இதுதான் உண்மையா?

| June 30, 2009 | 36 comments |
கண் முழி பிதுங்குதுன்னா இப்படியா?காசை கரியாக்குறது இப்படியா?பல்ல புடிங்கிடுவேன்றது இதுதானா?

மரமண்டையான்னு சொல்லுறது இவரையா?
உடன்பிறப்புகளேன்னு சொல்லுறது இவங்களையா?
பச்சைதண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறவங்க சொல்லுற பச்சைத்தண்ணி இது தானா?ஈ மெயில் இப்படித்தான் இருக்குமா?
இதுதான் குரங்கு சேட்டையா?

Post Comment

(அசையும் சொத்து) வியர்வை

| June 28, 2009 | 35 comments |
வியர்வை
விழித்தது முதல்
விழிதூங்கும் வரை
ஒரு முறையேனும்
வந்துவிடுகிறாய் நீ

உழைப்பவனுக்கு நீ
விருதாகவும்
சுவையாகவும்

உறக்கத்தில் வாழ்பவனுக்கு நீ
கானல் நீராகவும்
உவர்ப்பாகவும்

கண்முழி பிதுங்கும் கூட்டத்திலும்
வருகிறாய்
கனவில் கண்ட பயத்தினாலும்
வருகிறாய்

உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது


ஆசையாய் சேர்க்கும்
அசையா சொத்துக்கள்
மத்தியில்
ஆசையாய் சேரும்
அசையும் சொத்து நீ

உன்னை மறைக்க உண்டு
பல வாசனை திரவியங்கள்
ஆனால் அவற்றுக்கு இல்லை
உன் போல் வாசனைகள்

தண்ணீருக்கும் உண்டு
கண்ணீருக்கும் உண்டு வறட்சி
திரட்சியாய் வரும்

உனக்கில்லை வறட்சி...

ச்சீசீ....
என்று சொல்பவனுக்கும்
வருவாய் சீதனமாய்....

துளித்துளியாய் வருகிறாய்...
துடைக்க துடைக்க வருகிறாய்...

விட்டமின்கள்


தாயின் பாசம்
அன்பு எனும் A விட்டமின்...

தந்தையின் நேசம்
பாசம் எனும் B விட்டமின்...

நண்பனின் நட்பு
சிந்தனை எனும் C விட்டமின்...

ஆசிரியரின் ஆக்கம்
எண்ணம் எனும் E விட்டமின்...

கட்டியவளின் கரிசணை
காதல் எனும் K விட்டமின்...

மகனின் பரிவு B1 ஆக ...
மகளின் கனிவு B6 ஆக...
சமூகத்தின் மதிப்பு b12 ஆக...
காதலி கால்சியமாய்...

ஆக மொத்தம் வாழ்க்கையே

சத்துள்ள உறவுகளினால்

பெற்ற ஆரோக்கிய வாழ்க்கை....தமிழை தக தக வெனும் மின்ன செய்யும்


கவிதை ஊற்றும்,

என்னை எழுத தூண்டியவருமான

கவியுலக அரசி தமிழரசிக்கு இப்படைப்புகள்

சமர்ப்பணம்

இவண்
பிரியமுடன் வசந்த்
Post Comment

ரீல் பஞ்சும்....ரியல் பஞ்சும்......

| June 27, 2009 | 20 comments |
கிரிக்கெட் மைதானம்

வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்கே ஜெயிக்கிறவன்

தோப்பான்.தோக்கிறவன் ஜெயிப்பான்
விமானம் :நான் இறங்கி போறவன் இல்லடா ஏறிப்போறவன்
புகைவண்டி:என் வழி தனி வழி சீண்டாத...

கால்குலேட்டர்:கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்தும்மல் :நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரக்ட்டா வருவேன்..
அந்தப்பறவை:இது எப்ப்டி இருக்குமின்சாரம் :சும்மா அதிருதுல்ல....

இதுவரைக்கும் ரீல் பஞ்ச் டயாலாக்

இது ரியல் பஞ்ச் டயலாக்

என்ன கொடும சரவணா?

Post Comment

சக்கரம் @ மோசடி

| June 26, 2009 | 11 comments |
முதன் முதலில் சிறுகதை பக்கம் நான்.......

சக்கரம் @ மோசடி

ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அது 9ஆம் வகுப்பு வகுப்பறையில் அமைதி நிலவியது.மாணவர்கள் ஆசிரியர் நடத்திய பாடங்களுக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தனர். வகுப்பு முடிந்தது.

கலை இவன் ஆர்வக்கோளாறு மிக்கவன்...ஆதி இவன் அவனுக்கு அடுத்தபடி... இவர்கள் இருவரும் ஆசிரியர் நடத்தியஅறிவியல் பாடங்களை அசை போட்டபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்

முதல்ல ஆதி கலைகிட்ட டேய் கலை நம்ம ஆசிரியர் அறிவியல் பாடத்துல பலபேரு பல பொருட்கள் கண்டு பிடித்ததை பார்த்து எனக்கு சில பொருட்கள்கண்டுபிடிக்க வேண்டும் என்றுதோணுதுடா...

என்னடா ஆதி?

நம்ம நண்பன் அறிவழகன பாத்தியா கால் ஊனமா நொண்டி நொண்டி நடக்குறான்...

ஆமா அதுக்கென்ன இப்போ?

இல்லடா அவன் அப்படி நடக்கும்போது என் மனசு நெருடுதுடா..

இந்த மாதிரி நடக்குறவங்களுக்கு,கால் இல்லாதவங்களுக்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சா எப்படி இருக்கும்? கால்ல இந்த மருந்து தடவுன உடனே கால் சரியாடுற மாதிரி...

நல்லாத்தாண்டா இருக்கும் ஆதி...!?

ஆனா நம்ம சமூகத்துல இந்த மருந்த கண்டுபிடிச்சவன் இந்த கண்டுபிடிப்புக்கு ஒரு ரைட்ஸ் வாங்கி வச்சுட்டு ஏதாவது நல்ல பணமுள்ள கம்பெனிக்கு நல்ல விலைக்கு வித்துடுவான்...

இப்பிடியெல்லாம் நடக்குமாடா கலை?

பின்ன என்ன நான் இது மாதிரி கண்டுபிடிப்பாளர்கள் வரலாறு படிக்கும்போது நிறைய பேரு இது மாதிரி தாண்டா பண்ணி நல்லா காசு சம்பாதிச்சுருக்காங்க...

அப்பிடியாடா?

ஆமாடா ஆதி இந்த கண்டுபிடிப்பை வாங்கி மருந்து தயாரிக்குற கம்பெனி முதல்ல நல்ல முறையில தயாரிப்பாங்களாம் பின்ன அதோட வளர்ச்சிய பொருத்து அதன் விலையை ஏற்றிவிடுவார்களாம் அதுக்கப்பறம் அதுல கலப்படம் கலந்து கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களாம்.

இது மாதிரியெல்லாம் பண்ணுறதுக்கு அவங்க மன சாட்சி ஓத்துகிடாதாடா கலை?

டேய் இதெல்லாம் இந்தகாலத்துல சர்வ சாதாரணமா நடக்குதுடா ஆதி...

சரிடா கலை அப்ப நாம இப்பிடி கண்டு பிடிப்போம் உலகத்துல இது மாதிரி கொள்ளையடிப்பவர்களை கண்டிபிடிக்குறதுக்கு ஒரு மெஷின் தயாரிக்கலாம்!...

போடா டேய் அவங்க அதையும் லஞ்சம் கொடுத்து வாங்கிடுவாங்கடா!..

என்ன தாண்டா பண்ணுறது?

சரி லஞ்சம் வாங்குறவங்கள கண்டுபிடிக்குறதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிக்கலாம்!...

டேய் அவங்க அதெல்லாம் போலீஸ் மூலமா ஒழிச்சுக்கட்டிடுவாங்கடா?

அய்யோ எப்பிடியெல்லாம் முறைகேடு பண்ணுறாங்கடா கலை?

சரி அதையும் விட்டுத்தள்ளு அந்த மாதிரி முறைகேடா நடக்குறவங்கள கண்டு
பிடிச்சு அரசுக்கு தெரியப்படுத்துற மாதிரி ஒரு ஒரு மெஷின் கண்டுபிடிக்கலாமா?

அதையும் அரசுஅதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒண்ணுமேயில்லாம பண்ணிடுவாங்கடா!...

சரி விடு லஞ்சம் வாங்குற அதிகாரிகள கண்டுபிடிக்க மெஷின் கண்டு பிடிச்சுடலாம்...

அதையும் அரசியல்வாதிகள் மூலமா தடுத்துடுவாங்கடா!...

இப்போ ஒண்ணும் கெட்டுப்போகல எங்கப்பா லாயர் தான கோர்ட்ல கேஸ் போட்டுட்டா என்ன பண்ணுவாங்க?

அங்க எங்கப்பாதானே ஜட்ஜ் அவரையும் உங்கப்பாவையும் கூட நம்மள கடத்தி கொண்டு போய் வச்சு மிரட்டி கேஸ் ஒண்ணும் இல்லாம பண்ணிடுவாங்க!...

திரும்ப நம்ம ஆரம்பிச்சது நம்மகிட்டயே முடியுது பாத்தியா இதுதாண்டா மோசடி வாழ்க்கை ....

அப்ப இதுக்கு என்னதாண்டா வழி?

ஒண்ணுமே பண்ண முடியாதாடா?

திருடனா பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மாதிரி இதுக்கு லஞ்சம் வாங்குறவங்களும் கொடுக்குறவங்களும் இருக்குறவரை மக்களுக்கு நல்லது நடக்காதுடா ஆதி..

சரியா சொன்னடா கலை ...Post Comment

சில கிடைக்கலத்துவங்கள் சீரியசாக

| | 7 comments |
நேற்றைக்கு சிரிப்புக்காக சில கிடைக்கலத்துவம் பார்த்தோம்
இன்னைக்கு சமூக கிடைக்கலத்துவம் சில இங்கே....
இனியும் சில கிடைக்கலத்துவங்கள் தொடரும் பிரபலமானாலும் ஆகாட்டியும்.....

இவருக்கு பணம் கிடைக்கல


இவர்களுக்கு உணவு கிடைக்கல

இவங்களுக்கு பாசம் கிடைக்கல


இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கல


இவங்களுக்கு வீடு கிடைக்கலஇவர்களுக்கு அம்மா அப்பா கிடைக்கல

Post Comment

சில கிடைக்கலத்துவங்கள்

| June 25, 2009 | 20 comments |
இங்க சிக்னல் விளக்குக்கு போஸ்ட் கிடைக்கலஇவருக்கு போஸ் குடுக்க இடம் கிடைக்கல
இவருக்கு சாப்பிட சாப்பாடு கிடைக்கலஇவருக்கு உட்க்கார இடம் கிடைக்கலஇவருக்கு படம் வரைய அளவுகோல் கிடைக்கலஇவருக்கு கர்ச்சீப் கிடைக்கல

இங்க கார பார்க் பண்ண இடம் கிடைக்கல
இவருக்கு படுக்க இடம் கிடைக்கலஇவங்களுக்கு மிடில் ஸ்டம்ப் கிடைக்கல
இவருக்கு லைட்டர் கிடைக்கல

Post Comment

32 கேள்விகள் 32 நபர்களிடம்

| June 23, 2009 | 54 comments |
இப்பதிவு யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில்
இந்த 32 கேள்விகளுக்கு ஒவ்வொருத்தரும் ஒருகேள்விக்குன்னு கீழே உள்ள 32 நபர்கள் பதில் சொல்லுறாங்கங்க...

என்னான்னு கேப்போமா?

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பூமி

பதில்: யார் நமக்கு இந்த பேர் வச்சாங்கன்னு தெரியல எதுக்கு வச்சாங்கன்னு தெரியல
2.கடைசியாக அழுதது எப்பொழுது?

வெங்காயம்

பதில்: நமக்கு அழுது பழக்கமில்ல அழவச்சுத்தான் பழக்கம்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பேனா

பதில்: என்னோட குலத்தொழிலே அதான
4.பிடித்த மதிய உணவு என்ன?

சாப்பாடுத்தட்டு

பதில்: எல்லாமே பிடிக்கும் சாப்பிடுறவங்க முறைய பொருத்து5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஈ மெயில்

பதில்: ஆமா அதாங்க நம்ம பழக்கம்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

மீன்

பதில்:அருவியில
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்ணாடி

பதில்:அவங்க அழகை
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

காக்கா

பதில்:பிடிச்சது என்னோட கலர்.பிடிக்காதது கால நேரம் பாக்காம இயற்க்கை உபாதை வருவது
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

விரல்

பதில்:பிடிச்சது நகத்தின் நீளம் ,பிடிக்காதது நகம் அழுக்கு
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

திருக்குறள்

பதில்:திருவள்ளுவர்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கீபோர்ட்

பதில்:ஆடை கண்டுபிடிக்கப்படவில்லை12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வீடு

பதில்: என் குடும்ப சந்தோஷ சிரிப்புகள்(ஒரேபதில் இரண்டுக்கும்)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வான வில்

பதில்: நீலம்
14.பிடித்த மணம்?

நாய்

பதில்: இறைச்சி மணம்15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜெராக்ஸ்

பதில்:பிரிண்டர் அவரோட கலர் பிரிண்டுகளுக்காக16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

பிரிண்டர்

பதில்:ஜெராக்ஸ் அவரோட சளைக்காத காப்பிகளுக்காக17.பிடித்த விளையாட்டு?

விளையாட்டு மைதானம்

பதில்:டென்னிஸ்18.கண்ணாடி அணிபவரா?

ஜன்னல்

பதில்: ஆம்19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

சினிமா தியேட்டர்

பதில்:குடும்பத்தோட பார்க்கும் படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?

ரிமோட்

பதில்:எல்லாபடமும் ஒர்ரே நேரத்துல
21.பிடித்த பருவ காலம் எது?

மரம்

பதில்:மழைக்காலம்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கண்கள்

பதில்: எல்லா புத்தகமும்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

லேப்டாப்

பதில்: அடிக்கடி
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ரேடியோ

பதில்:
பிடிச்ச சத்தம் பாட்டுச்சத்தம் பிடிக்காத சத்தம் இரைச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

செருப்பு

பதில்:தெருக்கோடி
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சிலந்தி

பதில்:ஆம் அழகா பின்னுவது வீட்டை
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வயிறு

பதில்:அஜீரணம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சிகரெட்

பதில்:கேன்சர்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பஸ்

பதில்: ஊட்டி
30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பாலம்

பதில்:ஸ்ட்ராங்கா
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தொலைக்காட்ச்சி

பதில்:கணவன் இல்லாத போது நாடகம் மனைவி இல்லாத போது ஃபேசண்டிவி காட்டுவது
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

உயர்ந்த கட்டிடம்

பதில்:வானமே எல்லை

Post Comment