(அசையும் சொத்து) வியர்வை

| June 28, 2009 | |
வியர்வை
விழித்தது முதல்
விழிதூங்கும் வரை
ஒரு முறையேனும்
வந்துவிடுகிறாய் நீ

உழைப்பவனுக்கு நீ
விருதாகவும்
சுவையாகவும்

உறக்கத்தில் வாழ்பவனுக்கு நீ
கானல் நீராகவும்
உவர்ப்பாகவும்

கண்முழி பிதுங்கும் கூட்டத்திலும்
வருகிறாய்
கனவில் கண்ட பயத்தினாலும்
வருகிறாய்

உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது


ஆசையாய் சேர்க்கும்
அசையா சொத்துக்கள்
மத்தியில்
ஆசையாய் சேரும்
அசையும் சொத்து நீ

உன்னை மறைக்க உண்டு
பல வாசனை திரவியங்கள்
ஆனால் அவற்றுக்கு இல்லை
உன் போல் வாசனைகள்

தண்ணீருக்கும் உண்டு
கண்ணீருக்கும் உண்டு வறட்சி
திரட்சியாய் வரும்

உனக்கில்லை வறட்சி...

ச்சீசீ....
என்று சொல்பவனுக்கும்
வருவாய் சீதனமாய்....

துளித்துளியாய் வருகிறாய்...
துடைக்க துடைக்க வருகிறாய்...

விட்டமின்கள்


தாயின் பாசம்
அன்பு எனும் A விட்டமின்...

தந்தையின் நேசம்
பாசம் எனும் B விட்டமின்...

நண்பனின் நட்பு
சிந்தனை எனும் C விட்டமின்...

ஆசிரியரின் ஆக்கம்
எண்ணம் எனும் E விட்டமின்...

கட்டியவளின் கரிசணை
காதல் எனும் K விட்டமின்...

மகனின் பரிவு B1 ஆக ...
மகளின் கனிவு B6 ஆக...
சமூகத்தின் மதிப்பு b12 ஆக...
காதலி கால்சியமாய்...

ஆக மொத்தம் வாழ்க்கையே

சத்துள்ள உறவுகளினால்

பெற்ற ஆரோக்கிய வாழ்க்கை....தமிழை தக தக வெனும் மின்ன செய்யும்


கவிதை ஊற்றும்,

என்னை எழுத தூண்டியவருமான

கவியுலக அரசி தமிழரசிக்கு இப்படைப்புகள்

சமர்ப்பணம்

இவண்
பிரியமுடன் வசந்த்
Post Comment

35 comments:

Trackback by பழமைபேசி June 29, 2009 at 12:02 AM said...

அருமை!

//உன்னை விரும்புவனுக்கு
இயற்க்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்க்கை காற்று காசை
கரைக்கிறது//

இயற்கைக் காற்று பரிசாய்

செயற்கைக் காற்று காசை

வறட்ச்சி -- வறட்சி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 29, 2009 at 12:10 AM said...

நன்றி சார்

தவறு திருத்தப்பட்டது

Trackback by goma June 29, 2009 at 1:10 AM said...

அத்தனையும் இருந்தாலும் இன்னொரு விட்டமின் மிக மிக அவசியம் அதுதான் விடமின் H
ஹாஸ்யம்

Trackback by Unknown June 29, 2009 at 4:12 AM said...

உழைப்பவனுக்கு நீ
விருதாகவும்
சுவையாகவும்

உறக்கத்தில் வாழ்பவனுக்கு நீ
கானல் நீராகவும்
உவர்ப்பாகவும்\\

அருமை வசந்த்.

Trackback by தேவன் மாயம் June 29, 2009 at 6:33 AM said...

உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது///

அபாரம்!! வசந்த்!!!

Trackback by தேவன் மாயம் June 29, 2009 at 6:36 AM said...

தமிழை தக தக வெனும் மின்ன செய்யும்

கவிதை ஊற்றும்,

என்னை எழுத தூண்டியவருமான

கவியுலக அரசி தமிழரசிக்கு இப்படைப்புகள்

சமர்ப்பணம்

///
ஏப்பா!!
நீ வச்ச ஐஸூ தாங்காம எங்களுக்கெல்லாம் குளிருதப்பா!!
தமிழரசிக்கு வாழ்த்துக்கள்!!

Anonymous — June 29, 2009 at 8:21 AM said...

வசந்த் வியர்வை கவிதை வியக்க வைத்தது... பார்த்தியா உனக்குள்ளும் எழுதும் திறமை இருந்து இருக்கு வார்த்தைக்கு சொல்லவில்லை வியர்வைக்கு இருக்கும் மதிப்பு மேலும் ஒரு படி உயர்ந்து விட்டது.விட்டமின்ஸ் செம வேர்ட் பில்டிங்...அப்படியே படிச்சி முடிச்சி முடிவில் பார்த்தால் இன்ப அதிர்ச்சி.....அன்று மாயாதி நேற்று அனுபவம் தணிகாஷ் இன்று நீங்கள் என் கண்கள் பனிக்கிறது நன்றி வசந்த்.....

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! June 29, 2009 at 9:23 AM said...

கவுண்டர் : ஓ அப்போ இதுக்கு எல்லாம் நீ மட்டும் காரணம் இல்லயா?

குஒஇ: நல்லா இருந்ததுங்க ...

Trackback by S.A. நவாஸுதீன் June 29, 2009 at 9:52 AM said...

உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது

ரொம்ப ரசிச்சது வசந்த்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 29, 2009 at 10:49 AM said...

\\\\ உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது. /////

உன்னை விரும்பாதவர் அவனியில் உண்டோ

அதில் நானும் ஒருவனா ....

Trackback by அப்துல்மாலிக் June 29, 2009 at 3:25 PM said...

கவிதைப்படித்து வியந்தேன் வியர்த்தேன்

வியர்வைக்கு அழகான சொற்களால் நிரப்பிவிட்டீர்

வியர்வைக்குள்ளும் இத்தனையா என்று வியக்கவைத்துவிட்டீர்

நல்லாயிருக்கு தொடருங்கள்

Trackback by அப்துல்மாலிக் June 29, 2009 at 3:27 PM said...

//தமிழை தக தக வெனும் மின்ன செய்யும்


கவிதை ஊற்றும்,


என்னை எழுத தூண்டியவருமான


கவியுலக அரசி தமிழரசிக்கு இப்படைப்புகள்


சமர்ப்பணம்
//

தமிழ் அரசிக்கு சமர்பணம் நல்லதுதான்...

என்னுடைய வாழ்த்தையும் தெரிவிச்சிக்கிறேன்

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் June 29, 2009 at 4:57 PM said...

super...! (thamilla varthai kidaikkalinka..)

Trackback by இது நம்ம ஆளு June 30, 2009 at 11:31 AM said...

சத்துள்ள உறவுகளினால்

பெற்ற ஆரோக்கிய வாழ்க்கை....
அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

Trackback by யாழினி June 30, 2009 at 1:26 PM said...

வியர்வை வியக்க வைக்கிறது!

Trackback by அன்புடன் அருணா June 30, 2009 at 7:57 PM said...

மீண்டும் பூங்கொத்து!!

Trackback by butterfly Surya June 30, 2009 at 10:51 PM said...

வியர்வை அருமை.

புகைப்படம் சூப்பர்.

Trackback by சுசி July 1, 2009 at 11:43 AM said...

அருமை வசந்த். வித்யாசமான சிந்தனை.நிறைய எழுதுங்க.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:49 PM said...

// goma said...
அத்தனையும் இருந்தாலும் இன்னொரு விட்டமின் மிக மிக அவசியம் அதுதான் விடமின் H
ஹாஸ்யம்//

ஆமா மிஸ் ஆயிடுச்சு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:50 PM said...

//நட்புடன் ஜமால் said...
உழைப்பவனுக்கு நீ
விருதாகவும்
சுவையாகவும்

உறக்கத்தில் வாழ்பவனுக்கு நீ
கானல் நீராகவும்
உவர்ப்பாகவும்\\

அருமை வசந்த்.//

நன்றி ஜமாலண்ணே

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:50 PM said...

// thevanmayam said...
உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது///

அபாரம்!! வசந்த்!!!//

நன்றி தேவா சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:51 PM said...

// தமிழரசி said...
வசந்த் வியர்வை கவிதை வியக்க வைத்தது... பார்த்தியா உனக்குள்ளும் எழுதும் திறமை இருந்து இருக்கு வார்த்தைக்கு சொல்லவில்லை வியர்வைக்கு இருக்கும் மதிப்பு மேலும் ஒரு படி உயர்ந்து விட்டது.விட்டமின்ஸ் செம வேர்ட் பில்டிங்...அப்படியே படிச்சி முடிச்சி முடிவில் பார்த்தால் இன்ப அதிர்ச்சி.....அன்று மாயாதி நேற்று அனுபவம் தணிகாஷ் இன்று நீங்கள் என் கண்கள் பனிக்கிறது நன்றி வசந்த்.....//

மீண்டும் நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:52 PM said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
கவுண்டர் : ஓ அப்போ இதுக்கு எல்லாம் நீ மட்டும் காரணம் இல்லயா?

குஒஇ: நல்லா இருந்ததுங்க ...//

ரொம்ப சிரிப்பு வருது சார் உங்க பின்னூட்டமும் கவுண்டர் கமெண்டும் கலக்கல்

நன்றி கு.ஒ.இ

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:53 PM said...

// S.A. நவாஸுதீன் said...
உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது

ரொம்ப ரசிச்சது வசந்த்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்//

நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:53 PM said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
\\\\ உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது. /////

உன்னை விரும்பாதவர் அவனியில் உண்டோ

அதில் நானும் ஒருவனா ....//

நன்றி ஸ்டார்ஜான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:54 PM said...

//அபுஅஃப்ஸர் said...
கவிதைப்படித்து வியந்தேன் வியர்த்தேன்

வியர்வைக்கு அழகான சொற்களால் நிரப்பிவிட்டீர்

வியர்வைக்குள்ளும் இத்தனையா என்று வியக்கவைத்துவிட்டீர்

நல்லாயிருக்கு தொடருங்கள்//

நன்றி அபு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:54 PM said...

//நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
super...! (thamilla varthai kidaikkalinka..)//

நன்றி சரவணன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:55 PM said...

//இது நம்ம ஆளு said...
சத்துள்ள உறவுகளினால்

பெற்ற ஆரோக்கிய வாழ்க்கை....
அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க//

நன்றி இது நம்ம ஆளு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:56 PM said...

// யாழினி said...
வியர்வை வியக்க வைக்கிறது!//

நன்றி யாழினி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:56 PM said...

//அன்புடன் அருணா said...
மீண்டும் பூங்கொத்து!!//

நன்றிகள் அருணாக்கா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:57 PM said...

//வண்ணத்துபூச்சியார் said...
வியர்வை அருமை.

புகைப்படம் சூப்பர்.//

நன்றி வண்ணத்துப்பூச்சியார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 1, 2009 at 8:58 PM said...

// சுசி said...
அருமை வசந்த். வித்யாசமான சிந்தனை.நிறைய எழுதுங்க.//

நன்றி சுசி

Trackback by sakthi July 3, 2009 at 9:48 PM said...

தண்ணீருக்கும் உண்டு
கண்ணீருக்கும் உண்டு வறட்சி
திரட்சியாய் வரும்
உனக்கில்லை வறட்சி...

arumai vasanth

Trackback by SUFFIX July 7, 2009 at 2:00 PM said...

வலைச்சரம் மூலம் வந்து எட்டிப்பார்க்கின்றேன், விட்டமின்களை வித்யாசமா விவரிச்சுரிக்கீங்க. நன்றாக இருந்ததது

Trackback by குணசேகரன்... June 13, 2011 at 4:59 PM said...

அசையா சொத்துக்கள்
மத்தியில்
ஆசையாய் சேரும்
அசையும் சொத்து நீ.//ரசிக்க வைக்கிறது