கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்

| May 2, 2009 | |
கண்ணா பின்னா தத்துவங்கள்

1.நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு
சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

2.யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

3.டீ மாஸ்டர் டீ போடுரார்
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹெட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

4.புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

5.ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது

6.1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...

1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

ஆனா.....
ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

7.காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull

8.நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

9.அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!

10.நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

Post Comment

9 comments:

Trackback by அப்பாவி முரு May 3, 2009 at 6:58 AM said...

//ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!//

ஏன் கூப்பிட்டு பார்க்க வேண்டியது தானே?

Trackback by மாதேவி May 3, 2009 at 8:04 AM said...

1-8 வரை பிடித்தது.

Trackback by இராகவன் நைஜிரியா May 3, 2009 at 11:38 AM said...

சரி கடி.. உலக மகா கடி...

தாங்க முடியலடா சாமி.

Trackback by அப்துல்மாலிக் May 3, 2009 at 2:20 PM said...

நிறைய படித்ததுதான்.... பட் திரும்ப படிக்க படிக்க கடி கடி கடிதான்

//அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
//

இது புதுசு ரசிச்சேன்....

Trackback by Subash May 3, 2009 at 2:44 PM said...

கலக்கல்

Trackback by pinnoottam May 3, 2009 at 6:22 PM said...

பொண்டாட்டி பிரென்ட் மேல ஒரு கண்ணு இருக்குற விசயத்த வித்தியாசமா ஒரு காமடியா தெரிவிசிருக்கிறீங்க.நல்ல முயற்சி

Trackback by தீப்பெட்டி May 3, 2009 at 8:24 PM said...

கலக்கல் வசந்த்..

அப்புறம் நம்ம தளபதி கார்னருக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள் :)

Trackback by தமிழ் May 5, 2009 at 11:58 AM said...

That is not Homo Stage i.e.Koma Stage

Trackback by G. Krishnamurthy September 26, 2009 at 11:25 PM said...

கன்னா பின்னா வசந்த்! வசந்த்!
கற்பனை ஆஹா ஓஹோ!
பஹுத் ஹீ பசந்த் ப்சந்த்!
அச்சா அச்சா அச்சா ஹை!