந்தோஷம்..

Trackback by சுசி July 2, 2009 at 1:01 AM said...

அப்டியே இருபத்தி ஒண்ணாவதா சுசியோட பதிவுகள எல்லாரும் கண்ண்டிப்பா படிச்சாகணும்னு போட்ருங்க வருங்கால முதல்வரே...

Trackback by Unknown July 2, 2009 at 3:47 AM said...

நல்ல எண்ணம் வசந்த் ...


முதலாவதா சொல்லியிருக்கீங்களே, அந்த மேட்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும், பேச்செல்லாம் பெருசா பேசுவாங்க ‘தமிழ்’ என்றும் நமது ‘கலாச்சாரம்’ என்றும் ஆனால் செயலில் இருக்காது ...

Trackback by பழமைபேசி July 2, 2009 at 4:23 AM said...

சீக்கிரமே ஆகுங்க...

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 2, 2009 at 6:21 AM said...

//.அளவுக்கு அதிக சொத்து சேர்ப்பவர்களின் அதிக சொத்து வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும்....
//

உழைத்து சம்பாதிப்பவர்களின் சொத்துக்களைக் கூடவா வாங்கி விடுவீர்களா.. தல

அப்படிஎன்றால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உழைக்கும் எண்ணமே இருக்காதே தல...

அப்போது நாடு எங்கே முன்னேறும்..,

வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் மேலே வருவது எப்போது தல...?

ஏழைகளை எப்போதும் ஏழைகளாவே வைத்திருக்க உத்தேசமா....!

Trackback by மயாதி July 2, 2009 at 6:54 AM said...

ரொம்ப ஓவரா இல்ல...

Trackback by ஈரோடு கதிர் July 2, 2009 at 7:16 AM said...

//வழக்குகள் அனைத்துக்கும் ஒரே தீர்ப்பு மட்டும் வழங்கப்படும்...//

சரியா!!!???

Trackback by சுந்தர் July 2, 2009 at 8:56 AM said...

//எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்.//

விஜய், அஜித் சேர்க்கவும்

Trackback by S.A. நவாஸுதீன் July 2, 2009 at 9:38 AM said...

சில நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டாலும் பல நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கின்றீர்கள் நண்பா.

ஆனா இதெல்லாம் நடக்குமான்னா அதுக்கு பதில் தெரியாது தான்.

Trackback by கலையரசன் July 2, 2009 at 10:19 AM said...

//எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்//
ஏய்ய்ய்ய்ய்ய்... என் தான தலைவன நடிக்ககூடாதுன்னு
சொல்ல நீ யாருடா!!

//பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்//
தூக்கு தண்டனை குடுப்பா!!

Trackback by தீப்பெட்டி July 2, 2009 at 10:21 AM said...

1 ஐயும் 11 ஐயும் தவிர்த்த மற்றவைகளுக்கு எனது ஆதரவு பாஸ்..

Trackback by IKrishs July 2, 2009 at 11:15 AM said...

Yen Mootha Maganukku Mathiya amaichar padhaviyum,Maganukku thunai mudalvar padhaviyum oru naal vithiyasathil tharappadum...
Idhaiyum Add pannalame.. :)

Trackback by இது நம்ம ஆளு July 2, 2009 at 12:03 PM said...

அண்ணா,
என்னுடய ஒட்டு உங்களுக்கு தான்

Trackback by அப்பாவி முரு July 2, 2009 at 12:44 PM said...

வசந்த் இந்தியாவில் நுழைய தடை...

ஒ/ம்,

நடுவண் அரசு.

Trackback by அப்பாவி முரு July 2, 2009 at 12:45 PM said...

//19.வழக்குகள் அனைத்துக்கும் ஒரே தீர்ப்பு மட்டும் வழங்கப்படும்...//

அது எப்பிடி, எல்லா கேசுக்கும் ஒரே தீர்ப்பு?

Trackback by sakthi July 2, 2009 at 3:46 PM said...

ஆண்கள் வேட்டி சட்டையும்,பெண்கள் சேலை அணிவதும் கட்டாயமாக்கப்படும்...

ஏன் எங்க மேல இப்படி ஒரு கொலைவெறி

Trackback by sakthi July 2, 2009 at 3:47 PM said...

16.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்...

17.வரதட்ச்சணை வாங்கும் மணமகன் திருமணம் புரிய தடை விதிக்கப்படும்..

இதை வரவேற்கிறேன் வருங்கால முதல்வரே...

Trackback by sakthi July 2, 2009 at 3:48 PM said...

அத்தியாவசிய பொருள்களில் கலப்படம்,போலி பொருள் விற்க்கும் விற்பனையாளர்கள் வீடு,கடை, நிலம்,சொத்துக்கள் யாவும் ஜப்தி செய்யப்படும்..

அருமை...

Anonymous — July 2, 2009 at 7:48 PM said...

vasanth really such a nice posting....ஒரு உண்மைத் தெரியுது இளைஞனின் கையில் இந்தியா உண்மையில் ஓளிரும்....உண்மையாவே ரொம்ப அசந்திட்டேன்...விளையாட்டாய் படங்கள் இட்டு அதற்கு வார்த்தை மெருகூட்டி அசத்திய வசந்தின் உள் மனதின் நல்லெண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்ட வார்த்தைகளாய்....ஒரு கனவே கண்டு விட்டேன்...மேற்கூறியவை நடந்தால் நாட்டின் பொழிவு மேம்பட்ட நிலை... நாகரீக இளைஞனின் மனதின் ஓட்டம் சீரான சிறந்த ஓட்டம்..எனக்கு முடிக்கவே மனமில்லை......

Trackback by Beski July 2, 2009 at 9:16 PM said...

எல்லாம் நல்லா இருக்கு மச்சான்.
---
//இப்போதைக்கு இது மட்டும்தான்.......//
இன்னும் வருமோ?
---
படம் இல்லாத உங்க பதிவ இப்பத்தான் பாக்குறேன்.

Trackback by ஜோ/Joe July 3, 2009 at 10:52 AM said...

//1.ஆண்கள் வேட்டி சட்டையும்,பெண்கள் சேலை அணிவதும் கட்டாயமாக்கப்படும்...
11.ஆரம்ப கல்வியிலிருந்தே ஹிந்தி கட்டாய பாடமாக்கப்படும்..//

என்ன கொடுமை சார் இது?

இதெல்லாம் உங்க ஊட்டுல செய்ய வேண்டியது ..நாட்டுல இல்ல.

Trackback by அன்புடன் அருணா July 3, 2009 at 11:44 AM said...

நல்ல எண்ணம் உள்ளவங்களை எங்கே வாழவைக்கப் போகிறார்கள்????

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:18 PM said...

//ஊர்சுற்றி said...
கனவு நல்லாத்தான் காண்றீங்க அப்பு.... :)//

என்ன செய்யுறது கனவுதானே வாழ்க்கையே....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:19 PM said...

//அக்பர் said...
ஏன் வசந்த் சமுகத்தின் மேல் இவ்வளவு கோபம்.//

கோபமல்ல......அக்கறை.....

நன்றி அக்பர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:20 PM said...

// Suresh said...
நல்லா இருக்குயா உன் டீலு ;) நல்ல வேளை ஆகவில்லை//

பெங்களூர்ல தான இருக்கீங்க அதான் அப்பிடி சொல்லுறீன்ங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:20 PM said...

//சூரியன் said...
அடிச்சு விடுடா சாமி ..
இதெல்லாம் நடக்குமா .. முதல்வரானாலும் உங்க கூட்டணி பேப்பயலுவ இதை நிறைவேற்ற விட்ருவாங்களா ?//

விடமாட்டாங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:22 PM said...

// சூரியன் said...
எதிர்கட்சி வகையறாக்கள் கவலை இல்லை எப்படியும் வெளியே போய்டுவாங்க .. ஆனால் கூட இருக்கிற பயலுக ?//

காலை வாரிடுவாங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:23 PM said...

// சூரியன் said...
எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்...

இந்த லிஸ்ட்ல TRa சேர்க்கவும்.//

அவரும் ஒரு அரசியல் வாதி தானே அதனால விலக்கு அளிக்கப்படுகிறது

நன்றி சூரியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:29 PM said...

//சுசி said...
அப்டியே இருபத்தி ஒண்ணாவதா சுசியோட பதிவுகள எல்லாரும் கண்ண்டிப்பா படிச்சாகணும்னு போட்ருங்க வருங்கால முதல்வரே...//

போட்ருவோம் சுசி நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:30 PM said...

// நட்புடன் ஜமால் said...
நல்ல எண்ணம் வசந்த் ...


முதலாவதா சொல்லியிருக்கீங்களே, அந்த மேட்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும், பேச்செல்லாம் பெருசா பேசுவாங்க ‘தமிழ்’ என்றும் நமது ‘கலாச்சாரம்’ என்றும் ஆனால் செயலில் இருக்காது ...//

யாரு என்னயா சொல்றீங்கண்ணே?

இல்ல நம்ம தமிழ் குடிதாங்கிகளையா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:31 PM said...

//பழமைபேசி said...
சீக்கிரமே ஆகுங்க...//

நன்றி பழமை பேசியண்ணே

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:35 PM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//.அளவுக்கு அதிக சொத்து சேர்ப்பவர்களின் அதிக சொத்து வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும்....
//

உழைத்து சம்பாதிப்பவர்களின் சொத்துக்களைக் கூடவா வாங்கி விடுவீர்களா.. தல

அப்படிஎன்றால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உழைக்கும் எண்ணமே இருக்காதே தல...

அப்போது நாடு எங்கே முன்னேறும்..,

வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் மேலே வருவது எப்போது தல...?

ஏழைகளை எப்போதும் ஏழைகளாவே வைத்திருக்க உத்தேசமா....!//

இந்த கொள்கை திட்டம் கைவிடப்படுகிறது

மறு பரீசலனைக்கு பிறகு வரிகட்டாதவர்களின் கொள்ளை பணம்
கறுப்பு பணம் அரசாங்க நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

நன்றி டாக்டர் தலைவரே

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:45 PM said...

//மயாதி said...
ரொம்ப ஓவரா இல்ல...//


இல்ல நான் இங்க சொன்னது வெறும் இருவது கருத்துக்கள் தான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:50 PM said...

கதிர் said...
//வழக்குகள் அனைத்துக்கும் ஒரே தீர்ப்பு மட்டும் வழங்கப்படும்...//

சரியா!!!???
அப்பாவி முரு said...
//19.வழக்குகள் அனைத்துக்கும் ஒரே தீர்ப்பு மட்டும் வழங்கப்படும்...//

அது எப்பிடி, எல்லா கேசுக்கும் ஒரே தீர்ப்பு?

இரண்டுபேரும் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க

கீழ் நீதிமன்ரத்துல ஒரு தீர்ப்பு
மேல் நீதிமன்ற்த்துல ஒருதீர்ப்பு
உயர் நீதிமன்றத்துல ஒரு தீர்ப்பு

உச்ச நீதி மன்றத்துல ஒரு தீர்ப்பு

இப்படி ஒவ்வொரு ஒரு வழக்கு நிறைய நீதி மன்றத்துல நடக்குறதால்
ஏகப்பட்ட நேர விரயம்,பண்விரயம்

இதுக்கு ஏதாவது ஒரு நீதி மன்றத்துல குடுக்குற தீர்ப்பே இறுதிய்யாகும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:51 PM said...

// சுந்தர் said...
//எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்.//

விஜய், அஜித் சேர்க்கவும்/

அவர்கள் ஒன்றும் ஆபாச படங்கள் அவ்வளவு அதிகம் எடுப்பதில்லையே

நன்றி சுந்தர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:52 PM said...

//S.A. நவாஸுதீன் said...
சில நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டாலும் பல நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கின்றீர்கள் நண்பா.

ஆனா இதெல்லாம் நடக்குமான்னா அதுக்கு பதில் தெரியாது தான்.//

நடப்பது நன் கையில் தான் இல்லை

கவர்மெண்டு கையிலே இருக்கே நவாஸ்

நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:53 PM said...

// கலையரசன் said...
//எஸ்.ஜே.சூர்யா,சிம்பு நடிக்க தடை செய்யப்படும்//
ஏய்ய்ய்ய்ய்ய்... என் தான தலைவன நடிக்ககூடாதுன்னு
சொல்ல நீ யாருடா!!

//பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்//
தூக்கு தண்டனை குடுப்பா!!
//

டேய் மச்சான் நீயுமா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:55 PM said...

// தீப்பெட்டி said...
1 ஐயும் 11 ஐயும் தவிர்த்த மற்றவைகளுக்கு எனது ஆதரவு பாஸ்..//

1. நம்ம கலாச்ச்சாரம்
11. நம்ம தேசிய மொழி தெரியாம எப்படி தமிழ் நாடு தாண்டி ஊர் சுற்றக்கூட முடியல......

நன்றி தீப்பெட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:57 PM said...

//UM said...
Yen Mootha Maganukku Mathiya amaichar padhaviyum,Maganukku thunai mudalvar padhaviyum oru naal vithiyasathil tharappadum...
Idhaiyum Add pannalame.. :)//
இது நடைமுறைக்கு வரவேண்டியது பற்றிய பதிவு

அதுவோ நடை முறைக்கு வந்தது

நன்றி உம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:58 PM said...

//இது நம்ம ஆளு said...
அண்ணா,
என்னுடய ஒட்டு உங்களுக்கு தான்//

நன்றி இது நம்ம ஆளு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:58 PM said...

//அப்பாவி முரு said...
வசந்த் இந்தியாவில் நுழைய தடை...

ஒ/ம்,

நடுவண் அரசு.//

போட்டாலும் போடு வாங்க முரு

நன்றி முரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 12:59 PM said...

// sakthi said...
ஆண்கள் வேட்டி சட்டையும்,பெண்கள் சேலை அணிவதும் கட்டாயமாக்கப்படும்...

ஏன் எங்க மேல இப்படி ஒரு கொலைவெறி//

கொலை வெறி இல்ல கலாச்சார வெறி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 1:00 PM said...

sakthi said...
16.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்...

17.வரதட்ச்சணை வாங்கும் மணமகன் திருமணம் புரிய தடை விதிக்கப்படும்..

இதை வரவேற்கிறேன் வருங்கால முதல்வரே.


sakthi said...
அத்தியாவசிய பொருள்களில் கலப்படம்,போலி பொருள் விற்க்கும் விற்பனையாளர்கள் வீடு,கடை, நிலம்,சொத்துக்கள் யாவும் ஜப்தி செய்யப்படும்..

அருமை...


நன்றி சக்திக்கா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 1:02 PM said...

//தமிழரசி said...
vasanth really such a nice posting....ஒரு உண்மைத் தெரியுது இளைஞனின் கையில் இந்தியா உண்மையில் ஓளிரும்....உண்மையாவே ரொம்ப அசந்திட்டேன்...விளையாட்டாய் படங்கள் இட்டு அதற்கு வார்த்தை மெருகூட்டி அசத்திய வசந்தின் உள் மனதின் நல்லெண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்ட வார்த்தைகளாய்....ஒரு கனவே கண்டு விட்டேன்...மேற்கூறியவை நடந்தால் நாட்டின் பொழிவு மேம்பட்ட நிலை... நாகரீக இளைஞனின் மனதின் ஓட்டம் சீரான சிறந்த ஓட்டம்..எனக்கு முடிக்கவே மனமில்லை......//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 1:03 PM said...

//எவனோ ஒருவன் said...
எல்லாம் நல்லா இருக்கு மச்சான்.
---
//இப்போதைக்கு இது மட்டும்தான்.......//
இன்னும் வருமோ?
---
படம் இல்லாத உங்க பதிவ இப்பத்தான் பாக்குறேன்.//

இனிமேல் நிறைய பார்ப்பீங்க....

நன்றி எவனோ ஒருவன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 1:04 PM said...

//ஜோ/Joe said...
//1.ஆண்கள் வேட்டி சட்டையும்,பெண்கள் சேலை அணிவதும் கட்டாயமாக்கப்படும்...
11.ஆரம்ப கல்வியிலிருந்தே ஹிந்தி கட்டாய பாடமாக்கப்படும்..//

என்ன கொடுமை சார் இது?

இதெல்லாம் உங்க ஊட்டுல செய்ய வேண்டியது ..நாட்டுல இல்ல.//

வ்வூட்டுல மட்டும் கட்டுறதுக்கு வேட்டி சட்டைனா ஏன் நீங்க எல்லாம் கல்யாணத்தன்னிக்கு மட்டும் வேட்டி சட்டை போட்டுக்குறீங்க.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 3, 2009 at 1:06 PM said...

// அன்புடன் அருணா said...
நல்ல எண்ணம் உள்ளவங்களை எங்கே வாழவைக்கப் போகிறார்கள்????//

வாழவும் விடாமல் சாகவும் விடாமல்

அணுஅணுவாய் சித்திரவதை செய்வார்கள்

நன்றி அருணாக்கா......

Trackback by ziawithu.blogspot.com July 21, 2009 at 7:32 PM said...

Really its fantastic machi

Trackback by யாரோ ஒருவர் October 6, 2009 at 9:02 PM said...

என்ன வசந்த் மதிய உணவுக்கு முட்டை போடுவீங்களா மாட்டீங்களா?
ஓட்டு போடாத சோம்பேறீங்கள அடிச்சே தொரத்தணும்.