மண் சுமக்கும் வரை......

| June 5, 2009 | |

பிறந்த போது குடும்பத்துக்கு
சுமையென பெற்றோரால்
தள்ளிவைக்கப்பட்டேன்

திருமணத்திற்க்கு பிறகு
பிள்ளைகள் எனும் சுமைகளை
சுமந்தேன்

இப்போதும் அதே பிள்ளைகளால்
வீட்டுக்கு சுமையென தூக்கி எறியப்பட்டு
வயிற்று பசிக்கு
சுமைகளை சுமக்கிறேன்

தேவியே இன்னும் எத்துணை
தினங்களுக்கு
எனக்கும் சுமைக்குமான பந்தம்......

மண் என்னை சுமக்கும் வரையிலுமா?

Post Comment

16 comments:

Trackback by பழமைபேசி June 5, 2009 at 11:40 PM said...

படம்... இடுகைக்கு வலு!

Trackback by வினோத் கெளதம் June 5, 2009 at 11:58 PM said...

படமே சொல்லுது செய்தி..

Trackback by கிரி June 6, 2009 at 12:43 AM said...

அருமை வசந்த் ..படம் உட்பட

Trackback by தமிழ் June 6, 2009 at 4:48 AM said...

அருமை

Trackback by kishore June 6, 2009 at 5:13 AM said...

really touchable...

Trackback by ஆ.சுதா June 6, 2009 at 5:53 AM said...

படம் தேர்வும் அதற்கான உங்கள் சிந்தனையும் ஈர்ப்புடையதாக இருக்கின்றது.

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 6, 2009 at 6:39 AM said...

படத்துக்கான கவிதையா?

கவிதைக்கான பட்மா?

கூட்டணி அபாரம்

Trackback by வேத்தியன் June 6, 2009 at 6:42 AM said...

மிகவும் ரசித்தேன் வசந்த்...

Trackback by மாதேவி June 6, 2009 at 7:10 AM said...

"எனக்கும் சுமைக்குமான பந்தம்......
மண் என்னை சுமக்கும் வரையிலுமா?"

மனதைத் தொடுகிறது.

Trackback by முனைவர் இரா.குணசீலன் June 6, 2009 at 7:44 AM said...

என்ன நண்பரே படிப்போர் மனதில் சுமையை இறக்கி வைத்துவிட்டீர்களே.....

Trackback by அப்துல்மாலிக் June 6, 2009 at 11:29 AM said...

மனதை தொட்டது.. வலிக்குது ஒரு தாயின் புலம்பல்.. இதி நிதர்சனம்

அருமை தல‌

Trackback by அன்புடன் அருணா June 6, 2009 at 12:32 PM said...

மனதை தொட்டது.

Trackback by நாணல் June 6, 2009 at 1:40 PM said...

படிக்கும் போதே கண்கள் ஈரமாகிறது வசந்த்... கவிதையும் படமும் அருமை...

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 6, 2009 at 4:48 PM said...

அருமை நண்பா.. பாரத்தை சொல்லும் வரிகள்

Trackback by Unknown June 6, 2009 at 8:11 PM said...

ரொம்ப அருமையான மனதை தொடுற வரிகள்.வாழ்த்துக்கள் அண்ணா..!!.படமும் நல்ல இருக்கு அண்ணா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 6, 2009 at 10:09 PM said...

நன்றி
@பழமைபேசி
@வினோத் கெளதம்
@கிரி
@திகழ்மிளிர்
@கிஷோர்
@முத்துராமலிங்கம்
@சுரேஷ்
@வேத்தியன்
@மாதேவி
@குணா
@அபு
@அருணா
@ நாணல்
@ கார்த்திகேய பாண்டியன்
@தென்றல்