இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்....

| June 7, 2009 | |
இன்றைய இளைஞனின் டாப்10 கனவுகள்

கனவு1

முதல்ல ஒரு மொபைல் வாங்குறது அதுலயும் இந்த வீடியோ மொபைல் வாங்குறதுஅதுல மொபைல் சூடாகுறவரைக்கும் பிகருகளோட கடலைய போடுவதுகனவு2

இரண்டாவது ஒரு பைக் அதுலதானே பிகருகள பிக்கப்பண்ணமுடியும்கனவு3

மூணாவது வீடே அதிரும் ஹோம்தியேட்டர் வாங்கி பக்கத்து வீட்டுக்காரய்ங்கள சூடாக்குறதுகனவு4

நாலவது பேமஷான் காலேஜ்ல சேர்ந்துட்டு ஊருக்கே பெருமையடிப்பது அது கண்டிப்பா காசு குடுத்து சேர்ந்ததான் இருக்கும்.....கனவு5

ப்ரண்டோ பிக்கப்போ தெரியாது ஆனாலும் எவளோ ஒருத்திய கூட்டி வந்து பிரண்ட்ஸ்கிட்ட மச்சான் இது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் டான்னு பில்ட் அப் கொடுப்பதுகனவு6

நல்லாருக்கோ நல்லாயில்லயோ மண்டைக்கு ஏதோ ஒரு கலரிங் குடுத்து ஊரையே கண்ணு கூச செய்யுறதுகனவு7

பாக்குறதுக்கு கேவலமான அங்க இங்க கிழிஞ்ச , 72 பாக்கெட் வச்ச பேண்ட் போட்டு ஊரையேக்கூட்டுறது
கனவு8

ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்கனவு9

ஓட்டை கம்யூட்டர் வாங்கி தெரியாத பொண்ணுங்க கிட்ட சாட்டிங் அதுலயும் வீடியோ சாட்டிங் பண்ணுறதுஅது பொண்ணுதானான்னு கூட தெரியாமகனவு 10

ஒருதடவையாவது உள்ளூர் பார்ல ஃபாரின் சரக்கடிக்குறதுஅடுத்த வாரம் இளைஞிகளுக்கு..........

இவ
ன் இந்த கனவுகளை கடந்தவன் ஜஸ்ட்

Post Comment

28 comments:

Trackback by ஆ.ஞானசேகரன் June 8, 2009 at 3:15 AM said...

நல்ல கனவுதான் போங்க

Trackback by Unknown June 8, 2009 at 5:53 AM said...

படம் போட்டு கலக்குறியள்

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்ஸ் ;)

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 8, 2009 at 6:29 AM said...

//
ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்
//

நடிகைக்கு பக்தனாக இருப்பது?

Anonymous — June 8, 2009 at 6:38 AM said...

எல்லாமே லட்சியக் கனவுகள் வசந்த்...அட விடுப்பா இளமையில் இது கூட இல்லைன்னா எப்படி.....கல்யாணமோ இல்லை குடும்ப பொருப்போ வந்தா இதை தொட்டு அல்ல எட்டிக் கூட பார்க்க முடியாது என் வோட்டு இவங்களுக்குத் தான்...ஹிஹிஹிஹிஹி

Trackback by வேத்தியன் June 8, 2009 at 7:27 AM said...

உண்மை தாங்க...

ரசிச்சேன்...

அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்..

Trackback by Beski June 8, 2009 at 7:44 AM said...

அருமை அருமை.
கலக்குறீங்க வசந்த்.

Trackback by மயாதி June 8, 2009 at 7:47 AM said...

அடப்பாவிகளா ! எனக்கு இப்படிஎல்லாம் கனவு வரமாடேன் என்குதே!
ஒரு வேளை வயசாகிட்டுதோ..

Trackback by கடைக்குட்டி June 8, 2009 at 9:01 AM said...

வேல வெட்டி இல்லாட்டியும் இருக்குற மாதிரி பந்தா காட்டுறது...

இதையும் சேத்துக்கங்க... :-)

Trackback by கலையரசன் June 8, 2009 at 10:41 AM said...

அப்துல் கலாம் கனவு காண சொன்னாருன்னு..
இப்படியெல்லாமா கனவு வருது உனக்கு!

Trackback by அப்துல்மாலிக் June 8, 2009 at 11:12 AM said...

தெருவோர தின்னையிலே கூடி கும்மியடிப்பது இதையும் சேர்த்துக்கோங்க‌

Trackback by விக்னேஷ்வரி June 8, 2009 at 1:15 PM said...

ஹிஹிஹி..... நல்லாருக்கு.

Trackback by மயாதி June 8, 2009 at 2:09 PM said...

உங்களுக்கு தரவேண்டிய ஒரு பரிசு என் தளத்தில் உள்ளது நண்பரே, வந்து எடுத்துக் கொள்ளுங்கள்..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 8, 2009 at 5:18 PM said...

பஸ்ஸில் புட்போர்டில் தொங்கிகொண்டு போவது ....

Trackback by Joe June 8, 2009 at 6:08 PM said...

கடைசியாச் சொன்னீங்களே, அது தான் டாப்! ...
அதுக்குத் தான் நண்பர்களுக்கு இரண்டு காக்டைல் பதிவு போட்டிருக்கேன்.
http://joeanand.blogspot.com/2009/06/blog-post_07.html

Trackback by நசரேயன் June 8, 2009 at 6:37 PM said...

கனவு கனவு தான்

Trackback by வழிப்போக்கன் June 8, 2009 at 6:46 PM said...

அண்ணனுக்கு அனுபவம் பேசுது போல???
:)))
ச்சும்மா...

Trackback by வழிப்போக்கன் June 8, 2009 at 6:46 PM said...

நல்ல கற்பனை!!!
கலக்குங்க...

Trackback by வழிப்போக்கன் June 8, 2009 at 6:47 PM said...

நல்ல கற்பனை!!!
கலக்குங்க...

Trackback by ராஜாதி ராஜ் June 8, 2009 at 7:18 PM said...

கனவுகளா இல்லை ஆசைகளா? ரெண்டும் ஒண்ணு இல்லாட்டி வித்தியாசம் என்ன????
:)

அன்புடன்,
ராஜ்.

Trackback by Beski June 8, 2009 at 7:30 PM said...

//ரெண்டும் ஒண்ணு இல்லாட்டி வித்தியாசம் என்ன????//

ஒருமுறை வந்தால் கனவு,
இருமுறை வந்தால் ஆசை,

பலமுறை வந்தால் லட்சியம்.
-
(நானா ஒன்னும் சொல்லல, எனக்கு வந்த SMS சொன்னது)

Trackback by கிரி June 8, 2009 at 8:12 PM said...

கலக்கல் :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 9, 2009 at 9:55 PM said...

// ஆ.ஞானசேகரன் said...
நல்ல கனவுதான் போங்க//


நன்றி ஞான சேகரன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 9, 2009 at 9:55 PM said...

//நட்புடன் ஜமால் said...
படம் போட்டு கலக்குறியள்

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்ஸ் ;)//

நன்றி ஜமாலண்ணே

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 9, 2009 at 10:09 PM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//
ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்
//

நடிகைக்கு பக்தனாக இருப்பது?///

மறந்துட்டேனோ?

நன்றி டாக்டர் தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 9, 2009 at 11:20 PM said...

நன்றி
@@தமிழரசி
@@வேத்தியன்
@@எவனோஒருவன்
@@ம்யாதி
@@கடைக்குட்டி
@@கலையரசன்
@@அபு
@@விக்னேஷ்வரி
@@ஸ்டார்
@@ஜோ
@@ நசரேயன்
@@வழிப்போக்கன்
@@ராஜாதிராஜா
@@கிரி

Trackback by அன்புடன் அருணா June 14, 2009 at 3:56 PM said...

காதிலே ஹெட் ஃபோனை மாட்டிக்கிட்டு பேசிக்கிட்டே பைக்லே பறக்குறது!!! விட்டுட்டீங்களே!

Trackback by கலகலப்ரியா September 26, 2009 at 9:35 PM said...

//
இரண்டாவது ஒரு பைக் அதுலதானே பிகருகள பிக்கப்பண்ணமுடியும்//
தம்பி முதல்ல லைசென்ஸ் எடுக்கற வழிய பாருப்பா... (கனவிலதான்..)

Trackback by Unknown July 21, 2010 at 10:07 AM said...

நீங்க சின்னபுள்ளைன்னு நாங்க நம்பிட்டோம்..