உடல் பாகங்களே பாடுங்கள்

| May 30, 2009 | 25 comments |

இன்னைக்கு யோசிச்சது.......
நெற்றி : வந்ததே ஓ..ஓஒ....குங்குமம்........

கண்கள் : கனா கண்டேனடி.....

மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........

காது : பூ பூக்கும் ஓசை அதை கேட்க்கத்தான் ஆசை........

இதழ் : இதழில் கதை எழுதும் நேரமிது.......

கழுத்து : மாலை சூடும் வேளை இன்ப.......

இதயம் : லப் டப் ஹேய் லப்பு டப்பு.....

இடுப்பு : கருப்பான கையாலே என்ன புடிச்சான்......
கை :
நான் எழுதுவது கடிதம் அல்ல.......

கால் : கண் போன போக்கிலே கால் போகலாமா

Post Comment

ஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை

| May 29, 2009 | 14 comments |
ஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை


இது காலிவுட்இது கோழி வுட்சும்மாக்காட்டி இன்னைக்கு வெள்ளி விடுமுறை அதான் யோசிச்சு பாத்தேன்..........

Post Comment

சோக்கு.............

| | 20 comments |
சோக்குகள்..........


*************************************************************************************
ரமேஷ்: கப்பல் படையில் சேர்ந்திருக்க

உனக்கு நீந்த தெரியுமா?

சுரேஷ்: நீயும்தான் விமானப்படையில சேர்ந்துருக்க

உனக்கு பறக்க தெரியுமா?
*************************************************************************************

மாப்பிள்ளை:என்ன தரகரே,பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு,
சுடுகாட்டுக்கு கூட்டி வந்திருக்கீங்க?

தரகர்: நீங்க தானே,அடக்கமான பொண்ணு வேணும்னு பிரியப்பட்டீங்க .......

*************************************************************************************

அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக்
கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா
கேட்டாள்......

நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே....?

ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?

*************************************************************************************

சிந்தனைகள்

softwarekkum hardwarekkum என்ன வித்தியாசம்?

செடிக்கு கீழ இருந்தா softவேர்
மரத்துக்கு கீழ இருந்தா hardவேர்


வெயிலுக்கும்,மழைக்கும் என்ன வித்தியாசம்?

வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க

***********************************************************************************

.
.
.

Post Comment

மனித முப்பரிணாம வளர்ச்சி போட்டோ கமெண்ட்-1

| | 4 comments |
மனித முப்பரிணாம வளர்ச்சிமுன்னோர் ஞாபகங்களை
செதுக்குகிறாரோ.......


ஏதாவது கமெண்ட் பின்னூட்டத்துல போடுங்கப்பா

படம் நன்றி:ஊச்சப்பன்(flickr)

Post Comment

அரசியல் வேண்டாம் தலைவா

| May 25, 2009 | 27 comments |


அரசியல் நமக்கு வேண்டாம் தலைவா

ஒரு ரசிகனாக நான் விரும்புவது உன் நடிப்பை மட்டும் தான்

உனக்கு ஒரு ஆத்திச்சூடி

ரசியல் பண்ண விரும்பாதீங்கண்ணா

ட்டத்தை மறக்காதீங்கண்ணா

ரட்டைவேடம் மறங்கண்ணா

கை பற்றி தம்பட்டம் வேண்டாங்ணா

ருப்படியான கதையில நடிங்ணா

ர் ஊரா போகாதீங்ணா

கிறி எகிறி அடிக்காதீங்ணா

சாதீங்ணா

ம்புலனையும் அடக்குங்ணா

ரு படத்தையும்

ட்டாதீங்ணா

ஒளவ - இந்த எழுத்துல உங்களுக்குன்னுகுன்னு ஒண்ணும் இல்லீங்கண்ணா

தே நடங்ணா இல்லயேல் நான் உங்க ரசிகனில்லீங்னா

பிரியமுடன்.... வசந்த்

Post Comment

இரண்டும் ஒன்றோடு

| May 24, 2009 | 8 comments |
உயிரின் உட்புறம் வரை ஊடுருவிய இந்த இரண்டு பாடலுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க?

முதலாவது பாலமுரளிகிருஷ்ணாவோடது
இரண்டாவது நம்ம ஜேம்ஸ்வசந்தனோடது

Post Comment

வசந்த கால குறிப்புகள்

| May 22, 2009 | 21 comments |


என்னை இந்த தொடர்பதிவு எழுத அழைத்த என் தோழி திரு.தமிழ் அரசி... தமிழரசி அவர்களுக்கு நன்றி


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வசந்த காலத்தில் பிறந்ததால் வசந்த குமார்
அப்ப்டின்னு எங்க அப்பா பேர் வச்சுட்டாருங்க....
மத்தபடி எல்லார்கிட்டயும் பிரியமா இருக்குறதால பிரியமுடன்......வசந்த்


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜனவரி 27 2008

அழுகையே பிடிக்காத எனக்கும் வந்தது அழுகை....
முதல் முறை என்னோட அப்பா அம்மாவ பிரிஞ்சு வெளி நாட்டு பணிக்கு வரும் பொழுது சென்னை விமான நிலையத்தில்....ஒரே மகன் எப்படி அழுகை வராமலிருக்கும்....

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அதாங்க எனக்கு எங்கிட்ட ரொம்ப பிடிச்சது
கல்லூரியில் படிக்கும் பொழுது என்னுடய நண்பர்களுக்கும் சேர்த்து நானே பிராக்டிகல் எழுதும்ப்போதுதான் தோணும் ஏண்டா நமக்கு ஆண்டவன் நல்ல கையெழுத்தை கொடுத்தான் என்று....

4.பிடித்த மதிய உணவு என்ன?

ஹை சோறு சாமி சோறு

சிக்கன் பிரியாணி,வறுத்த கோழி,ஆம்லேட்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஒருத்தர் நம்மகிட்ட அறிமுகமானாலே நட்பு தொடருது தானேங்க...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

தண்ணீரை காதலிக்கும் காதலன் நான்...
அதுலயும் நம்ம குற்றாலத்திலும்,எங்க ஊர் கும்பக்கரை அருவியிலும் குளிப்பது சுகமோ சுகம்....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.....உடை.....முகம்....

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சதுனாக்கா.....தன்னம்பிக்கை
பிடிக்காதது.......கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பொண்ணு பாத்துட்டு இருக்காங்கோ....

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ஒருத்தர் இல்லீங்க அஞ்சுபேர்
அம்மா அப்பா இவங்க இப்ப இந்தியால
அடுத்து என் உடன் பிறவா சகோதரன் அமுதகுமார் எனது வயதையொத்த பிறந்ததிலிருந்து என் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன்......இவரு இப்போ சிங்கப்பூர்ல
அடுத்து நண்பன் நவனீதன்...... நட்பின் அடையாளம்.....இவரு இப்போ துபாயில
அடுத்து நண்பன் தர்மா.....இவரு மதுரையில

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கருப்புபெர்முடாஸ்,சிவப்பு முதலைபனியன்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அங்காடி தெருவில் இருந்து.....அவள் அப்படி ஒன்றும் அழகில்லை....

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானவில் கலர்ல எழுதுனா எப்பிடியிருக்கும்.....

14.பிடித்த மணம்?

மல்லிகை பூ வாசம் , தூரல் நின்னபிறகு வரும் மண்வாசம்,லாவண்டர்

இன்னொரு மணம் திருமணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு பிடிச்ச இவங்கள பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கிடனும்னுதான்

http://kanavukale.blogspot.com
http://veetupura.blogspot.com
http://raghavannigeria.blogspot.com

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

தமிழோட எல்லா கவிதைகளுக்கும் நான் அடிமை
இதோ இந்த காதல் வலி

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்,சதுரங்கம்,வீடியோகேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை,அந்த பாக்கியம் இல்லை ,அணிந்திருப்பவர்களை பிடிக்கும்,

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காதல், நகைச்சுவை ,அனைத்து விஜய் படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

நான் கடவுள்

21.பிடித்த பருவ காலம் எது?

உலக பருவகாலங்களில் வசந்தகாலம்,

என் பருவ காலங்களில் பள்ளி பருவம்..

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தானை தலைவி தாமரையின் சந்திர கற்கள்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்ச சத்தம்...பாட்டுசத்தம்,குழந்தை சிரிப்பு

பிடிக்காத சத்தம்...தகர கிரீச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இங்க தானுங்க கத்தார்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

பேப்பர் கிராப்ட்ஸ்,படம் வரைவது,

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்

காதலுக்கு இருக்கும் எதிர்ப்பு

ஜாதி மத வேறுபாடுகள்,இன்னும் நிறைய

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காதல் இது எப்போ எவளிடம் பூதமாக வெளியேறப்போகிறதோ?..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ,மெரீனா கடற்க்கரை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரு நல்ல மனிதனாக

வாழ்க்கையில ஒரு அனாதை குழந்தையை தத்து எடுப்பது அல்லது வளர உதவுவது லட்ச்சியம்

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதில் தர உரிமயில்லை இருப்பினும்

அவளுக்காக காத்திருப்பது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்க்கே..

life is beautiful

born to win

உன்னால் முடியும்

இந்த வார்த்தைகள் எனக்கு தினமும் உத்வேகத்தை உற்ச்சாகத்தை வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று கூறுகின்றன...

இதுவரைக்கும் பொறுமையா வாசித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்

Post Comment

கூட்டுப்பொரியல்

| May 20, 2009 | 15 comments |
சில ஹைக்கூக்கள்

அகிலஉலகமே என்னுள்
அடக்கம்
கூகுள்

அகத்தின் அழகு முகத்திலே தெரியும்
கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்

இருக்க இடம் கொடுத்தால்
படுக்க பாய் கேட்ப்பான்
வைரஸ்

ஒரு கவிதை


முதல் சந்திப்பில்
முற்றும் இழந்தபின்
முழுதும் அவள்தானென
மூடிவிட்டேன்..
முகங்களைத் தேடும் முயற்சிகளை..


சில கடிகள்

"'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்கார‎ன்'னு சொ‎ன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு"

"ஏ‎ன்.. என்னாச்சு?"

"அவ‎ன் கேரளாக்கார‎ன். அங்கே 'பட்டி'‎ன்னா நாயாமே!!"


ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டுப் பார்க்கிறேன்... கையிலே காசில்ல.

ஐய்யோ! அப்புறம்?

அப்புறம் என்ன? பையிலிருந்து எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.

யுவர் ஆனர்...
மிகவும் ஒல்லியான என் கட்சிக்காரர்மீது
குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ்
வழக்கு பதிவு செய்தது செல்லாது
என தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


காட்டு வழியா 10 பேர் போய்ட்டு இருந்தாங்க. அந்த வழியா வந்த
சிங்கம் 6 பேரை கொன்னுட்டு 4 பேரை மட்டும் விட்டுட்டு. ஏன்?

ஏன்னா அவங்க 4பேரும் Lyons Club Member ஆச்சே.


பெயிண்ட் ஏன் அழுகிறது
பெயிண்ட் ஐ நாம அடிக்கிறோம்ல அதான்


ஐப்பசியில எல்லாருக்கும் இலவசமா டிபன் கிடைக்கும் ஏன்?
ஐப்பசில தான் `அடை` மழை பெய்யுமே...
.
.
.

Post Comment

இவைகளால் பாட முடிந்தால்........

| May 19, 2009 | 8 comments |
கண்ணாடி

பார்க்காத என்ன பார்க்காதஇடிதாங்கி

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடிவந்ததே

கடிகாரம்

தூங்காதே தம்பி தூங்காதே

காலணி

மெல்ல நட மெல்ல நட

மாம்பழம்

தின்னாதே என்னை தின்னாதே
வானொலி

நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்
கட்டில்

என்ன சத்தம் இந்த நேரம்

லிப்ஸ்டிக்


என்ன தவம் செஞ்சுபுட்டேன்

தபால் பெட்டி

அப்பிடிபோடு....இப்பிடிபோடு
தென்றல்

மலரே ஒரு வார்த்தை பேசு


தேனீ

மலரே மவுனமா

Post Comment

தேர்தலுக்கு பிறகு இவர்களின் பா(ட்)டு

| May 16, 2009 | 14 comments |
இவையனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் மனதையும் புண்படுத்துவன அல்ல

ஜே.கே.ரித்தீஷ் :
உலகத்துக்காக பிறந்தவன் நானே
எடுத்த சபதம் முடிப்பேன்

இனி இவரது அடுத்த படத்தின் பெயர் பாராளுமன்ற நாயகன்

விஜயகாந்த் :
மச்சான பாத்தீங்களா

அடுத்த படமெடுக்க இருந்த சுதீஸை தேடுறார்மு.க.அழகிரி :
கலக்குவேன் கலக்குவேன்

டி.ஆர். :
போனால் போகட்டும் போடா

தேர்தல் என்ன கைவிட்டாலும் காதல் என்ன கை விடாது
அப்பிடின்னு சொல்லிட்டு அடுத்த படத்துக்கு ரெடிய்யாகிறார்


கார்த்திக் :
கல்லிலே கலைவண்ணம் கண்டார்

ராமதாஸ் :
மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழம் விக்க கிளம்பிட்டார்


கலைஞர் :
நன்றி சொல்ல உனக்கு

ஜெயலலிதா :
என்ன பாட்டு போடுறதுன்னு தெரியல ஆனா ராசியான
எண் 9 அத்தனதொகுதியும் கிடைச்சிருக்கு ஆச்சரியம் தானவைகோ :
போனால் போகட்டும் போடா

நான் அமெரிக்கா போறேன்னுங்கப.சிதம்பரம் :
நான் செத்து பொழைச்சவண்டா


நன்றி தமிழக மக்களே அடுத்த அடிக்கு நான் ரெடி நீங்க ரெடியா

Post Comment

ஹைக்கூ........

| May 15, 2009 | 12 comments |
ஹைக்கூ கவிதைகள்

முதல் முறை என்னுடய கவிதை பதிப்பில்

திருக்குறள்


என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....

அதிசயம்அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........

ஒவியன்சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


தனிமைஆயிரம்பேரோடு இருந்தாலும்
நீ இல்லாத நேரம் தனிமை.......

காகிதப்பூமரணமில்லா மலர்

காத்திருக்கிறேன்காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்கு
எச்ச அறிக்கைக்கு...


.
.
.

Post Comment

மறந்து போனவைகள்

| | 20 comments |
இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில்

நன்றி விகடன்


வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்பம்பரம்
பயாஸ்கோப்


கோலிக்குண்டுராஜ்தூத்

ரிங் ரிங்

பத்து பைசா

ஐந்து பைசாஇன்லேண்ட் லெட்டர்
கேசட் பிளேயர்சேவல் சண்டை

கோழிக்கூண்டு
விறகு அடுப்பு
கார்பன் பேப்பர்
சோடா பாட்டில்
ஓட்டுப்பெட்டிஆண்டென்னா
சிலேடுகுதிரை வண்டிPost Comment