12 B யில் தூர்தர்ஷன்

| July 17, 2009 | |
12 B படத்துல வர்ற மாதிரி ஒரு விஷயம் இரண்டு விதமா நடப்பது பற்றி....

தூர்தர்ஷனுக்கு போட்டியா சன்,விஜய்,ஜெயா,கலைஞர்,இந்த மாதிரி சேனல்கள் வந்த பிறகு ...

இந்திய தொலைக்காட்ச்சிகளில் முதல் முறையாக போன்ற வீர வசனங்கள்....

நான் நடிக்க வராட்டி டாக்டர் ஆயிருப்பேன்ற நடிக நடிகையரின் உலக முக்கியத்துவமான பேட்டிகள் .....

டாப் டென் மூவிஸ்ல ரெட்டனங்கால் போட்டவரோட விமர்ச்சனம்.....

மச்சான் எப்டி இர்க்கீன்க அப்பிடின்றா நமீதா வோட நாட்டிய கலையை வளர்க்கும் நடன நிகழ்ச்சி....

சினேகா ஸ்ரெயா அசின் ஆகியோரின் உருப்படியான பொது விளம்பரங்கள்....

அர்ஜுன் அம்மா யாரு?ன்ற பொது அறிவு கேள்விகள்....

சித்தி,கோலங்கள் போன்ற சமூக தொடர்கள்....

where is the party போன்ற சிந்தனைகளை வளர்க்கும் பாடல்கள்....

போன்ற சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிச்சோம்/.....


இப்போ இந்த தொலைக்காட்ச்சிகள் இல்லாம வெறும் தூர்தர்ஷன் மட்டும் இருந்துருந்தா என்னா நடந்துகிட்டு இருக்கும்......

எல்லாருக்கும் எப்போடா ஞாயிற்றுக்கிழமை வரும்? சினிமா பாக்கலாம் அப்பிடி தோணும்....

நல்ல திரைப்பாடல்கள் ஒலியும் ஒளியுமில் மட்டுமே அதுவும் வெள்ளிக்கிழமை மட்டுமே காண முடியும்..

நல்ல திரைப்படங்களை தியேட்டரில் மட்டுமே காணும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்....

வயலும் வாழ்வுமில் விவசாய சிந்தனைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.......

திரைப்பட நடிகைகளுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் இருந்திருக்காது.......

மகாபாரதத்தை தொடர்ந்து பூம்புகார்,வீரபாண்டிய கட்டபொம்மன்,போன்ற தொடர்கள் வந்திருக்கலாம்....

கேபிள் பில் மாத பட்ஜெட்டில் குறைந்திருக்கும்....

நடு நிலை செய்திகள் மட்டுமே தெரிந்திருக்கலாம்....

காது கேளாதோர் செய்திகளும் ரசித்து கொண்டிருப்போம்.....

காலை பகல் இரவுக்கு சரியான நேரத்தில் மனைவியின் உணவு கணவர்களுக்கு கிடைக்கும்...

பக்கத்து வீட்டுக்காரவங்க சொந்த பந்தங்களோட பேசிட்டு இருக்க நேரம் கிடைத்திருக்கும்... குழந்தைகளுக்கு விளையாட நேரம் , அம்மாவின் அதிக கவனிப்பு மற்றும் அவர்களுக்கு பிடித்தமான சக்தி மான் போன்ற தொடர்களை ரசித்திருக்கலாம்....


இதுபோல அடுத்து மொபைல் தொலை பேசிக்கு 12B யில் தொலைபேசியாரும் இத சீரியஷா எடுத்துக்க வேணாம் ஃப்ரியா வுடு மாமு......

Post Comment

29 comments:

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 17, 2009 at 10:13 PM said...

நாந்தான் முதல்ல

சூப்பர் வசந்த்

ரசித்தேன் சிரித்தேன்

Trackback by jothi July 17, 2009 at 11:16 PM said...

ஞாயிறு காலை 6:30 க்கு வரும் சித்ராலயாவை விட்டு விட்டீர்களே,..

நல்ல பதிவு வசந்த்,..

Trackback by Unknown July 17, 2009 at 11:26 PM said...

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்

Trackback by தினேஷ் July 17, 2009 at 11:56 PM said...

மாமு நல்லாதான் இருக்கு..

//யாரும் இத சீரியஷா எடுத்துக்க வேணாம் ஃப்ரியா வுடு மாமு.....//

இது ஏன்மாமு ஊட்டுக்கு ஆட்டோ வந்துரும்னு முன்னெச்சரிக்கையா?

சித்ராலயா புதன்கிழமை பார்த்த ஞாபாகம்

Trackback by VISA July 18, 2009 at 5:42 AM said...

//நான் நடிக்க வராட்டி டாக்டர் ஆயிருப்பேன்ற நடிக நடிகையரின் உலக முக்கியத்துவமான பேட்டிகள் .....
//

நடிக்க வந்தப்புறமும் செல பேரு டாக்டர் ஆயிடுறாங்களே.....

நல்ல கற்பனை பதிவு

Trackback by தேவன் மாயம் July 18, 2009 at 7:24 AM said...

பக்கத்து வீட்டுக்காரவங்க சொந்த பந்தங்களோட பேசிட்டு இருக்க நேரம் கிடைத்திருக்கும்... குழந்தைகளுக்கு விளையாட நேரம் , அம்மாவின் அதிக கவனிப்பு மற்றும் அவர்களுக்கு பிடித்தமான சக்தி மான் போன்ற தொடர்களை ரசித்திருக்கலாம்....
///

உண்மைதான். நேரம் ரொம்பக்கிடைத்திருக்கும்!!

Trackback by தேவன் மாயம் July 18, 2009 at 7:28 AM said...

உங்கள் விருதுக்கு நன்றி!
விரைவில்
பதிவிடுகிறேன்!!

Trackback by தேவன் மாயம் July 18, 2009 at 7:29 AM said...

வசந்தின் சிந்தனைகள் தனி ட்ராக்!!

Anonymous — July 18, 2009 at 7:42 AM said...

பழமையை விரும்பும் புதுமை..
வசந்தத்தை விழையும் வசந்த்.....

Trackback by ஈரோடு கதிர் July 18, 2009 at 8:07 AM said...

வசந்த்

அற்புதமான பதிவு...
பாராட்ட வார்த்தைகளே இல்லை

தூர்தர்ஷன் பற்றிய வரிகள் கலைந்து போன கனவு போல் இருக்கிறது

Trackback by mouli July 18, 2009 at 9:14 AM said...

உண்மையில் நீங்க‌ள் குறிப்பிட்டிருக்கும் நிக‌ழ்ச்சிக‌ளில் சில‌ இன்னும் டிடியில் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌, ம‌த்திய‌ அர‌சின் டிடி டைரெக்ட் டிஷ்ஷை சில‌ வ‌ருஷ‌ங்க‌ள் முன் வாங்கி மாட்டி வீட்டில் ம‌றுப‌டியும் டிடியை அறிமுக‌ப்ப‌டுத்தினேன், ஆனால் வீட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளின் கேபிள் போதை அத‌னை ர‌சிக்க‌ விட‌வில்லை, ம‌றுப‌டியும் கேபிள் அர‌க்க‌ன் வ‌ந்துவிட்டான், இப்பொழுது டிஷ் தூங்கிக் கொண்டிருக்கிற‌து, இந்த‌ கேபிள் போதை அழியாத‌ வ‌ரையில் ந‌ம் நாடு வ‌ல்ல‌ர‌சாவ‌து க‌ன‌வாக‌த்தான் இருக்கும்!

Trackback by Unknown July 18, 2009 at 9:19 AM said...

[[நல்ல திரைப்பாடல்கள் ஒலியும் ஒளியுமில் மட்டுமே அதுவும் வெள்ளிக்கிழமை மட்டுமே காண முடியும்..]]

ரொம்ப ஆவலோடு காத்திருக்கும் நிகழ்ச்சி.

Trackback by S.A. நவாஸுதீன் July 18, 2009 at 9:56 AM said...

பக்கத்து வீட்டுக்காரவங்க சொந்த பந்தங்களோட பேசிட்டு இருக்க நேரம் கிடைத்திருக்கும்... குழந்தைகளுக்கு விளையாட நேரம் , அம்மாவின் அதிக கவனிப்பு மற்றும் அவர்களுக்கு பிடித்தமான சக்தி மான் போன்ற தொடர்களை ரசித்திருக்கலாம்....

ரொம்ப சரியாச் சொன்னீங்க வசந்த்

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 18, 2009 at 10:08 AM said...

என்ன ஒரு வக்கிரம்?

மானாட மயிலாட பார்க்காத ஒரு சமுதாயத்தை பார்க்க விரும்புகிறீர்களே.., தல..,

Trackback by ஆப்பு July 18, 2009 at 10:30 AM said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Trackback by அப்துல்மாலிக் July 18, 2009 at 12:46 PM said...

//யாரும் இத சீரியஷா எடுத்துக்க வேணாம் ஃப்ரியா வுடு மாமு......//

மாமு நானும் ஜாலியாவே ரசிச்சேன்

அருமையான சிந்தனை... தொடரு மாமே

Trackback by SUFFIX July 18, 2009 at 1:05 PM said...

Superb!! Good one.

Trackback by கார்த்தி July 18, 2009 at 2:19 PM said...

Super!!
என்னதான் தூர்தர்ஷனை இப்பிடி கலாய்த்தாலும் ஒரு காலத்தில அதுதான் டாப்பு..

Trackback by உடன்பிறப்பு July 18, 2009 at 3:56 PM said...

நடு நிலை செய்திகள் மட்டுமே தெரிந்திருக்கலாம்....

/\*/\

இப்படி பச்ச மண்னா இருக்கிங்களே தோழர். டிடி அரசு டிவி அப்போதைக்கு எந்த அரசு இருக்கிறதோ அந்த அரசின் ஆதரவு செய்தியை தான் டிடி வெளியிட முடியும். டிடி நடுநிலையானது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். உங்களின் மற்ற பாயிண்டுகள் எல்லாம் சூப்பர்

Trackback by sakthi July 18, 2009 at 9:48 PM said...

simply siperb vasanth

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) July 18, 2009 at 11:12 PM said...

malarum ninaivukal

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 12:39 AM said...

நன்றி

@ Starjan ( ஸ்டார்ஜன் )
@ jothi
@ சந்ரு
@ சூரியன்
@ VISA
@ தேவன் மாயம்
@ தமிழரசி
@ கதிர்
@ mouli
@ நட்புடன் ஜமால்
@ S.A. நவாஸுதீன்
@ SUREஷ் (பழனியிலிருந்து)
@ அபுஅஃப்ஸர்
@ ஷ‌ஃபிக்ஸ்
@ கார்த்தி
@ உடன்பிறப்பு
@ sakthi
@ sgramesh

Trackback by ச.செந்தில்வேலன் / S.Senthilvelan July 19, 2009 at 1:45 AM said...

நல்ல பதிவு..

//
மகாபாரதத்தை தொடர்ந்து பூம்புகார்,வீரபாண்டிய கட்டபொம்மன்,போன்ற தொடர்கள் வந்திருக்கலாம்....
//

மறந்து போன பல விஷயங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்!

Trackback by அன்புடன் அருணா July 19, 2009 at 5:31 PM said...

மறந்து போன பல விஷயங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:23 PM said...

//ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு..

//
மகாபாரதத்தை தொடர்ந்து பூம்புகார்,வீரபாண்டிய கட்டபொம்மன்,போன்ற தொடர்கள் வந்திருக்கலாம்....
//

மறந்து போன பல விஷயங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்!//

வருகைக்கு நன்றி செந்தில்வேலன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:23 PM said...

//அன்புடன் அருணா said...
மறந்து போன பல விஷயங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்......//

நன்றிக்கா.....

Trackback by சுசி July 20, 2009 at 2:52 PM said...

நிறைய யோசிக்க வேண்டி இருக்கு, இத படிச்சதும். நல்ல பதிவு.

Trackback by இரசிகை July 20, 2009 at 3:14 PM said...

aamaamla:)

Trackback by Menaga Sathia July 21, 2009 at 1:55 PM said...

எப்படி வசந்த் இப்படிலாம் யோசிக்கிறீங்க,சூப்பர்ர்!!