மீண்டும் கடி ஜோக்ஸ் இந்தவாட்டி ஏழு கடிகள்

| April 27, 2009 | |
அது என்ன கோல்ட் சாம்பார்
இந்த சாம்பார்ல 24 காரட் போட்டுருக்கு அதான்

ஒரு பையன் கையிலே ஸ்கேலோட சாப்புடுறான் ஏன்?
ஏன்னா அவன் அளவோட சாப்புடுறானாம்.....

உட்க்கார முடியாத தரை எது?
புளியோ`தரை`

உங்களுக்கு சொந்த ஊர் எது?
அந்த அளவுக்கு எனக்கு வசதியில்லீங்க சொந்த வீடு தான் இருக்கு..

திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்
அப்போ திரும்பாதீங்க....

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்

மாப்பிள்ளை நல்ல பசையுள்ள கை
ஏன் என்ன பண்ணுறார்
போஸ்டர் ஒட்டுறார்


Post Comment

1 comments:

Trackback by இராகவன் நைஜிரியா April 27, 2009 at 10:19 PM said...

//உங்களுக்கு சொந்த ஊர் எது?
அந்த அளவுக்கு எனக்கு வசதியில்லீங்க சொந்த வீடு தான் இருக்கு..//

நீங்களும் நானும் மட்டும் சொல்ல முடியாதுங்க. அரசியல்வாதிகளைக் கேட்டுப் பாருங்க, அவங்க எத்தனை ஊர் வச்சு இருக்காங்கன்னு சொல்லுவாங்க..