கடி வைத்தியங்கள் பத்து

| April 16, 2009 | |
வைத்தியம்1


படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...

வைத்தியம்2முட்டையிட்டு குஞ்சு பொரிக்காத இனம் எது?
கணக்கு வாத்தியார் இனம்

வைத்தியம்3

ஒருவர் : அந்த டாக்டர் ராசியில்லாதவர்ன்னு சொன்னீங்க
மற்றவர்: ஆமா
ஒருவர் : நான் விசாரிச்சுட்டேன் அவருக்கு கடக ராசியாம்
மற்றவர்:??????????????

வைத்தியம்3ஆபரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்காதீங்கன்னு சொன்னேனே டாக்டர்
கேட்டீங்களா?
ஏன் என்னாச்சு?
அதுவும் டெட் ஆயிடுச்சு......

வைத்தியம்4ஒருவர் :ஒரு பத்து ரூபா கடனா குடுப்பா?
மற்றவர்: எங்கிட்ட சுத்தமா பணம் இல்லீங்க..
ஒருவர் : அழுக்கா இருந்தாலும் பரவாயில்லீங்க.....

வைத்தியம்5ஆசிரியர்:ஒரு மணி நேரமா கரடியா கத்துறேன் புரியலேங்கிறியே
மாணவன் : கரடி பாஷை எல்லாம் எனக்கு தெரியாது......

வைத்தியம்6ஹீரோயின்னுக்கு எதிர்ப்பதம் என்ன?
ஹீரோ
இல்ல ஹீரோ அவுட்

வைத்தியம்7


ஒருத்தி ; ஏண்டி உன் கணவர் அடிக்கடி சுகர் டப்பாவ திறந்து பாக்குறார்?

மற்றொருத்தி : டாக்டர் தான் அவர அடிக்கடி சுகர் இருக்கான்னு செக் பண்ண சொல்லி இருக்கார்

வைத்தியம்8வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது?
லைட் ஹவுஸ்

வைத்தியம்9

அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்

வைத்தியம்10

ஒருத்தர்:உன் பேரு சீனி வாசன் தானே ஏன் வாசன்னு மாத்திட்டே
மற்றவர்:டாக்டர் தான் என்ன சீனியே சேர்க்க கூடாதுன்னு சொல்லிருக்கார்

Post Comment

2 comments:

Trackback by Raju April 17, 2009 at 4:32 PM said...

\\வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது?
லைட் ஹவுஸ்\\

இதுதான் டாப்பு வஸந்த்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 18, 2009 at 12:18 AM said...

நன்றி தலைவா,,,,,,,